கேமரா கோணத்தை மாற்று!
- சுவாமி விமூர்த்தானந்தர்
கேமரா கோணத்தை மாற்று!
நமது சாது இன்று காசியிலுள்ள தில்பாண்டேஸ்வரர் கோவிலுக்குச் சென்றார். தரிசனத்திற்குப் பிறகு தியானிக்க அமர்ந்தார்.
பயணக்களைப்பால் அவரால் தியானிக்க முடியவில்லை. தெய்வத்தின் உருவம் வராமல் மனதில் கண்டதெல்லாம் வந்தன.
கண்ணைத் திறந்து கவனித்தார். அங்கு ஒரு பெண் ஸ்மார்ட் ஃபோனில் திலபாண்டீஸ்வர சிவனைப் புகைப்படமெடுக்க முயன்று கொண்டிருந்தாள். ஆனால் சிவன் வரவில்லை. அவள் ஏதேதோ செய்து பார்த்தாள்.
போனில் சிவபெருமானின் திருவுருவம் வராமல் அவளது உருவமே வந்தது. துறவி அவளிடம் கேமராவைத் திசை திருப்பச் சொன்னதும் அதில் சிவபெருமான் காட்சி தந்தார்.
துறவிக்கு உடனே புரிந்தது, தன்முனைப்பு உள்ளவரை விழிப்புணர்வு இல்லை என்று. ஜாக்கிரதைதான் விழிப்புணர்வு. அது இல்லை என்றால் "ஜாக்ரத்" அவஸ்தையும் "ஸ்வப்ன"மாகிவிடும்.
சிவபெருமானின் திருவுருவம் தன்நெஞ்சில் உதிப்பதற்காகத் துறவி பிரார்த்தனை செய்ய மீண்டும் அமர்ந்தார். கவனச் சிதறலிலிருந்து மீண்டு வந்தார்.
சுவாமி விமூர்த்தானந்தர்
28.10.2022,
வெள்ளிக்கிழமை,
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,