சுவாமி விவேகானந்தர் என்பவர் யார்? சுருக்கமாகச் சொல்லுங்கள். - செல்வி ரேவதி, திருச்சி.
பதில்: விவேகானந்தரைப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னாலும் நன்றாகவே இருக்கும்.
சுயநலத்தால் பலரும் தங்களது மனதையும் மகிழ்ச்சியையும் சுருக்கிக் கொள்கின்றனர். ஆயுளும் ஆனந்தமுமற்ற அப்படிப்பட்ட சுருக்கமான, இறுக்கமான வாழ்க்கைமுறையிலிருந்து விடுபட்டு, அருமையாக வாழும் முறையைக் கற்றுத் தந்தவர் சுவாமி விவேகானந்தர்.
'விரிவே வாழ்வு; சுருக்கமே மரணம்' என்று முழங்கியவர் விவேகானந்தர்.
இந்த நான்கு வார்த்தைகளை நீங்கள் கவலையாக இருக்கும்போது உச்சரித்துப் பாருங்கள், உங்கள் மனம் விரியும். மகிழ்ச்சியாக இருக்கும்போது இவற்றை உச்சரித்தாலோ மலினங்கள் சுருங்கிச் சாம்பலாகும்.
சுருக்கமாக, விவேகானந்தரின் சுயநலமற்ற அன்பை நேசி.
ஆழமான அவரது கருத்துகளை வாசி.
அக்கறையுடன் அவற்றைச் செயலாக்க யோசி.
அதை நீ செய்தால், வாசிக்கப்படும் உன் பெயர் வரலாற்றில்.
அதற்கான வாழ்த்துகள் இப்போதே.
சுவாமி விமூர்த்தானந்தர்
03 பிப்ரவரி, 2021
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்