ராகம்: ஸ்ரீரஞ்சனி
தாளம்: ஆதி
இயற்றியவர்: டி. பட்டம்மாள்
பல்லவி
நிம்மதி பெற வேண்டும் ஸ்ரீ சாரதே
நீ தருவாய் வருவாய் விரைவாய்!
அனுபல்லவி
அம்மணியே உன்னை அண்டி வந்த என்னை
கண்மணி போலவே காத்தருள்வாய் — அம்மா
சரணம்
எம்முறையும் நினது செவி புகவில்லையோ
ஏனிந்த வன்மம் நீ கொண்ட மௌனம்
இம்முறை ஒரு தரம் இரங்க...