கேள்வி 5: சுவாமிஜி, விடிந்ததும் எழுந்து படிப்பதால் என்ன வந்து விடும்?
கேள்வி 5: சுவாமிஜி, விடிந்ததும் எழுந்து படிப்பதால் என்ன வந்து விடும்?
விடிந்ததும் படித்தால் உன் வாழ்க்கை விடியும்; சோம்பல் மடியும்; தெளிந்த அறிவு கூறுவதைக் கேட்டு உன் மனம் உனக்கு வசப்படும்; அந்தச் சுறுசுறுப்பான மனம் கூறும் கட்டளையைக் கேட்டு உடல் அதற்கு அடிபணியும்.
தம்பி உனக்கு தெரியுமா நீ முப்படைகளுக்கு தலைவன் என்று, ஆமா நான் சொல்வதை நம்பு. உனக்குள்ள உடல், மனம், புத்தி ஆகிய முப்படைகளுக்கும் நீயே ராஜா ஆகி விடுவாய்.
கேள்வி 6: எப்போது பார்த்தாலும் வீட்டில் அப்பா அம்மா நல்லா படி, நல்லா படி என்று ஒரே உபதேசம்தான். பள்ளியிலும் அதே பல்லவிதான். நான் ஏன் பெரியவர்கள் கூறும் வாழ்க்கையினை வாழ வேண்டும்? சாதாரண வாழ்க்கை வாழ்ந்தால் என்னவாகிவிடும்?
Ordinary -ஆடுனரி என்று கூறுவதை ஆடு + நரி என்று பிரிக்கலாம் அல்லவா?
மாணவனே, நீ ஒரு மனிதன். நீ ஏன் ஆடு மற்றும் நரியின் வாழ்க்கையை வாழ விரும்புகிறாய்? ஆடு மந்தமானது, யார் வேண்டுமானாலும் அதனை அடக்கி விடலாம். போர்க் குணம் இல்லாத அடிமையாகிவிடும் சாதுவான பிராணி.
நரியோ, தனக்குள்ள நல்ல திறமைகளை மறந்து தன் தீய தன்மைகளை மட்டும் நம்பி கண்டபடி முயற்சிக்கிறது.
ஆடும் நரியும் அவ்வாறு இருக்க, நீ ஏன் ஆடுனரி வாழ்க்கையை வாழ்வதற்கு வழி கேட்கிறாய்?
ஆடுனரி அதாவது சாதாரணமானது என்பதைக் கூட இப்படி பிரித்துப் பார்க்கலாம். சதா + ரணமானது= சாதாரணமானது.
சதா ரணம் என்றால் எப்போதும் வலி, எரிச்சல், நோய் என்று பொருள். அப்படிப்பட்ட வாழ்க்கை உனக்குத் தேவை இல்லையே, தம்பி!
கேள்வி 7: பள்ளியில் 'படி, படி:' என்கிறார்கள். வீட்டிலோ 'ஒழுங்கா இரு' என்கிறார்கள். இரண்டில் நான் எதைக் கடைப்பிடிப்பது?
மாணவியே, பள்ளிப் பாடங்களைப் படிப்பதில் ஒழுங்கைக் கடைப்பிடி. ஒழுங்காக வாழ்ந்தவர்களின் வாழ்க்கையைப் படி.
இதனைக் கேட்க
சுவாமி விமூர்த்தானந்தர்
18 ஜூலை, 2023
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்