RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Welfare Activities

Loading...
குறைவான வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தாலும் தட்டிக் கொடுக்க ஆட்கள் இருந்தால் கற்றுக் கொள்ள நம் பிள்ளைகள் தயாராக இருக்கிறார்கள். கொஞ்சம் இங்கிலீஷ் தெரிந்த ஒரு சிறுவன் 10 பேருக்குப் பாடம் நடத்துகிறான் நமது டியூஷன் சென்டரில்..... திருத்துறைப்பூண்டி ஒரு சிறு கிராமத்தில்.


Children are ready to learn if there are people to motivate even if they have fewer facilities and opportunities. A boy who knows a little English is giving lessons to 10 children in our tuition center..... in a small village in Thiruthurapundi.
இன்றைய சேவை- 23.6.22- திருவாரூரில் ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் நடத்தும் பெண்கள் முன்னேற்றத்திற்கான தையல் பயிற்சி.
Today's Service- 23.6.22- Sewing Training for the welfare of women was conducted by Sri Ramakrishna Math, Thanjavur at Thiruvarur.
Tailoring Unit at Thiruvarur District on 23.06.2022
இன்றைய சேவை- 14.4.22- சித்திரை 1- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.

*நமது மடம் திருவாரூரில் ஸ்ரீ தர்ஷினி தையலகம் மூலமாக நடத்தும் பெண்களுக்கான தையல் பயிற்சியின் முதல் குழுவினர் 16 பேர் நேற்று தங்கள் பயிற்சியை நிறைவு செய்தனர். 

*அடுத்த பிரிவினர் 20 பேர் நேற்று புதிதாகப் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.

*திருத்துறைப்பூண்டியில் நடைபெற்று வரும் இலவச டியூஷன் சென்டர் மாணவக் கண்மணிகளைச் சந்தித்து வந்ததில் நமக்குப் பேரானந்தம்.
Tailoring Unit at Thiruvarur District on 14.04.2022
தமிழ் புத்தாண்டன்று,  திருநங்கைகளின் வாழ்வாதாரம் மேம்பட புதிய முயற்சியாகப் பசு வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்றது. இதில் திருநங்கையினர் 10 பேர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர் ராதிகா மைக்கேல் பேசுகையில்,  வாழ்க்கையில் உழைப்பின் அவசியம், அதனால் கிடைக்கும் அங்கீகாரம் குறித்து எடுத்துரைத்தார். அதற்குரிய போதிய வேலை வாய்ப்பு பயிற்சிகளாக தையல், ஓட்டுனர், கணினி பயிற்சிகள் உள்ளிட்டவைகளை வழங்கத் தயாராக உள்ளோம் என்றார். 

சத்யா என்ற திருநங்கை பேசுகையில், கொரோனா காலத்தில் நிவாரணம் பெற தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடம் எங்களுக்குச் சமமான அந்தஸ்து வழங்கியது எங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். இந்தப் புத்தாண்டில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் திருப்பார்வை எங்கள் மீது பட்டுள்ளது என்றார். 

அன்னையின் ஸ்ரீசாரதா தேவியின் அருளால் அவர்களது வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பது நமது பிரார்த்தனை.

கோமாதாவிற்குத் தீபாராதனை செய்தபோது அது மகிழ்ந்து சாணமிட்டது ஒரு நல்ல சகுனம். ரூ. 40,000 விலையுள்ள பசு மற்றும் கன்றினை தூத்துக்குடியைச் சேர்ந்த பக்தர் திரு. முத்துக்குமார் வழங்கினார்.

On the occasion of the Tamil New Year, a special event was held at Thanjavur, Sri Ramakrishna Math. This is a new initiative to offer cows to transgender people for their livelihood. It was attended by 10 transgender people. The cost of the cow is 40,000 rupees. This has been made possible by a devotee Sri Muthukumar, Tuticorin.

Dr. Radhika Michael, who participated in the program, assured job placement training to the beneficiaries.

