அம்பிகை எப்போது சிரிக்கிறாள்?
அம்பிகை எப்போது சிரிக்கிறாள்?
அம்பிகை எப்போது சிரிக்கிறாள்?
படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்
இந்தக் கதை பற்றி
லௌகீக வேண்டுதல்களுடன் சந்நிதிக்குப் போகிறோம். இறைவன் முன் நிற்கையில் அனைத்தும் மறந்து போகிறது. திரும்பி வந்ததும், அந்த அனுபவத்தின் ஆழம் நம்மை ஆட்கொள்கிறது.
இந்தக் கதையின் மாந்தர்கள் நமது அஞ்ஞானத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்கள். அவர்கள் அம்பிகையிடம் சரணடைகிறார்கள். ஆனால் முற்றிலும் கரைந்து போகாமல் அவளுடன் உரையாடி, அர்த்தமுள்ள பதில் பெற்று மீள்கிறார்கள்.
ஆன்ம விடுதலை அடைந்தவர்களான அவர்கள், தங்கள் உயரனுபவத்தில் திளைப்பதோடு நின்றுவிடாமல், உலகம் சிறப்பதற்காக உணர்வையும் உழைப்பையும் பொழிகிறார்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வில் அதிமுக்கியமான ஒரு நிகழ்வைக் கதையாக்கியுள்ள சுவாமி விமூர்த்தானந்தரின் இந்த முயற்சியே அம்பிகையின் புன்னகையாக மிளிர்கிறது.
கதாசிரியரின் மொழியிலேயே சொல்வதென்றால், ‘தாமரை போன்ற அவள் அதரங்களும் மலர்ந்து, அதன் சுகந்தம் போன்ற அவள் இதயமும் விகசித்து வியாபித்து நிற்கும் அனுபவத்தைத் தருகிறது' இச்சிறுகதை. அதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு சொல்லும் அம்பிகைக்கு ஆபரணம்.
அதன் கருத்தாழமும் உணர்வு ஆழமும் அவளிடம் செய்யப்படும் சரணாகதி. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றும் அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைச் சிறிது கற்பனை நயத்துடன் கலந்து பனை மர உச்சிக்கு நம் மனதைக் கொண்டு செல்லும் கதை இது.
“அம்மா ஜகதம்பா! என்னம்மா இப்படிக் கைகொட்டிச் சிரிக்கிறாய்? இன்று ஏன் உனக்கு இப்படியொரு குதூகலம்?”
தட்சிணேஸ்வரத்து காளி கோவிலின் இளம் பூஜாரியான கதாதரர் பவதாரிணியிடம் பாலகனாய் இவ்வாறு கேட்டார்.
கடலலையாகக் கலகலவென்று சிரித்துக் கொண்டே தேவி, “மகனே, மக்கள் நல்லது எது செய்தாலும் நான் மகிழ்வேன்; அனைத்தையும் செய்பவளும் செய்விப்பவளும் நானே. ஆனால் அதை மறந்து பலரும் ‘நானே எல்லாம் செய்கிறேன்' என இறுமாறும்போது, விலா நோகச் சிரிக்கிறேனய்யா” என்று கூறி மேலும் சிரித்தாள். கங்கையின் அலைகளுக்குத் துல்லியம் அந்தப் புன்னகை.
தேவிக்கு மாலை சாத்தியவாறு பூஜாரி கதாதரரும், “ஆனந்தமயி, நீ எப்போதெல்லாம் மக்களைப் பார்த்துப் பரிகசிக்கிறாய், சற்றுக் கூறேன்?” என்று உரிமையுடன் கேட்டார்.
தேவியின் நயனம் நோக்கிய இடத்தில் கதாதரரும் நோக்க, அங்கு ஒரு காட்சி. மீண்டும் மந்தஹாசத்தில் மாதா.
