திரு.மகாலிங்கம் தனது பணி ஓய்வை அறிவித்த பிறகு மடத்தில் இன்று நம் துறவியைச் சந்தித்தார்.
பரபரப்பாக அவர், "மகராஜ், ஆபீஸில் VRS- Voluntary Retirement Service கொடுத்துவிட்டேன். இனி நீங்கள் கூறியபடி வி - விவேகானந்தருக்காகவும், ஆர்- ராமகிருஷ்ணருக்காகவும் எஸ் -சாரதாம்மாவிற்காகவும் உழைப்பேன். பிறருக்காக உழைத்தது போதும்" என்று கூறி வணங்கி எழுந்தார்.விவேகானந்தருக்காகவும், ஆர்- ராமகிருஷ்ணருக்காகவும் எஸ் -சாரதாம்மாவிற்காகவும் உழைப்பேன். பிறருக்காக உழைத்தது போதும்" என்று கூறி வணங்கி எழுந்தார்.
துறவி அவரை ஆழ்ந்து நோக்கியபடி, "வி .ஆர். எஸ்.ஸின் முதல் படியைப் புரிந்து கொண்டீர்கள். இனிமேல்தான் உங்களுக்கு அதிக பொறுப்பும் சிரத்தையும் தேவை" என்றார்.
மகாலிங்கம்: அதான் சுவாமி, இனி நான் நிம்மதியாக மடத்துப் பணியில் ஈடுபடலாம் என்று இருக்கிறேன். அப்போது நான் எது செய்தாலும் அது குருதேவரின் சேவை ஆகிவிடும் அல்லவா?
துறவி: அவசரப்படாதீர்கள். நீங்கள் இதுவரை வெளியில் ஊதியத்திற்காக ஊழியம் செய்தது உங்கள் விருப்பம், கருமம், கடமை ஆகும். ஆனால் இனி இறைவனுக்காகச் சேவை செய்வது உங்கள் அக வளர்ச்சிக்காக, ஆன்ம வளர்ச்சிக்காக. அது இறைவனின் அருளால் நடக்க வேண்டியது.
ஸ்ரீராமகிருஷ்ணருக்கு சேவை செய்வது என்பது பல நிலைகளைக் கொண்டது.
ஒவ்வொரு செயலையும் சுயநல பற்று இன்றி தெய்வ பக்தியுடன் செய்ய வேண்டும்.
நீங்கள் செய்யும் கர்ம யோகத்தில் உங்களது திறமையும் பிறருக்கான நன்மையும் இருக்க வேண்டும்.
அந்தச் செயல்கள் மூலம் தெய்வத்திருமூவர் திருப்தி அடையும் வகையில் உங்களது நோக்கமும் உற்சாகமும் இருக்க வேண்டும். அந்தச் செயல்கள் மூலம் தெய்வத்திருமூவர் திருப்தி அடையும் வகையில் உங்களது நோக்கமும் உற்சாகமும் இருக்க வேண்டும்.
இவ்வாறு செயல்கள் செய்யப்பட்டால்தான் அது சரியான V.R.S ஆகும்.
இறைசேவை- பகவத் கைங்கரியம்- உழவாரத் தொண்டு- தேவ ஊழியம் என்பதெல்லாம் உயிர்மூச்சு போன்றவை. ஏதோ ஓரிரு நாட்கள் மூச்சு விட்டதாலேயே ஒருவர் வாழ்ந்துவிட்டார் என்று ஆகிவிடுமா?
துறவியின் கேள்வி மகாலிங்கத்தை மனனம் செய்ய வைத்தது.
சுவாமி விமூர்த்தானந்தர்
12, மார்ச் 2021
சனிக்கிழமை
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்