ராகம்: ஆனந்த பைரவி
தாளம்: ஆதி
இயற்றியவர்: கோவை ஸ்ரீனிவாசன்
பல்லவி
ஆனந்த நடம் ஆடினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
அனுபல்லவி
ஞானாநந்தமான மோன முகம் மலர
தேனாறு நிகரான கானாமுதம் பொழிய
(ஆனந்த நடம் ஆடினார்...)
சரணம்
பாகவதம் பக்தன் பகவான் ஒன்றென
பாவ சமாதியில் பல முறை பகன்று
பால கோபாலனோ நீலகண்டனோ என
தாளம் தவராத தாமரை பதம் வைத்து
(ஆனந்த நடம் ஆடினார்...)