RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

125th Anniversary  Swami Vivekananda's  Visit to Tamilnadu 

15.8.22- கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு விழா மற்றும் நகர ஊர்வலம்..... மக்களின் உற்சாகத்தை பாருங்கள்.

15.8.22- Inauguration of Swami Vivekananda statue at Kumbakonam and  procession..... See the excitement of the people.

All the patriotic Indians celebrated the 75th year of independence of India. We could celebrate the same by installing a 7 feet height bronze statue of Swami Vivekananda at the Porter Town Hall in Kumbakonam where Swamiji gave his lecture 'The Mission of Vedanta' on February 3, 4, 5, 1897.

Many Sadhus, devotees, and well-wishers prayed and wished for an installation of Swamiji over there. It is fulfilled after 125 years.

Ramakrishna Math, Thanjavur with the support of the Porter Town Hall conducted 3-day programs on 13, 14, and 15 August. Top officials in all government departments and almost 3500 youths participated in these programs. Various cultural and traditional martial arts were conducted during the three days.

Srimath Swami Gautamanandaji gave benediction online. 

Dharumapuram Aadheenam, 27th Gurumahasannithanam Sri-la-Sri Masillamani Desiga Gnanasambanda Paramacharya Swamigal.

Dr. Sakkottai G. Anbalagan presided over the meeting.

Srimath Swami Atmaghanananda unveiled the statue.

Special Guest: Hon'ble Justice G. R. Swaminathan, High court of Madras.

Installation of Swami Vivekananda Statue at the Porter Town Hall, Kumbakonam - 13.08.2022 to 15.08.2022
14 .8 .22, ஞாயிற்றுக்கிழமை. சுவாமி விவேகானந்தரின் சிலை திறப்பு விழாவின் இரண்டாம் தினம். காலை 140 மாணவ மாணவிகள் சுவாமிஜியின் வேடத்தில் வந்து கும்பகோணத்தை அலங்கரித்தார்கள். 

தருமை ஆதீனம் குரு மகா சன்னிதானம் அனைவரையும் ஆசீர்வதித்தார். கல்லூரி மாணவ மாணவிகள் டவுன் ஹாலுக்கு வந்து சுவாமிஜியின் ஆசீர்வாதம் பெற்றுச் சென்றனர். 

நாளை நிகழவிருக்கும் சுவாமிஜியின் சிலை திறப்பு விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
The Second day of the celebrations of Swami Vivekananda's statue in Kumbakonam - 14.08.2022
கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தரின் சிலை திறப்பு விழாவின் முதலாம் தின நிகழ்ச்சிகளை இரண்டு நிமிட வீடியோவில் கண்டு ரசியுங்கள்.

Watch the first day of the celebrations of Swami Vivekananda's statue in Kumbakonam in a two-minute video.
The first day of the celebrations of Swami Vivekananda's statue in Kumbakonam - 13.08.2022
கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தரின் சிலை திறப்பு விழாவின் முதலாம் தின நிகழ்ச்சிகளை இரண்டு நிமிட வீடியோவில் கண்டு ரசியுங்கள்.

Watch the first day of the celebrations of Swami Vivekananda's statue in Kumbakonam in a two-minute video.
வணக்கம். 15.08.2022 திங்கட்கிழமை அன்று மாலை 4 மணிக்கு கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. உங்கள் வருகைக்காக கும்பகோணம் டவுன் ஹால் தயாராக இருக்கிறது. வாருங்கள்,  வரவேற்கிறோம்.

On 15.08.2022, Monday at 4 pm, the inauguration ceremony of Swami Vivekananda statue will be held at Kumbakonam. The Porter Town Hall is ready for your visit. You are welcome.
வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் விவேகானந்தர் விஜயம் செய்த 125 ஆவது ஆண்டை முன்னிட்டு சிலை அமைக்கும் விழா ஆலோசனை கூட்டம் இன்று மாலை, 30.7.22, சட்டமன்ற உறுப்பினர் திரு அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

கும்பகோணம் தன்னார்வ அமைப்புகள், பள்ளி கல்லூரி சேவை அமைப்புகள், வணிகப் பெருமக்கள் மற்றும் ஆன்மீகச் சேவையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

விழாவை  ஆகஸ்ட் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 75 ஆவது சுதந்திர தின விழாவின் சிறப்பம்சங்களுடன் சிறப்பாக நடத்தி சுவாமிஜியை உற்சாகத்துடன் வரவேற்பதற்கு அனைவரும் தங்களாலான அனைத்தையும் செய்வதற்கு உறுதி மேற்கொண்டனர்.
Meeting for Swamiji Statue at Porter Town Hall on 30.07.2022
இன்றைய சேவை- 16.7.22- சனிக்கிழமை- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தஞ்சாவூர்.

