சிந்தனைச் சேவை - 24

06.11.21 05:28 PM - By thanjavur

சிந்தனைச் சேவை - 24

கேள்வி: ஆறுதலான வார்த்தைகள் கஷ்டப்படுபவர்களுக்கு நன்மை செய்யுமா?

- திரு கார்த்திகேயன், கோயம்புத்தூர்.

பதில்: வார்த்தைகளினால் உள்ளங்களைக் குத்தவும் முடியும்;  சிதைந்துவிட்ட உறவுமுறைகளைத் தைக்கவும் முடியும். முதுகுவலியினால் தவித்த ஓர் இளந்தாயின் துணிவைத் தூண்டிவிட்ட கவிதையைக் கேளுங்கள்.

பெண்ணே! 

வாழ்க்கையில் நீ

ஒரு வீராங்கனை!

வலிகள்கூட உனக்குப் 

பின்னேதான் வந்து மிரட்டுகின்றன.

பார்,

உனக்கு வயிற்றுவலி வரவில்லை.

முதுகுவலிதானே வந்துள்ளது!

உடல் வலுவைக் கூட்டு;

உணவுநெறி கடைப்பிடி;

புறமுதுகிடும்

உன் முதுகுவலி!

சுவாமி விமூர்த்தானந்தர்

06 நவம்பர், 2021

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur