RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Relief Work

Loading...

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பூந்துருத்தியில் இரண்டு தினங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 12 குடிசைகள் சாம்பலாயின. அவர்களுக்கு உடனடி நிவாரணமாகப் போர்வைகள், குழந்தைகளுக்கான ஆடைகளும் தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திலிருந்து வழங்குவதற்கு 27.8.21 அன்று இறைவன் அருள் பாலித்தார்.

Covid-19 Pandemic Relief Service for Folk and Temples Oriented Artists

    Sri Ramakrishna Math, Thanjavur has started covid-19 pandemic relief service on 08.05.21. We distribute a kit of 30 groceries to each family. Each kit is worth Rs. 1000/-. Beneficiaries are 1800 poor folk and temples oriented artists from Thanjavur, Thiruvarur, Mayiladuthurai, Nagapattinam and Ariyalur districts.

    The relief operation was inaugurated by Thanjavur district collector. In a phased manner distribution is being done. Along with groceries we distribute a laminated picture of the Holy Trio and a book of Swamiji to all. ZOHO corporation has supported financially to this great service.

    கோவிட் 19 இரண்டாவது அலையினால் மக்கள் வாழ்வாதாரம் இன்றித் தவிக்கிறார்கள். ஏழைகள், தொழிலாளிகள், கலைஞர்கள் என்று பலரும் சரியான உணவு இன்றியும் அவதிப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் சிரமங்களைச் சற்றேனும் குறைக்க முடியுமா?

    இந்த நோக்கத்திற்காக ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் மேற்கொண்டுள்ள நாட்டுப்புற மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கும் சேவையை 8.5.21, சனிக்கிழமையன்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் திரு. எம். கோவிந்த ராவ் அவர்கள்  தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 1800 கலைஞர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1000/ மதிப்புள்ள 30 விதமான மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதற்கான மொத்த செலவு ரூ. 18 லட்சம். ZOHO நிறுவனம் இதற்கான முழுத்தொகையையும் வழங்கியுள்ளது.

Thanjavur Phase - I
Ariyalur
Mayiladuthurai, Thirubhuvanam
Thanjavur Phase - II
Thiruvaur
Nagapattinam, Thiruvarur

Fire Accident - Nagappattinam

நாகப்பட்டினம் காட்டுநாயக்கன் தெருவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி பெரிய தீ விபத்து நடந்தது. இதில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்தன. குறிப்பாக, அதில் 21 வீடுகள் தரைமட்டம் ஆனது. அந்த வீடுகளுக்கு NDSO குழுக்களுடன் இணைந்து இன்று சில நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. 


அங்கு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வேண்டிய புதிய ஆடைகளை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் வழங்கியது.

Nivar Cyclone Relief Work

    முருகப்பெருமானை, தங்களது செல்ல மகளான வள்ளிக்கு மணமுடித்து அவரை மருமகனாக்கிக் கொண்டது நரிக்குறவர் இனம்.  

    அப்படிப்பட்ட இனத்து மக்கள் தஞ்சாவூர் அருகில் புதுக்குடி கிராமப் பகுதியில் வசித்து வருகின்றனர். அந்தக் கிராமத்திலுள்ள 75 குடும்பங்களுக்கு 06.12.20 அன்று ரூபாய் ஒரு லட்சம் பெருமானமுள்ள மழை நிவாரண பொருள்களை தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடம் வழங்கியது. 
    பாதிக்கப்பட்ட குடிசைகளுள் மழைநீர் புகாமல் இருக்க வசதியாக 50 குடும்பங்களுக்கு தார்பாலின் பாய்களும் வழங்கப்பட்டன. மீதமுள்ள தலா ரூபாய் 600/- மதிப்பில் மளிகை பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

Pudukkudi - Thanjavur

Alangudi - Thalaignayaru, Mannarkudi, Yeripurakkarai - Adhirampattinam

Melanagai, Naluvathapathy, Umbalachry - Vetharanyam

Pudukkudi, Thanjavur
Nivar Relief - 2020 - Phase - I
Nivar Relief - 2020 - Phase - II