ஒருவருக்கு விடாமல் ஜபம் செய்ய வேண்டும் என்ற ஆசை. ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் மனது அடங்க மாட்டேன் என்கிறது. தன்னால் முடியாததை வெளி உதவியுடன் செய்து கொள்வது என்று தீர்மானித்தார்.
அதற்காக ராமகிருஷ்ண மடத்தின் பொதுத் தலைவராக இருந்த தவத்திரு சுவாமி பூதேஷானந்த மகராஜிடம் சென்று ஆலோசனை கேட்டார்: ...