RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

ஒரு நிமிட உன்னதம் - 11

15.02.22 04:51 PM By thanjavur

ஒரு நிமிட உன்னதம் - 11

அவர் துறவியிடம் தமது கஷ்டத்தைக் கூறினார்.

♦ கணவனிடமிருந்து மகள் பிரிந்து வாழ்கிறாள்.

♦ தன் தாழ்வு மனப்பான்மையை யார் தலையிலாவது கட்டிவிட்டுத் தனிமையில் வாடுகிறாள்.

♦ தனக்குள் உள்ள நிம்மதியின்மையால் தன்னை அறியாமலேயே பிறரது நிம்மதியையும் கெடுக்கிறாள்.

♦ தனது துன்பத்திற்குத் தாய் தந்தையரே காரணம் என்று மடத்தனமாக யோசிக்கிறாள்.

♦ தாய் தந்தையருடரான இணக்கமின்மை அவளது மன அழுத்தத்தை, மன உளைச்சலை, அதற்கு வித்தான அகங்காரத்தை ஆட்டிப் படைக்கிறது.

♦ தனிமையை வெல்ல சொற்ப சம்பளத்தில் வேலைக்குப் போகிறாள்.

♦ அவளது மன அழுத்தம் உடலையும் அழுத்தி குண்டாகிவிட்டாள்.

♦ தனியாக வாழ்ந்து சாதிப்பாளாம்; வெற்றி பெறுவாளாம் ..... புலம்புகிறாள்.

♦ அதற்காக வாடகை வீட்டில் தனியாகத் தன் குழந்தையுடன் வசிக்கிறாள்.

♦ வீட்டு வாடகை கட்டவும், வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும் நகைகளை அதிக வட்டிக்கு அடமானம் வைத்துள்ளாள்.

♦ அவள் யாருடைய அறிவுரையும் கேட்கும் நிலையில் இல்லாததைப் புரிந்து கொண்டார் துறவி.

தந்தைக்காகவும் மகளுக்காகவும் அன்னை ஸ்ரீசாரதையிடம் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தார் துறவி. தந்தைக்குத் தைரியம் தந்தார். பிறகு தனது டைரியில் இவ்வாறு எழுதினார்:

♦ Egoism is quite expensive.

♦ அகங்காரம் சொந்த உறவுகளையே சாகடித்து விடும்.

♦ பெற்றோரின் அன்பைச் சின்னாபின்னமாக்கும்.

♦ நேரத்தையும் விரயமாக்கும்.

♦ இப்போது பணத்தையும் வீணடிக்கிறது.

அன்னை சாரதையின் அருளால் விரைவில் அவள் பிரச்னையிலிருந்து வெளிவருவாள். அப்போது அவளது பிரச்னையை அவளுக்குப் புரிய வைத்து அதிலிருந்து விடுபட உதவ வேண்டும்.

சுவாமி விமூர்த்தானந்தர்

15, பிப்ரவரி 2021

புதன்கிழமை

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்


thanjavur