‘நிலம் என்னுடையது' என வரப்பிற்காக இரண்டு சகோதரர்கள் அடித்துக் கொள்ளும்போதும், மகன் உயிருக்காகத் தவிக்கும்போது, ‘கவலைப்படாதே, உன் குழந்தையை நான் நிச்சயம் காப்பாற்றுவேன்' என்று தாயிடம் மருத்துவன் உத்தரவாதம் கூறும்போதும்... பூமியைப் படைத்தவள் பரிகசித்தாள்.
‘ஓ, தெய்வ சக்தியை மறந்து இது போல் மக்கள் இறுமாப்பு கொள்ளும் நேரங்களில் அவர்களை நினைத்துப் பரிகாசமாய் தேவி சிரிக்கிறாளா!' என்று கதாதரர் எண்ணினார்.
கதாதரர் தேவிக்குப் பொட்டிட்டு அலங்காரம் முடித்தார். பிள்ளைக்குப் பாலூட்டி முடித்த தாயாக, “அம்மாடி, இன்று உன் சௌந்தர்யத்தைப் பார்த்து என் கண்ணே பட்டுவிடும்” என்று திருஷ்டி கழித்தார் அவர்.
பின் தேவிக்கு நைவேத்தியம் படைத்தபடி கதாதரர், “சரியம்மா, உன் தாமரை போன்ற அதரங்களும் மலர்ந்து, அதன் சுகந்தம் போலுள்ள உன் இதயமும் மலரும் வேளை எதுவோ?” என்று கேட்டார்.
தேவியின் நயனங்கள் கதாதரனின் கண்களை நோக்கின; அது அவள் தன்னையே கண்ணாடியில் நோக்கியது போலிருந்தது.
“மகனே, கததரா! உன் அனுதினச் செய்கைகளே என்னை மகிழ்விக்கும்” என்றாள் தேவி.
கதாதரர் நெகிழ்ந்து, “மா, நான் உன் தாசன். உன் மகிழ்ச்சியே என் மூச்சு. ஆனாலும் மக்கள் உணரும் வகையில் ஓரிரு சம்பவங்களைக் கூறேன்” என்று கூறியவாறே, அவர் நைவேத்தியப் பழங்களை தேவிக்கு ஊட்ட ஆரம்பித்தார்.
பழங்களைச் சுவைத்தபடி, “ம்…, அன்றொரு நாள் உன் குரு தோதாபுரி உன்னை அத்வைத சாதனைக்காக அழைத்தபோது நீ செய்த காரியம்..., ஆஹா, உனது அந்த பாவனை, அந்த சரணாகதி என் நெஞ்சை நிறைத்ததய்யா” என்று தேவி மகனை வாஞ்சையுடன் பார்த்தாள்.
“ஓ, அந்தச் சம்பவமா தாயே!” என்று கதாதரர் புன்னகைத்தார். நைவேத்தியம் நிறைவுற்றது.
“சரிம்மா, நீ ஓய்வு கொள்” என்று கூறி தேவியை சயனகிருஹத்திற்கு அழைத்துச் சென்றார் கதாதரர்; சாமரம் வீசினார். மென்மையாகப் பாடினார். தேவி கண் வளர்ந்தாள். ஜகமெங்கும் நிசப்தம்.
‘தஸ்மின் துஷ்டே ஜகத் துஷ்டம்...' என ஓதியபடி கதாதரர் வெளிவந்தார் மரக்கதவைச் சாத்திவிட்டு.
மனக்கதவு திறந்தது.
மரங்கள் அடர்ந்திருந்த பஞ்சவடிக்குள் புகுந்தார் கதாதரர். சில மாதங்களுக்கு முன்புதான் தோதாபுரி அங்கு வந்து சென்றிருந்தார். தேவியையே பிரசன்னப்படுத்திய அந்நிகழ்ச்சியை கதாதரர் நினைத்துப் பார்த்தார்.
‘ஹரி ஓம்' என ஓதியபடி, ஆஜானுபாகுவான தோதாபுரி பஞ்சவடி வந்தார். உருவக் கடவுளை ஏற்காதவர் அவர்; அருவ தியானத்தில் லயித்த சித்தர்; திசைகளையே ஆடையாய், பிரம்மத்தையே தேகமாய் பாவித்தவர் அவர்.
