RURAL CENTRE
மூன்று நிமிட ஒரு வீடியோவில் ஓர் ஆனந்தக் காட்சி
பச்சைப் பசேல் என்ற பூமித்தாயின் மத்தியில், காவிரி பொங்கிப் பாயும் கரையில், புன்னைநல்லூர் மாரியம்மன் அருளில் ஸ்ரீராமகிருஷ்ண மடம், கிராம மையம், தஞ்சாவூர் அமைந்துள்ளது.
வாருங்கள் நண்பர்களே,
• ஸ்ரீராமகிருஷ்ணர் கோவில்
• 60 வகையான 2000 மரங்கள் நடப்பட்டுள்ள ஸ்ரீ சாரதா வனம்
• சுவாமி விவேகானந்தர் சிறுவர் பூங்கா
• ஸ்ரீ சாரதாம்மா குளியல் படித்துறை ஆகியவற்றைக் காண்பதற்கு இந்த 3 நிமிட வீடியோவை கிளிக் செய்யவும்.
பள்ளிக்குச் சென்று வீடு திரும்பும் முன்பு நமது கிராமத்து மையத்திற்கு வரும் குழந்தைகள் பலர். அந்தச் சமயம் அவர்கள் பஜன், தீபாராதனை மற்றும் ஆனந்தமான விளையாட்டுகளில் கலந்து கொண்டு களித்து வருகிறார்கள். நீங்களும் அந்த இன்பத்தைக் கண்டு அனுபவியுங்கள்.
தினமணியில் வெளியான ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சாரதா வனம் பற்றிய கட்டுரை
Sri Sarada Vanam
21.06.2021 - உலக யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் கிராமப்புற மையத்தில் சிறிய அளவில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
21.04.2021_ஸ்ரீராம நவமியைக் குழந்தைகளுடன் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் கிராமப்புற மையத்தில் கொண்டாடப்பட்டது. இந்திராம்மா ஸ்ரீராமர் பற்றிய கதைகளையும் ராம நாம சங்கீர்த்தனமும் கூற குழந்தைகள் ஸ்ரீராமரின் வானரக் கூட்டங்களாக களித்தனர்.