சில தினங்களுக்கு முன்பு நமது துறவி காசி யாத்திரை சென்றார். அங்குள்ள மூத்த துறவிகளைச் சந்தித்து அவர்களது அனுபவங்களைத் திரட்டுவதில் ஓர் அலாதி இன்பம் அவருக்கு. சுவாமி தியாகீஸ்வரானந்த புரி (கிருஷ்ணமூர்த்தி மகராஜ்) தமது ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றிக் கூறினார்:
இன்று நமது துறவிக்கு எதிர்பாராத ஓர் அதிர்ச்சி. நல்லவர் என்று நம்பிய ஒருவர் மோசம் செய்துவிட்டார். என்னையா ஏமாற்றினாய் என்ற எண்ணமே தனது அகங்காரத்திற்கு விழுந்த அடி என்று துறவி உணர்ந்தார்.
‘அந்த மனிதரை நீ சரியாக கணிக்காதது உன் குற்றம்' என்று துறவியின் மனது குத்திக் காட்டியது.