வலதுக்கும் இடதுக்கும் வேலை இப்படி இருந்தால் வளர்ச்சிதான்!
- சுவாமி விமூர்த்தானந்தர்
வலதுக்கும் இடதுக்கும் வேலை இப்படி இருந்தால் வளர்ச்சிதான்!
தவத்திரு சுவாமி ரங்கநாதானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் -ராமகிருஷ்ண மிஷனின் தலைவராக இருந்த காலம்.
மிஷனின் பொதுச் செயலர் சுவாமி ஒருமுறை தலைவர் சுவாமிகளிடம் வந்து உரையாடினார்.
செயலர்: மகராஜ், பக்தர்களும் நலம்விரும்பிகளும் நமது மடங்களுக்காக நிறைய பணத்தை வழங்குகிறார்கள். சொத்துக்களும் பல வருகின்றன. அவற்றை ஏற்பதா? தவிர்ப்பதா? என்ன செய்யலாம் என்று கூறுங்கள்.
சுவாமி ரங்கநாதானந்தர்: நல்லதுதானே மகராஜ். மக்கள் நம்மை நம்பி நிதி தருகிறார்கள் என்றால் அவர்கள் நம் அமைப்பை, நம் செயல்பாட்டை நம்புகிறார்கள் என்று அர்த்தம்.
ஆகவே வரும் நல்ல நிதியை வலது கையில் வாங்கி, அதை இடது கையினால் மக்கள் பணிக்காகக் கொடுத்து விடுங்கள்.
இதன் மூலமாக உங்களது இரண்டு கரங்களும் சுறுசுறுப்பாகவும் சுத்தமாகவும் இருக்கும்.
சுவாமி விமூர்த்தானந்தர்
01.11.2022,
செவ்வாய்க்கிழமை,
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,