விழிப்பு = வெற்றி
- சுவாமி விமூர்த்தானந்தர்
இன்று குழந்தைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார் துறவி. கதையைச் சுவாரசியமாகக் கூறியும் சிலர் கொட்டாவி விட்டார்கள்.
அதை எவ்வாறு தவிர்ப்பது? துறவி யோசித்தார். ஒரு விளையாட்டை அறிமுகப்படுத்தினார்:
"இனி யாராவது கொட்டாவி விட்டா அவங்களப் பார்த்து மத்தவங்க கை நீட்டி 'கொட்டாவி கொட்டாவி'ன்னு ரெண்டு முறை கத்தணும். இந்த விளையாட்டில ஜெயிக்கப் போவது ஆண்களா? பெண்களா?".
நாங்கதான் ஜெயிப்போம் என்று பெண்களும் பையன்களும் கூவினர்.
ஆச்சரியம், அதுவரை கவனமில்லாமல் கொட்டாவி விட்டவர்கள் தோற்றுவிடக் கூடாது என்று உஷாரானார்கள். பிறகு துறவி 40 நிமிடங்கள் பேசிய போதும் குழந்தைகள் வாயைத் திறக்கவில்லை கொட்டாவிக்காக! மாறாக, மனதைத் திறந்து கதையை உள்வாங்கினார்கள்.
ஒவ்வொரு நிலையிலும் மாணவ மாணவிகளுக்கு ஒரு நோக்கத்தைக் காட்டிக் கொண்டே சென்றால், அவர்கள் விழிப்புடன் இருந்து வெற்றி பெறுகிறார்கள். விழிப்பு = வெற்றி.
சுவாமி விமூர்த்தானந்தர்
18.07.2022,
திங்கட்கிழமை,
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,