Loading...
இன்றைய சேவை- 16.7.22- சனிக்கிழமை- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தஞ்சாவூர்.
பெற்றோரைப் போற்றி வணங்கும் வகையில் கஞ்சனூர், சுவாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் மாணவ மாணவிகள் தங்களது தாய் தந்தையருக்குப் பாத பூஜை செய்து சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுவாமி விமூர்த்தானந்தர், பெற்றோர்களின் கடமை, குழந்தைகள் -பெற்றோர் இணக்கமான உறவு, பெற்றோர் குழந்தைகளை எப்படி நடத்தினால் அவர்கள் கடைசி வரை சிறந்த பிள்ளைகளாக விளங்குவார்கள் என்பது பற்றி உரை நிகழ்த்தினார்.
Today in Tamil Nadu, the teaching community and parents are baffled by the plight of the rude behavior of students in many government schools. In order to rectify the situation at an early age, Mathru puja was held at Thirunageswaram, National Vidyalaya Nursery and Primary School on behalf of our Math on Wednesday 4.5.22 morning. Around 80 children were blessed by touching their mother's feet and doing puja which caused joy and respect in both. We performed this type of program with the hope that respecting mothers will inculcate family values.
இன்று அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவிகள் அடிக்கும் கூத்தினைக் கண்டு ஆசிரிய சமூகமும் பெற்றோர்களும் செய்வதறியாது திகைக்கிறார்கள்.
பிள்ளைகள் சிறு வயதிலேயே தாய் தந்தையரை மதிக்காத குற்றம்தான் இது போன்ற பிரச்னைகளின் மூலம். அந்தக் குறையை நீக்கும் வகையில் தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் திருநாகேஸ்வரம் நேஷனல் வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் அன்னையர்களுக்கான பாத பூஜை 4.5.22 புதன்கிழமை அன்று நடந்தது.
அன்னையின் பாதம் தொட்டு பூஜை செய்து குழந்தைகள் ஆசி பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது பெற்றோர்களும் மாணவ-மாணவிகளும் கண் கலங்கியபடி பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொண்டதைக் காண முடிந்தது.
Spoken English
இன்று, 25.2.22 Spoken English Class நமது மடத்தில் ஆரம்பமானது.
Today, 25.2.22 Spoken English Class begins at our math.
இன்றைய சேவை- 13.2.22- ஞாயிறு- சிவாஜி நகர் நகர மையத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நடன வகுப்புகள்.
Today's Service- 13.2.22- Sunday- Shivaji Nagar City Center Dance classes for children started today.
உங்கள் உடல்நலம், உங்கள் கையில்
உங்கள் உடல்நலம், உங்கள் கையில்
இன்றைய சேவை- 13.2.22- ஞாயிறு- கிராம மையத்தில் தொடர்ந்து நடைபெறும் பண்புப் பயிற்சி வகுப்புகள்.
Today's Service- 13.2.22- Sunday- Village center moral and yoga classes for children.
தஞ்சாவூர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சேவை- 4.1.22, செவ்வாய்க்கிழமை.
தஞ்சாவூர், பூண்டி புஷ்பம் கல்லூரியின் ஆறு நாட்கள் நடந்த NSS முகாமின் நிறைவு கூட்டம் நமது கிராம மையத்தில் நடந்தது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் கிராம முன்னேற்ற சேவையிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளிலும் தங்களை அர்ப்பணிப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.
நன்கு பணியாற்றிய அனைத்துப் பேராசிரியர்களுக்கும், 100 மாணவ மாணவிகளுக்கும் தனித் தனியாகவும் குழுவாகவும் முன்னேறுவதற்காக விவேகானந்த விட்டமின்கள் அடங்கிய நூல்கள் வழங்கப்பட்டன.