அன்று இரவு ‘துனி' அக்னி முன் ஞானாக்னியாக அமர்ந்திருந்தார். பக்திப் பகலவரான கதாதரர் கோவிலில் இருந்தார். அவரது அதரங்கள் அம்பிகையின் நாமங்களை இதயத்துடிப்பாக இயம்பிக் கொண்டிருந்தன.
தூரத்திலிருந்தே நோக்கிய தோதாபுரி, அதுவரை காணாததை எல்லாம் கதாதரரிடம் கண்டார்.
‘ஆ, இவரது கண்கள், மனிதக் கண்கள் அல்லவே! எதைப் பார்த்தாலும் அதன் மூலமாக ஏகாக்ரமாகி இறையம்சத்தையே காணும் இவர் யார்?' என வியந்தார்.
சேயைக் கண்ட தாய் போல், இந்த சத் சீடனைக் கண்டதும் குரு புளகாங்கிதமடைந்தார். ‘இவன் அத்வைத ஞானத்தைப் பெறுவதற்கு மிகப் பொருத்தமானவன்' என்று அந்த ஞானகுருவின் இதயம் ஏங்கியது.
கம்பீரமாக நடந்து பவதாரிணிதேவியின் கோவிலுக்குச் சென்றார் தோதாபுரி. ‘ஹரி ஓம்' என்று கூவியபடி சந்நிதியில் எட்டிப் பார்த்தார். அவரை அங்கே பார்த்ததும் ‘முடிவில் என்னிடம் வந்துவிட்டாயா?' என்று தேவி சிரிக்க ஆரம்பித்தாள், மெல்லிய விடலைச் சிரிப்பு அது.
அது தோதாபுரிக்கு விளங்கியதா?
தேவி எதற்காக நகைக்கிறாள் என்பதைக் கண்ட கதாதரர், “பிரம்மமயீ, பிரம்ம சக்தி ரக்ஷமாம்” என்று உரக்கக் கூவினார். பிரம்மமயீ என்ற ஒலி கேட்டதும் மயிர்க் கூச்செரிந்தார் தோதாபுரி.
குண்டலினி சக்தியையே எழுப்பிவிடும் இக்குரல் யாருடையது என்று தோதாபுரி திரும்பிப் பார்த்தார்.
கதாதரர் அவரை வணங்கினார்.
இறைவன் எழுதிக் கொடுத்த வசனங்களை இருவரும் சரியாகப் பேசினர். ஆரம்பச் சந்திப்பிலேயே இவ்வளவு ஆனந்தமா!
முடிவில் தோதாபுரி, “மகனே, அத்வைத அனுபவத்தை உனக்கு வழங்கச் சித்தம். சம்மதமா? ம்..., இதைப் பெற நான் நாற்பது ஆண்டு காலம் தவமியற்றினேன்” என்றார் கம்பீரமாக.
குழந்தையாக கதாதரர் உடனே எழுந்தார்.
அவரைத் தடுத்து, “நில், எங்கு போகிறாய்? பெறற்கரிய அத்வைத ஞானம் உனக்கு வேண்டாமா?” என்று தோதாபுரி அதட்டிக் கேட்டார்.
கதாதரர் வணங்கி, “சுவாமி, என் அம்மாவிடம் கேட்டுவிட்டு வருகிறேன். அவள் சம்மதித்தால் உங்கள் சொற்படி நடக்கிறேன்” என்றார்.
‘ப்ச், அத்வைத ஞானம் கற்க அம்மாவின் அனுமதியா? இவ்வளவு வளர்ந்தும் இவன் என்ன அம்மா பிள்ளையாகவே இருக்கிறானே?' என்று தோதாபுரி ஏளனமாக ஏதோ சொன்னார்.
கோவிலில் பவதாரிணியிடம் சென்று தண்டனிட்டார் கதாதரர். அனுமதி கேட்டார்.