சுவாமி விவேகானந்தர் 125 வருடங்களுக்கு முன்பு  கும்பகோணத்தில் உரையாற்றிய அதே இடத்தில் ரூபாய் 10 லட்சம் செலவில் அவருக்கு ஆளுயர வெண்கலச் சிலை ஒன்று வைக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி டவுன்ஹாலில் மாலை 4.30 முதல் 8.30 வரை நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.

15.8.22 அன்று பிற்பகல் ஊர்வலம், பாரம்பரிய நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், துறவிகள் மற்றும் அறிஞர்களின் சிறப்புரைகள், கோவிந்தபுரம் விட்டல்தாஸ் மகராஜின் திவ்ய நாம சங்கீர்த்தனம் ஆகியவை நடைபெறும்.

விரைவில் உங்களுக்கு அழைப்பிதழ் வந்து சேரும். அவசியம் கலந்து கொண்டு சுவாமிஜியின் அருளாற்றலைப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Consultative Meeting - 16.07.2022
இன்றைய சேவை- 02.07.22- ஆசிரியர்களுக்கான புத்துணர்வு கருத்தரங்கம், காஞ்சிபுரம், எஸ். எஸ்.கே.வி கல்விக் குழுமம்.

தலைப்பு: Goodness to Greatness- Four steps for Teachers

Today's Service- 02.07.22- Refresher Seminar for Teachers at Kanchipuram, SSKV Educational Group.

Topic: Goodness to Greatness- Four steps for Teachers
Special Program for School Teachers - 02.07.2022
சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125-வது ஆண்டை முன்னிட்டு கும்பகோணத்தில் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஒரு கட்டுரை போட்டியை ஸ்ரீராமகிருஷ்ண மடமும் சாரண சாரணியர் இயக்கமும் இணைந்து நடத்தின. 

இதில் 44 பள்ளிகளில் இருந்து 1225 மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவ- மாணவியர்களுக்கு கும்பகோணம் நகர மே. நி. பள்ளியில் கல்வி மாவட்ட அலுவலர் திரு சண்முகநாதன் அவர்கள் தலைமையில் பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளியின் தாளாளர் திரு வேலப்பன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

பல நிலைகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்குச் சான்றிதழ்கள், சுவாமி விவேகானந்தரின் ஷீல்டுகள், புத்தகங்கள்,  புகைப்படங்கள் முதலியன வழங்கப்பட்டன. அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Ramakrishna Math, Thanjavur, and the Bharath Scout and Guides Movement, Kumbakonam jointly organized an essay competition among schools at the education district level in Kumbakonam to mark the 125th anniversary of the return of Swami Vivekananda to our motherland. The competition was attended by 1225 students participated from 44 schools. The award ceremony was held at the Town High school, the District Education Officer appreciated our work. Certificates, Shields of Swamiji, books, photographs, etc. were given to the students selected in various stages. Certificates were awarded to all the students.
Essay competition among schools at the education district level in Kumbakonam - 04.05.2022
ஆசிரியர் பயிலரங்கத்தின் அவசியம் என்ன? 
‌இன்று மாணவன் குடித்துவிட்டு வகுப்பிற்கு வருவான்.
‌ஆசிரியைகளை அடிக்கவும் செய்வான்.
‌ஆசிரியர் சம்பளம் உயர்த்தப்பட்டிருக்கிறது; மரியாதை....? 
‌இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்குத் தைரியமும் உயர் நோக்கமும் தருவது அவசியம் அல்லவா?
‌அதற்காகவே இந்தப் பயிலரங்கம்!
As a part of your -long celebration of Swami Vivekananda's triumphal return to India, we had a meeting for primary class teachers on 24.04.22, Sunday. The purpose of this meeting is to motivate them by giving Swamiji's ideas to teachers so that they can impart the same to their students at a young age itself.
We organised the program at Tindivanam, and around 50 teachers participated in it. Speeches, Video shows, and exchange of experiences were the highlights of the program.
Special Program for Primary School Teachers - 24.04.22
சமுதாயத்தின் அஸ்தி வாரங்களான ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி- 27.2.22

பாரதப் பெருமையை உலகறியச் செய்த  சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125-ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களது ஆற்றலை மேம்படுத்தும் பயிலரங்கம் ஒன்றை நடத்தியது.

இன்றைய சூழலில் ஆசிரியர்கள், சிரமங்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி ஆசிரியர்கள் உரையாற்றினர். உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமம் யதீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியாம்பா ஆசிரியர்கள் மகத்தானவர்கள் என்பது குறித்து விளக்கினார்.

ஆசிரியர்களின் பொறுப்பும், சிறப்பும் குறித்து சுவாமி விமூர்த்தானந்தர் சிறப்புரை ஆற்றினார். உளுந்தூர்பேட்டை பகுதிகளில் உள்ள 47 பள்ளிகளைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் 150 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் சுவாமிஜியின் நூல்கள் வழங்கப்பட்டன.

நல்லாசிரியராகச் செயல்பட இனி பொறுப்பேற்போம் என்று அனைத்து ஆசிரியர்களும் உறுதி ஏற்றனர்.
ஸ்ரீராமகிருஷ்ண பக்தர் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர் திரு செந்தில் முருகன் மற்றும் செல்வி கலைவாணி ஆகிய இருவரும் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Special Program for Primary School Teachers- 27.2.22

On the occasion of the 125th anniversary of the return of Swami Vivekananda to India, Ramakrishna Math, Thanjavur conducted a workshop to enhance the skills of primary school teachers.

The teachers spoke about the difficulties and opportunities in today’s environment. Swami Vimurtananda spoke on the responsibility and excellence of teachers according to Swami Vivekananda. About 150 primary school teachers from 47 schools in the Ulundurpet area attended the event. Everyone was given Swamiji’s books.
Special Program for Primary School Teachers - 27.2.22
சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125-வது ஆண்டு விழா முன்னிட்டு பல்வேறு நலப்பணிகளை தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடம் தொடங்கியுள்ளது நீங்கள் அறிந்ததே.
நமது கிராம மையத்தில் இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும், குறுங்காட்டை வளர்க்கவும், சுத்தமான பிராண வாயுவைப் பெருக்கவும் செயல்பட்டு வருகிறோம். 12,000 சதுர அடியில் குளம் வெட்டப்படுகிறது. சுமார் 2 ஆயிரம் மரங்களை அங்கு வளர்க்கவும் திட்டமிட்டுள்ளோம்.

As you know, Sri Ramakrishna Math, Thanjavur has started various activities to mark the 125th anniversary of the triumphal return of Swami Vivekananda to our motherland.
We are working to conserve natural resources, improve groundwater, grow shrubs and create an oxygen hub. The 12,000-square-foot pond is being excavated in our village center.  We also plan to grow about 2,000 trees there.
20.02.2022 - Village Centre
125 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்தில் எழுச்சி உரை ஆற்றிய தினம், பிப்ரவரி 5, மாலை 5 மணி. தேர்தல் விதிமுறைகளின் படி, இந்தத் தினத்தில் கும்பகோணம் போர்டர் டவுன் ஹாலில் சுவாமி விவேகானந்தரின் சிலை வைப்பது சற்று காலம் தள்ளி நடக்க உள்ளது. 

டவுன் ஹாலில் அந்தத் தினத்தில் அதே நேரத்தில் எளிமையாக ஒரு விழா ஏற்பாடு ஆனது. சுமார் 600 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதற்கு முன்பு முரளி கபே வளாகத்தில் சுவாமி விவேகானந்தரின் திரு உருவ சிலை நிறுவப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.

125 years ago, on 5th of February at 5 p.m, 

Swami Vivekananda delivered his uprising speech in Kumbakonam. Due to the local body elections, restrictions are in place, hence the installation of Swami Vivekananda’s Statue, at the Porter Town Hall in Kumbakonam, will be scheduled at a later date. 

Though the installation was delayed, to mark the occasion a simple ceremony was convened at Town Hall, a drawing competition was arranged.  Around 600 students participated in the event and prizes were awarded to the winners.  Earlier, the statue of Swami Vivekananda was installed at the Murali Cafe premises and Prayers were conducted.
05.02.2022 - Kumbakonam
சுவாமி விவேகானந்தர் தஞ்சைக்கு விஜயம் செய்த 125-வது ஆண்டு விழா.

தஞ்சை ரயில்வே நிலையத்தில் விவேகானந்தர் விஜயம் குறித்த செப்பேடு மற்றும்  அவரது திருவுருவப்படத்தின் திறப்பு விழா இன்று 3.2 .22 நடந்தது. ஐந்தரை அடி உயரமும் ஆறரை அடி அகலமும் கொண்ட செப்பேடு பிரதான வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி கோட்டம் உதவி வணிக மேலாளர் சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் சுவாமிஜிக்கு புஷ்பாஞ்சலி செய்தனர் .
A Metallic Plaque at Thanjavur Railway Station - 03.02.2022
வணக்கம்.

பிப்ரவரி 3-ஆம் தேதி கும்பகோணத்தில் போர்ட்டர் டவுன்ஹாலில் சுவாமி விவேகானந்தருக்குச் சிலை வைப்பதற்கான எல்லா முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

ஆனால் அதில் திடீரென்று ஒரு தடங்கல்..... தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடைமுறை விதிகளைப் பின்பற்றும் விதமாக சிலை திறப்பு விழா நிகழ்ச்சி மாற்றி அமைக்கப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு சிலை திறப்பு விழா தொடர்பாக பின்னர் தேதி அறிவிக்கப்படும்.

வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி டவுன்ஹாலில் சுவாமி விவேகானந்தர் விஜயம் செய்ததை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி மட்டும் நடத்திட முடிவு செய்துள்ளோம்.

சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125-வது ஆண்டு விழாக் குழுவினர்.

Namaste.

The 125th anniversary of Swami Vivekananda's triumphal return to the motherland (1897-2022).

Effort is being made to erect a statue of Swami Vivekananda at Porter Town Hall in Kumbakonam on February 3.

But there is a sudden interruption..... As the local body elections are being declared in Tamil Nadu, the statue unveiling ceremony will be rescheduled to follow the election procedure. The date will be announced later in connection with the statue unveiling ceremony after the election.
17. 1.22 திங்கட்கிழமை

125 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்தில் எங்கு சிம்ம கர்ஜனை புரிந்தாரோ அந்த போர்டர் டவுன்ஹாலில் அவருக்குத் திருவுருவச் சிலையை அமைப்பதற்காக இன்று பூமி பூஜை நடத்தப்பட்டது. 

இந்த பூமி பூஜையில்l கோவிந்தபுரம் விட்டல் தாஸ் மகராஜும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் திரு க. அன்பழகன் அவர்கள் மற்றும் பக்தர்களும் அன்பர்களும் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

போர்டர் டவுன் ஹாலின் முன்பு சுவாமிஜியின் சிலை வைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தின் படத்தை இங்கு காணலாம்.

17.1.22 Monday

Bhoomi Puja was held today to erect a statue of Swami Vivekananda at the Porter Town Hall where Kumbakonam saw the spiritual lion roar 125 years ago.

Govindapuram Sri Vittal Das Maharaj and Kumbakonam M.L.A, Sri K.Anbazhagan were the chief guests. About 100 devotees attended the function. You can see the sketch of statue of Swamiji with mandapam.
Bhoomi Puja on 17.01.2022 - the Porter Town Hall
08.01.2022- சனிக்கிழமை

சுவாமி விவேகானந்தர் வலங்கைமான் கோவிந்த செட்டியார் என்ற ஜோசியக்காரரைச் சந்தித்து ஆறுதல் பெற்றார். அதற்கு பிரதியுபகாரமாக சுவாமிஜி செட்டியாரை ஆலிங்கனம் செய்து ஆன்மீகப் பாதையில் மேல் நிலைக்கு உயர்த்தினார். அதன் அற்புத விளைவாக கோவிந்த செட்டியார் உயிர் துறக்கும் முன்பு ஸ்ரீராமரின் தரிசனம் பெற்றார்.

இன்று கோவிந்த செட்டியார் வாழ்ந்த இல்லத்திற்கு தஞ்சையில் இருந்தும் குடந்தையில் இருந்தும் பல பக்தர்கள் சென்றோம். செட்டியார் வழிவந்த திரு புருஷோத்தமன் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் உள்ளுர் பிரமுகர்கள் முன்னிலையில் சுவாமி விவேகானந்தருக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கோவிந்த செட்டியாரின் பரம்பரையினர் அனைவரும் மண்டபம் அமைத்துச் சிலை வைப்பதற்குச் சம்மதித்தனர். இதற்கு சுமார் 5 லட்சம் செலவாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

எந்த இல்லத்தில் சுமார் 130 வருடங்களுக்கு முன்பு சுவாமிஜி உணவருந்தினாரோ, அதே இடத்தில் எங்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது. எந்த இடத்தில் சுவாமிஜி அமர்ந்து செட்டியாருடன் உரையாடினாரோ, அதே இடத்தில் நாங்களும் அமர குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருள்பாலித்தார்.

அதற்கு முன்பு கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் போர்ட்டர் டவுன் ஹால் வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை அமைப்பு பணி விவரங்களும்,

சுவாமிஜி கும்பகோணத்தில்  விஜயம் செய்ததாகக் கூறப்படும் பள்ளிகளில் சிலைகளை நிறுவுதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

அனைத்து நிகழ்ச்சிகளும் நல்லபடி நடந்திட குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பிரார்த்திப்போம்.
Swamiji 125th Celebration Meeting on 08.01.2022
Statues will be erected at Kumbakonam and Valangaiman. 31.12.2021