Speaking on the occasion, Transgender Satya mentioned that the Ramakrishna Math not only provided us relief during the pandemic, but made us receive it with dignity which is a great recognition for us. 

It is our prayer that their lives will be improved by the grace of Ma Sri Sarada Devi.
தஞ்சை ஸ்ரீ பெருவுடையார், பிரகதீஸ்வரர் ஆலயத்தின் திருத்தேரோட்டம் இன்று பங்குனி 30 -ஆம் தேதி (13.4.22) நடைபெறுகிறது. அருள்மிகு கமலாம்பிகை சமேத ஸ்ரீ தியாகேஸ்வரர் எழுந்தருளியுள்ள தேரின் வடம் பிடித்துத் தொடக்கி வைக்கும் பாக்கியம் பகவான் தந்தருளினார். பக்தர்களுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் நீர்மோர் சேவை வழங்கப்படுகிறது.
Buttermilk Distribution at the Chariot Festival in Thanjavur - 13.04.2022
இன்றைய சேவை- 6.4.22 -மாணவ - மாணவிகளுக்குக் குடிநீர் சேவை - ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தஞ்சாவூர். 

Today's Service- 6.4.22- Drinking water service for students- Sri Ramakrishna Math, Thanjavur.
Drinking Water Service for Students - 06.04.2022
திருத்துறைப்பூண்டி, பெரிய சிங்களாந்தியில் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா இன்று 28.3.22 சிறப்பாக நடைபெற்று வருகிறது. பக்தர்களுக்கு நமது டியூசன் சென்டர் மாணவர்கள் வெயில் நேரத்தில் நீர், மோர் வழங்கப்பட்டது.
Service at Thiruthuraipoondi - Butter Milk Distribution 28.03.2022
இன்றைய சேவை- 25.2.22- வெள்ளிக்கிழமை
தஞ்சாவூரைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் அவரது துணைவியார் இருவரும் மாற்றுத்திறனாளிகள். கொரானா காலத்தில்  வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமப்பட்டுத் தவித்தவர்கள். அவர்களுக்கு இன்று நிதி உதவி வழங்கி ஊதுபத்தி மற்றும் சாம்பிராணிகளை விற்று வாழ்வாதாரத்தைப் பெருக்கிக்கொள்ள வகை செய்துள்ளது.
Today's Service- 25.2.22- Friday
Sri Ayappan and his wife are both differently abled persons. They lost their livelihood during the Corana period. Today they have been given financial assistance to sell incense and puja items and make a living.
இன்றைய சேவை- 8.2.22- செவ்வாய்
இன்று திருத்துறைப்பூண்டி பெரிய களப்பால் பகுதியில் ஸ்ரீராமர் மடத்தின் பூசாரி மணிகண்டன் அவர்களது மோசமான உடல்நிலை மற்றும் வறுமையின் காரணமாக அவரது குடும்பத்திற்கு அரிசி மளிகை பொருட்கள் மற்றும் உதவிதொகை வழங்கப்பட்டது.

Today's Service- 8.2.22- Tuesday
Sri Manikandan, the priest of the Sri Rama Madam in Periakalappal village in ​​Thiruthuraipoondi, was given rice, groceries for his family due to poverty and his ill health.
Service at Thiruthuraipoondi 05.02.2022

Free Tailoring Training

இன்றைய சேவை- 16.3.22- தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்து கிராம மையத்தில் தொடரும் தையல் பயிற்சி.

Today's service- 16.3.22- Continuing sewing training at Sri Ramakrishna Math Village Center, Thanjavur.
Free Tailoring Training - Village Centre 16.03.2022
இன்றைய சேவை- 12.2.22- சனிக்கிழமை- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்- கிராம மையத்தில் தொடர்ந்து நடைபெறும் தையல் பயிற்சி வகுப்புகள்.
Today's Service- 12.2.22- Saturday- Sri Ramakrishna Math, Thanjavur- Sewing training regular classes at the village center.
Free Tailoring Training - Village Centre 12.02.2022
இன்றைய சேவை- 5.2.22- கிராமப்புறப் பெண்களுக்குத் தையல் பயிற்சி வகுப்புகள்

Today's Service- 5.2.22- Sewing Training Classes for Rural Women
Free Tailoring Training - Village Centre 05.02.2022
இன்றைய சேவை- 29.1.22- சனிக்கிழமை- இலவச தையல் பயிற்சி

கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகள்.

Today's Service- 29.1.22- Saturday- Free Tailoring Training

Free sewing training classes for rural poor women.
Free Tailoring Training - Village Centre 29.01.2022
இன்றைய சேவை- 26.1.22- இலவச தையல் பயிற்சி

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிராமப்புறப் பெண்களை முன்னேற்றுவது ஒரு பெரிய சமுதாயக் கடமை. அதை நோக்கமாகக் கொண்டு கிராமப்புற ஏழை பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகளை இன்று ஆரம்பித்தோம்.

16 பெண்மணிகள் இதில் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளார்கள். திருமதி சம்பூர்ணம் இந்த மூன்று மாத வகுப்பிற்குப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Today's Service- 26.1.22- Free Tailoring Training

It is a social duty to support economically backward rural women. We started free sewing training classes today for rural women. 16 women have registered their names in this three-month class.
Free Tailoring Training Started on at Our Village Centre 26.01.2022

Free Tuition Centre

Free Tuition Centres - 14.04.2022
Public Service, 14.03.2022
Free Tuition Centre, 08.01.2022
Free Tuition Centre, 27.02.2022
Free Tuition Centre, 01.02.2022
Free Tuition Centre, 26.12.2021
திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள கிராமங்களில் நடைபெற்று வரும் நமது இலவச டியூஷன் சென்டர் குழந்தைகள் தாங்கள் கற்ற கல்வியை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். வீடியோவின் தரம் சற்று சுமாராக இருந்தாலும் குழந்தைகளின் தரம்🦾.

The children of our free tuition center in the villages near Thiruthuraipoondi share with us the learning they have learned.
In many parts of our villages, good things are happening like this only.  Our service is much needed in these places where the tuition center run by our math in the hamlet of Singalandi, where even have basic facilities are wanted. Look at how those students are developing themselves despite the situation.
நமது கிராமங்களில் பல இடங்களிலும் இது போன்ற நிலையில் பல நல்ல காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சிங்களாந்தி என்ற குக்கிராமத்தில் நமது மடம் நடத்தும் டியூஷன் சென்டரில் அடிப்படை வசதிகள்கூட இல்லாத இந்த இடங்களில் நமது சேவை மிகவும் தேவைப்படுகிறது. சூழ்நிலை இப்படி இருந்தாலும் அந்த மாணவர்கள் தங்களை எப்படி வளர்த்துக் கொள்கிறார்கள், பாருங்கள்.
இன்றைய சேவை- 24.3.22- வியாழன்

திருவாரூர் மாவட்டம். சமத்துவபுரத்தில் இலவச டியூஷன் சென்டர் மாணவ மாணவிகள் தங்களது படிப்பிற்குப் பிறகு மனவலிமைக்கான விவேகானந்த விட்டமின்களை உட் கொள்ளும் காட்சி இது.
Ramakrishna Math, Thanjavur - Today service- 06.01.22- Thursday
Swami Vivekananda wanted to strengthen the underprivileged women by self- support.
Watch this 1 minute video of Sridharshani tailoring unit in Thiruvarur making a training for living for 16 women arranged by our math.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் -இன்றைய சேவை- 06.01.22- புதன்கிழமை
வாய்ப்புகள் அதிகமில்லாத பெண்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி பொருளாதாரத்தில் பலப்படுத்த வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் விரும்பினார்.
அதன்படி திருவாரூரில் நமது மடம் ஸ்ரீதர்ஷனி தையலகம் மூலமாக 16 பெண்களுக்கு வாழ்வாதாரத்திற்கு வழி செய்து வருவதை இந்த ஒரு நிமிட வீடியோ பதிவில் பாருங்கள்.
Tailoring & Nursing Courses