“நான் அனுப்பித்தான் தோதாபுரி இங்கு வந்துள்ளான். செல் மகனே, கற்க வேண்டியதை அவனிடமிருந்து கற்றுக் கொள்; அவனுக்குக் கற்பிக்க வேண்டியதையும் கற்றுக் கொடு” என்று பகன்று கடைக்கண்ணால் கண்டு மீண்டும் புன்னகைத்தாள். கங்கை வெள்ளம் எடுத்ததற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை.
குருவிற்கும், தேவிக்கும் நடுவே நின்ற குருதேவரான கதாதரர், “என் அன்னை சரி என்று கூறிவிட்டாள்” என்றார் தோதாபுரியிடம்.
பெற்றவளிடமல்ல, புவனத்தையே படைத்துக் காக்கும் புவனேஸ்வரியிடம் கதாதரர் உத்தரவு வாங்கி வந்துள்ளார் என்று அறிந்து துணுக்குற்றார் தோதாபுரி.
‘இவன் அம்மாபிள்ளை என்றால், இவனது அம்மா எப்படிப்பட்டவளாக இருக்க வேண்டும்' என்ற சிந்தனை தோதாபுரிக்கு உதித்தது.
40 ஆண்டுகள் பாடுபட்டுப் பெற்ற அத்வைத ஞானத்தைப் பற்றி கதாதரருக்கு ஓர் அறிமுகம் தரலாம் என எண்ணிய தோதாபுரிக்கு ஓர் இன்ப அதிர்ச்சி.
குருவிடம் தீட்சை பெற்றதும் கதாதரர் நிர்விகல்ப சமாதியில் லயித்தார்! மூன்று நாட்கள் அந்த சமாதி நிலையிலே நிலைத்திருந்தார்!!
இப்படியும் ஒரு சாதகன் இருக்க முடியுமா! என்று தோதாபுரியே மலைத்து நின்றபோது கோவிலில் ஆனந்தமயி கைகொட்டி நடனமே செய்தாள். அவளது பரிவாரங்கள் யாவும் ஆனந்தக் கூத்தாடின.
பின், சீடரான கதாதரரிடமிருந்து குரு தோதாபுரி பக்தியைக் கற்றபோதும் அன்னை சிரித்தாள். அதனால் அகிலத்தின் அறியாமைச் சேறு ஓரளவு அகன்றது.
பிறகு, தேவி தோதாபுரிக்கு வயிற்று வலியை உண்டாக்கி,
கரைபுரளும் கங்கையில் தன் கதையை முடித்துக் கொள்ள அவர் இறங்கியபோது,
கங்கையைச் சற்று வற்றச் செய்து,
அவருக்குக் காட்சி தந்து,
பின் அவருக்குள் பக்தி எனும் கங்கையைப் பெருக்கெடுக்கச் செய்தாளே....!
ஆஹா, அன்று காளிதேவியோடு கங்காதேவியும் கைகோர்த்துக் கொண்டு கூத்தாடினாளே!
பொழுது விடிந்தது. தோதாபுரியின் இருளும் அகன்றது.
கதாதரர் கோவிலிலுள்ள தேவியின் திருமுகத்தைத் துணியால் துடைத்தார். தேவியின் மூச்சுக்காற்று அவரது கரங்களைச் சூடேற்றியது.
“தாயே, உன் பிரசன்னமான திருமுகத்தை என்றும் எல்லா இடங்களிலும் தரிசிப்பதே என் வாழ்க்கையின் நோக்கம்” என்றார் கதாதரர் நெஞ்சு தழுதழுக்க.
“மகனே, உன் மூலம் உலகிற்கு இன்னொன்றையும் அறிவிக்க வேண்டும்” என்றாள் தேவி.
“அகிலத்திற்கு அறிவிக்க வேண்டியதா?”
“மகனே, பசியைப் போக்குவது லட்சியம் என்றால், சமைப்பது முக்கியமானது. அதைவிட அதிமுக்கியமானது என்ன?” என்று கேட்டு தேவி தன் ஓரக்கண்களால் கதாதரரைக் காண அவரது உள்ளத்தில் உடனே ஒன்று ஸ்புரித்தது.
