ஒரு நிமிட உன்னதம் - 27

15.06.22 07:20 PM - By thanjavur

ஒரு நிமிட உன்னதம் - 27

Life with Hari or in Hurry?

இன்று ஆனந்த் என்ற பக்தருடன் துறவி காரில் சென்று கொண்டிருந்தார். இழந்த எதையோ தேடி ஓடுவது போல் ரோடுகளில் பலரும் ரத்தக்கொதிப்பை ஏற்றும் விதத்தில் போகிறார்கள், வருகிறார்கள்.

  

"என்ன யோசிக்கிறீங்க சுவாமி?" என்று ஆனந்த் கேட்டார்.


"லௌகீக வாழ்க்கைக்கும் ஆன்மிக வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை ஒரே வரியில் புரிந்துகொள்ள முடியுமா என்று யோசிக்கிறேன்".


"சொல்லுங்கள் சுவாமி."

  

"எப்போதும் Hurry ஆக இருப்பது அவசரமான லௌகீகமான வாழ்க்கையாகும். உயர்ந்த நோக்கமில்லாமல் இவ்வாறு வாழ்வது ஒருவரைப் பரபரப்பாக்கும். உயர் லட்சியத்தோடு எப்போதும் ஹரியுடன் - இறைவனைச் சார்ந்திருக்க முயல்வது ஆன்மீகம். இது நம்மைச் சுறுசுறுப்பாக்கும்."

  

ஆனந்த் சட்டென்று பிரேக் போட்டார், துறவியைப் பாராட்டுவதற்காம்!  

சுவாமி விமூர்த்தானந்தர்

15.06.2022,

புதன்கிழமை,

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,

thanjavur