பதில்: தம்பி, உன் கேள்வி வாயால் கேட்பதை விட காதால் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. மாதா - பிதா - கூகுள் - தெய்வம் என்ற வரிசையில் நீ யோசிக்கிறாயோ? குருவிற்குப் பதிலாக கூகுளைப் போடுகிறாய், அப்படித்தானே?
நீ வளர்ந்தவுடன் தாய் தந்தையரை வேண்டாம் என்று ஒதுக்கினால் மேற்கொண்டு நீ வளர ம...