“ஓ, அதுவா! நிச்சயம் செய்கிறேன் தாயே”
வாழ்க்கையில் எமனுக்கு இரையானவர்கள் கோடிக்கணக்கில் குவிந்திருக்க, சிவனுக்குள் லயமானவர்கள் சிலரும் உலகில் திளைக்கவே உள்ளனர்.
இப்படியாகக் காலம் உருண்டோடியதில் தேவி பலரது செயல்களைப் பார்த்துப் பலமுறை பரிகசித்தாள்; சிலரைப் பார்த்து மகிழ்ந்தாள். கதாதரர் போன்றோரைக் கண்டு கண்குளிர்ந்தாள்.
கதாதரர் ஸ்ரீராமகிருஷ்ணராக மலர்ந்தார். இதோ, பவதாரிணியைப் பூஜித்து பவரோகத்தில் சிக்கியவர்களின் சோகங்களை வேரறுக்கக் கிளம்பிவிட்டார்.
அன்று ஸ்ரீராமகிருஷ்ணர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். தேவியின் ஆனந்தமான புன்னகை அவரது அகத்தில் ஒளிர்ந்தது. சீடராக இருந்த கதாதரருக்கு இன்று இளம் சாரதைதான் பிரதான சிஷ்யை. அவள் அவரது மனைவி என்றாலும் மாணவியாக அவளைப் பயிற்றுவித்தார் அந்த ஜகத்குரு.
சமைத்த சாதத்தைப் பிரசாதமாக்குவது முதல், மக்கள் மனங்களைச் சமைத்து, அவர்களைப் பக்தர்களாக்குவது வரை எல்லாப் பயிற்சிகளையும் சாரதைக்குச் சொல்லித் தந்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
இறைவாழ்க்கை வாழ்வது சமைப்பதற்குச் சமம். இறைவனோடு இயைந்து வாழ்வது - சமைத்ததைப் பிறருக்குப் பரிமாறுவதுபோல; சமைத்ததைப் பிறருக்குப் பரிமாறுவதுபோல; சமைத்ததைப் பிறருக்குப் பரிமாறுவதுபோல; சமைத்ததைப் பிறருக்குப் பரிமாறுவதுபோல; சமைத்ததைப் பிறருக்குப் பரிமாறுவதுபோல;
அதைவிட முக்கியம் தன்னைச் சேர்ந்தவர்களையும் இறைவனோடு சேர்ந்து வாழச் செய்வது - பிறரது பசியை நீக்குவதைப் போல் அல்லவா! பிறரது பசியை நீக்குவதைப் போல் அல்லவா! பிறரது பசியை நீக்குவதைப் போல் அல்லவா! பிறரது பசியை நீக்குவதைப் போல் அல்லவா! பிறரது பசியை நீக்குவதைப் போல் அல்லவா!
ஸ்ரீராமகிருஷ்ணர் சாரதையிடம் மிகுந்த அக்கறை கொண்டார். ஆனாலும் சாரதை அடிக்கடி மலைத்துப் போகிறாள்.
ஸ்ரீராமகிருஷ்ணர் எப்போது என்ன கேள்வி கேட்பார் என்று கூற முடியாது. அவரிடம் சரியான பதில் சொல்ல வேண்டுமே என அவள் ஒவ்வொரு கணமும் தவிப்பாள்.
ஸ்ரீராமகிருஷ்ணரும் திரும்பத் திரும்ப ஏதாவது கேட்பார். குரு தன்னைச் சோதிக்கிறார், எதற்கோ தன்னைப் பக்குவப்படுத்துகிறார் என்பதை மட்டும் அவள் ஊகித்தறிந்தாள்.
ஒரு நாள் ஒருவரைப் பற்றிக் கூறிவிட்டு, “சாரதா, இன்று இப்பக்தனுக்கு இப்படி ஒரு பிரச்னை. என்ன சொன்னால் அவன் தெய்வம் சார்ந்த வாழ்க்கை நடத்துவான்? யோசித்துக் கூறு” என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
குரு மெச்சும் மாணவியாக, சகதர்மிணியாக, சிஷ்யையாக, மகளாக குருதேவரைப் பெருமைப்படுத்த வேண்டுமே என்று சாரதையின் இதயம் அடித்துக் கொண்டது.
அந்தப் பரபரப்பு சில கணங்கள்தான்.
உடனே கனமான அவளது இதயம் லேசானது. எப்படி?
அவள்தான் தீர்வுக்கான வழிமுறையைத் தன் குருவிடமிருந்து கற்றுக் கொண்டுவிட்டாளே!
“பதிலைச் சிறிது நேரம் கழித்துச் சொல்கிறேன்” என்று கூறி எழுந்தாள்.
“பதில் சொல்லிவிட்டுப் போம்மா, நீ யாருடன் கலந்தாலோசித்து வரப் போகிறாய்...?” என்று அவசரமாகக் கேட்டார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
பதில் கூற சாரதை அங்கிருந்தால்தானே! யாரிடம் ஆலோசிக்கிறாள்? என ஸ்ரீராமகிருஷ்ணர் வியந்தார்.
தமது தவக்குடிலான நகபத்தில்...,காளிமாதா முன்பு, தாய் தனக்கு அலங்காரம் செய்வாள் என்று காத்திருக்கும் ஒரு சிறுமியாக சாரதை நின்றாள்.
‘தாயே, ஞானதாயினீ, குருதேவர் பெருமைப்படும் வகையில் அவரது கேள்விக்கு நீயே விடை வழங்கம்மா, நான் என்ன கூற வேண்டும்? கூறியருள் தாயே!”தாயே, ஞானதாயினீ, குருதேவர் பெருமைப்படும் வகையில் அவரது கேள்விக்கு நீயே விடை வழங்கம்மா, நான் என்ன கூற வேண்டும்? கூறியருள் தாயே!”தாயே, ஞானதாயினீ, குருதேவர் பெருமைப்படும் வகையில் அவரது கேள்விக்கு நீயே விடை வழங்கம்மா, நான் என்ன கூற வேண்டும்? கூறியருள் தாயே!”தாயே, ஞானதாயினீ, குருதேவர் பெருமைப்படும் வகையில் அவரது கேள்விக்கு நீயே விடை வழங்கம்மா, நான் என்ன கூற வேண்டும்? கூறியருள் தாயே!”தாயே, ஞானதாயினீ, குருதேவர் பெருமைப்படும் வகையில் அவரது கேள்விக்கு நீயே விடை வழங்கம்மா, நான் என்ன கூற வேண்டும்? கூறியருள் தாயே!”
சாரதையின் பிரார்த்தனையைக் கேட்டு, ‘இப்படிச் சொல்' என்று தேவி திருவாய் மலர்ந்தார். அதை அப்படியே சாரதை குருவிடம் போய்த் தெரிவித்த பிறகு, "இது சரிதானே?” என்று தயங்கிக் கேட்டாள்.
“சாரதா, நீ சொன்னது சரிதாம்மா, செய்ததோ மிக மிகச் சரி” என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர் சிரித்தபடி.
இப்படித்தானே அவரும் முன்பு அவரது குருவிடம் செய்தார்; இன்று அதையே தன் சிஷ்யையிடம் அவர் எதிர்பார்க்கிறார்.
அது சரியாக நடப்பதால் குருதேவர் சிரித்தார்.
அதைப் பார்த்து சாரதையும் புன்னகைத்தாள்.
இருவரும் அகமுகமாகி, ஆழமான மகிழ்வுடன் விளங்குவதைக் கண்டு அகிலாண்டேஸ்வரியும் சிரித்தாள். அதனால் அகிலத்தில் சுபிட்சம் பெருகியது.
ஆதாரம்: 1. குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் பாகம் 1 - பக்கம் 376. 2. குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் பாகம் 3 - பக்கம் 320.
இதனைக் கேட்க
சுவாமி விமூர்த்தானந்தர்
11.06.2024
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்