RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

சிந்தனைச் சேவை - 10

04.02.21 07:25 AM By thanjavur

சிந்தனைச் சேவை - 10

எனக்கு நண்பர்களே இல்லை. என்னை எல்லோரும் நேசிக்க,  விவேகானந்தரின் சிந்தனைகள் எனக்கு எப்படி உதவும்?  - ஏ. பரமேஷ்வர், விருதுநகர்.

பதில்: விவேகானந்தரின் கருத்துகளின் அடிப்படையில், எல்லோரும் ஒருவரை நேசிப்பதற்கு அவருக்கு வேண்டியவை மூன்று:

 

1. பிறர் துன்பம் கண்டு உதவும் அன்பான மனம்,

2. தெளிவாகச் சிந்திக்கும் அசலான, ஆழமான அறிவு,

3. ஆரோக்கியமும் வலுவும் கொண்ட உடல்.

 


விவேகானந்தர் உனக்கு என்ன செய்வார் என்ற கேள்வியும் உனக்கு வரலாம்.


♦ உன்னை உனக்கே உணர்த்துவார்;

♦ உன் சக்திகளை உனக்குப் புரியவைப்பார்;

♦ உன்னைக் கொண்டு பெரிய காரியங்களை நிகழ்த்துவார்;

♦ உன்னை உன்னதமாக்கி உலகின் பெருமைகளை உன்மீது பொழிவார்.


இந்த நான்கும் நிகழ்வதற்கு மேற்கூறிய மூன்றின் வளர்ச்சி உனக்குள் நடக்க வேண்டும். அந்த மூன்று பேறுகளும் உனக்குள் எப்படி வளரும் என்பதை அக்கறையுடன் சொல்பவர் சுவாமி விவேகானந்தர். சொல்வதோடு உனக்குச் சரியாக வழிகாட்டவும் செய்வார். அவரது அருளைப் பெற்றவர்களின் 'அப்பாய்ன்மென்ட்' கிடைப்பதே அரிது. அப்படி இருக்கும்போது உனக்கு நண்பர்களுக்கா பஞ்சம் வரும்!

சுவாமி விமூர்த்தானந்தர்

04 பிப்ரவரி, 2021

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur