மடத்தில் குறுங்காடு ஒன்று அமைப்பதற்காகப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. செடிகள் நட்டவுடன் தனியாக ஆள் போட்டு நீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. Drip irrigation- சொட்டுநீர் பாசனம் செய்துவிட்டால் போதும் என்றார் ஒருவர். அங்கிருந்த ராஜூலு என்ற வனத்துறை அனுபவ அலுவலர் கூறிய ஒன்றை துறவி பதிவு செய்கிறார்.
துறவி: செடிகள் சில காலம் நன்றாக வேர் படர்ந்து வளரட்டும். வேர்கள் நன்கு பரவிய பிறகு டிரிப் இரிகேஷன் போடுங்கள். இல்லாவிட்டால் அந்தச் செடிகளின் வேர்கள் நீரைத் தேடிப் போகாமல், கிடைக்கும் நீரிலேயே சுகம் கண்டு வராமலே சோம்பேறி ஆகிவிடும். நீருக்காகப் போராடும்போதுதான் செடி ஆழமாகவும் அகலமாகவும் வேர்விட்டு பெரிய மரமாகும் என்றார்.
பாடம்: வாழ்க்கையில் உயர் தேடலும் தீவிர உழைப்பும் இல்லாமல் போனால், மனிதர்கள் மட்டுமல்ல, செடிகொடிகளும் சோம்பிச் சீரழிய வேண்டியதுதானோ!
சுவாமி விமூர்த்தானந்தர்
22, ஜனவரி 2021
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்