ஒரு நிமிட உன்னதம் - 28

30.06.22 06:04 PM - By thanjavur

ஒரு நிமிட உன்னதம் - 28

லட்சக்கணக்கில் ஹரிபிரியாக்கள் தேவை!
​- சுவாமி விமூர்த்தானந்தர்

குழந்தைகள் உடலால் இளையவர்கள்; ஆனாலும் உள்ளத்தால் முதிர்ந்தவர்களையும் காணலாம்.

                                                                

தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூர் கிராமத்தில் உள்ள சுவாமி விவேகானந்தா நர்சரி - பிரைமரி பள்ளியில் படிப்பவள் ஹரிப்பிரியா. ஆறறிவு நன்கு படைத்த அவள் படிப்பதோ ஐந்தாம் வகுப்பு.

                                                                

ஹரிபிரியாவின் தாய் மகள் படிக்கும் பள்ளி மீது அக்கறை கொண்டவர். மகள் படித்து முடித்ததும் ஆறாம் வகுப்பிற்காக வேறு பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு இந்தப் பள்ளிக்கு ஒரு மின்விசிறி வாங்கித் தர எண்ணியிருந்தார். அதைத் தன் மகளிடம் கூறினார். 


உடனே ஹரிபிரியா, "ஏம்மா அத அடுத்த வருஷம் செய்யணும்? இந்த வருஷத்திலேயே ஃபேனை வாங்கிக் கொடுத்திடுவோமே...." என்றாள்.

                                                                

நமது துறவி அந்தப் பள்ளிக்குச் சென்றபோது அவரிடமே தாயும் மகளும் மின்விசிறியை வழங்கினர். அது ஓர் உன்னதமான தருணம்.

                                                                

இன்று செய்ய வேண்டியதை நாளை தள்ளிப் போட்டு போட்டு.... வாழ்க்கையின் தரத்தையும் வெற்றியையுமல்லவா நாம் தள்ளிப் போடுகிறோம்!

                                                                

ஹரிபிரியாக்கள் நமக்கு லட்சக்கணக்கில் தேவை.

சுவாமி விமூர்த்தானந்தர்

30.06.2022,

வியாழக்கிழமை,

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,

thanjavur