சிந்தனைச் சேவை - 26

10.11.21 07:49 PM - By thanjavur

சிந்தனைச் சேவை - 26

கேள்வி: சிலரை நம்புகிறோம். வேறு சிலரை நம்ப முடியவில்லை, ஏன்? பொதுவாக, மக்களிடத்தில் நாம் எந்த மனநிலையில் இருந்து பழக வேண்டும்?

- திருமதி. சுதா, புதுக்கோட்டை

கவிதையில் பதில்:

                                

உலகில் தீயவர்களுண்டு. ஆதலால்....,

எந்தப் புற்றில் எந்தப் பாம்போ என்று விழிப்போடிரு!


நல்லவர்களும் நிரம்ப உண்டு.

எந்தச் சிப்பியில் எந்த முத்தோ என்று தேடு!

தேவை தேடல் மட்டுமே,


தெய்வீக விழிப்புடன் மனிதனிடம் பழகு,

ஆனந்தம் உன் வசப்படும்!

அசட்டையாகப் பழகினால்,

அல்லாடுவாய் பாம்புகளிடம்!

சுவாமி விமூர்த்தானந்தர்

10 நவம்பர், 2021

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur