பக்தர்களே! நண்பர்களே! நாம் பல்வேறு சமயங்களில் பலவிதமாக உரையாடுகிறோம். அந்தச் சமயங்களில் நிகழும் சிறு உரையாடல்களிலும் ஒரு மனிதனின் தரத்தை, பண்பை, பாடத்தை, உயர்வை, உற்சாகத்தை, உன்னதத்தைக் கவனிக்க முடியும்.
அவ்வாறு கவனித்த சில விஷயங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்ள -உங்கள் நேரத்தைப் பங்கிட்டுக்கொள்ள அல்ல- விரும்புகின்றேன்.
பிடித்திருந்தால் படியுங்கள்... இல்லையென்றால்.... டெலிட் பட்டன்.
ஒரு நிமிட உன்னதம்
திறமையும் நல்ல அணுகுமுறையும் கொண்ட திருமதி ஜெயந்தி மின்சார வாரியத்தில் பெரும் பதவி வகிப்பவர். திடீரென செய்தி அனுப்பியிருந்தார்.
"சுவாமிஜி, எனக்கு கோவிட் பாசிட்டிவ். டாக்டர் கூறிவிட்டார்."
துறவி: ஓ அப்படியா! பாருங்கள், கோவிட்கூட உங்களை ஒரு பாசிட்டிவான (ஆக்கப்பூர்வமான) பெண் என்று கூறிவிட்டது.
இதைக் கேட்டு ஜெயந்தி தைரியமாகச் சிரித்தார் கோவிட்டைப் பார்த்து.
சுவாமி விமூர்த்தானந்தர்
21, ஜனவரி 2021
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்