சிந்தனைச் சேவை - 21

09.06.21 03:47 PM - By thanjavur

சிந்தனைச் சேவை - 21

கொரோனா காலத்தில் ஒவ்வொருவரும் இந்தப் பிரார்த்தனையை தினமும் செய்தால் நமது பிரச்னைகள் விரைவில் விலகி விடும். சிரமப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்கும்போது இந்தப் பிரார்த்தனையை வாசித்த பிறகு பொருள்களை தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடம் வழங்கி வருகிறது.

Holy Trinity

எங்களை என்றும் காக்கும் இறைவா.

 

இந்தக் கொரோனா காலத்தில் எங்களது சிரமத்தை நாங்கள் சொல்லித்தான் நீ அறிய வேண்டுமோ?

 

உடலாலும், மனதாலும், பணமின்றியும், நோயாலும், நோய் வந்துவிடுமோ என்ற பயத்தாலும் நாங்கள் படும் துன்பங்களுக்கு அளவே இல்லை.

 

எங்களது எல்லா துன்பங்களையும் விரைவில் நீக்கிவிடு தெய்வமே.

 

எங்கள் தேவைக்குப் போதுமான செல்வத்தை வழங்கிடு இறைவா.

வரும் சங்கடங்களைச் சமாளிக்க சக்தியையும் தைரியத்தையும் தந்திடு.

 

இந்த கொரோனா காலத்தில் நாங்கள் தொடர்ச்சியாக ஒரே மாதிரியாக வாழ்வதால் எங்கள் மனம் சலிப்படையாமலும் சோர்வடையாமலும் இருக்க தெய்வமே, எங்களுக்குப் புதிய நம்பிக்கை என்றும் தந்திடு.

 

எங்கள் குடும்பத்திற்கோ,  எங்கள் உறவினர்களுக்கோ, எங்கள் சமுதாயத்திற்கோ இந்த கொரோனா தொற்று வராமல் காத்திடு கருணையுள்ள கடவுளே ஸ்ரீ ராமகிருஷ்ணா!

 

வலிமையை வலிந்துரைத்த விவேகானந்தரே! எங்களது உடல், நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்க அருளுங்கள்.

 

எங்களது மனம் உற்சாகமாக இருக்க உதவுங்கள்.

எங்களது அறிவில் தொய்வு இல்லாமல் உயர்ந்த உற்சாக எண்ணங்களை அதில் விதைத்திடுங்கள் விவேகானந்தரே!

 

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரே!

வருங்காலத்தைப் பற்றிய புது நம்பிக்கைகளையும் புது உற்சாகத்தையும் ஆர்வத்தையும் நல்ல வாய்ப்புகளையும் எங்களுக்கு நல்கிடுங்கள்.

அன்பர்களே! பக்தர்களே!


இன்று உங்களுக்கு கொரோனா நிவாரணமாக வழங்கப்படுவது மளிகைப் பொருள் மட்டுமல்ல, அவை பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அருளாக எண்ணி ஏற்றுக்கொள்ளுங்கள்.


இது பொருளல்ல, அருள். நிச்சயம் இந்த அருள் நமது வாழ்க்கையில் இருக்கும் இருளை விரைவில்  மாய்த்து விடுமென்று வேண்டிக்கொள்வோம்.

சுவாமி விமூர்த்தானந்தர்

09 ஜூன், 2021

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்


thanjavur