மாவீரனாகு - சிறுகதை
அமெரிக்கச் செவ்விந்தியர்களின் செரோக்கீ (Cherokee) என்ற பழங்குடி இனச் சிறுவர்களை, ஒரு சடங்கால் தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றும் வழக்கம் இருந்தது., ஒரு சடங்கால் தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றும் வழக்கம் இருந்தது.
செரோக்கீ இனத்து இளைஞர்கள் ஒழுக்கத்திலும் உழைப்பிலும் சிறந்திருந்தார்கள். அந்தச் சிறுவர்களின் பெயர்களே ‘பாயும் அம்பு', 'தகிக்கும் வெயில்' என்று தான் இருக்கும்.பாயும் அம்பு', 'தகிக்கும் வெயில்' என்று தான் இருக்கும்.
அன்று அந்தச் சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை காட்டிற்குச் சென்றார்.
பேசியபடியே வந்த அவர் திடீரென, “மகனே, இப்போது உனக்கு ஒரு பெரிய சவால் உள்ளது. இதில் வெற்றி பெற்றால்தான் நீ வீரன்” என்றார்.இப்போது உனக்கு ஒரு பெரிய சவால் உள்ளது. இதில் வெற்றி பெற்றால்தான் நீ வீரன்” என்றார்.
சிறுவன் மலைத்து நின்றான். “என்னப்பா?"
“மகனே, இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக் கூடாது; வீட்டிற்கு ஓடி வந்துவிடக் கூடாது' என்றார்.இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக் கூடாது; வீட்டிற்கு ஓடி வந்துவிடக் கூடாது' என்றார்.
சிறுவன் தயக்கத்துடன் சம்மதித்தான். தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை அவனுக்குக் கேட்டது.
அதுவரை தைரியமாக இருந்த அவன், திடீரென ஆந்தை அலறுவதையும் நரி ஊளையிடுவதையும் கேட்டான். அவனது இதயத்துடிப்பு எகிறியது. வன விலங்குகள் எப்போது தாக்குமோ என்று நடுங்கினான்.திடீரென ஆந்தை அலறுவதையும் நரி ஊளையிடுவதையும் கேட்டான். அவனது இதயத்துடிப்பு எகிறியது. வன விலங்குகள் எப்போது தாக்குமோ என்று நடுங்கினான்.
மரங்கள் பேய் போன்று ஆடின. திடீரென மழை கொட்டி அவன் சோகத்தைப் பெரிதாக்கிற்று. கடுங்குளிர். பலத்த காற்று மரக்கிளைகளை அசைத்து, அவன் அமர்ந்திருந்த மரத்தையும் ஆட்டியது.அவன் அமர்ந்திருந்த மரத்தையும் ஆட்டியது.
ஐயோ, இப்படி நிர்க்கதியாய்த் தவிக்கவிட்டுத் தந்தை திரும்பிப் போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்' என்று பலமுறை கூவிப் பார்த்தான். பயனில்லை. என்ன செய்வது?இப்படி நிர்க்கதியாய்த் தவிக்கவிட்டுத் தந்தை திரும்பிப் போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்' என்று பலமுறை கூவிப் பார்த்தான். பயனில்லை. என்ன செய்வது?
இருள், பீதி, தனிமை, பசி, தூக்கம் இவை யெல்லாம் போதாதா ஒருவன் பயந்து சாவதற்கு? உறக்கம் வந்தபோதெல்லாம் ஏதோ ஒரு விலங்கு அவனைக் கடித்துக் குதறுவதாகக் கனவு வரும்.பீதி, தனிமை, பசி, தூக்கம் இவை யெல்லாம் போதாதா ஒருவன் பயந்து சாவதற்கு? உறக்கம் வந்தபோதெல்லாம் ஏதோ ஒரு விலங்கு அவனைக் கடித்துக் குதறுவதாகக் கனவு வரும்.
இப்படியே இரவு கழிந்தது. காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான்.
அதிகாலையில் சூரியன் உடம்பைச் சுட்டபோது தான் கண்கட்டைத் திறந்து பார்த்தான் அவன்.
கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்த்தபோது, ஆச்சரியம்! ஆனந்தம்! அவனுக்கு அழுகையே வந்து விட்டது. அப்பா!' என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் அப்பாவைத் தழுவிக் கொண்டான்.ஆச்சரியம்! ஆனந்தம்! அவனுக்கு அழுகையே வந்து விட்டது. அப்பா!' என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் அப்பாவைத் தழுவிக் கொண்டான்.
“அப்பா, நீங்கள் எப்போது வந்தீர்கள்?” என்று கேட்டான் ஆவலாக.நீங்கள் எப்போது வந்தீர்கள்?” என்று கேட்டான் ஆவலாக.
“எப்போது மகனே நான் உன்னை விட்டுப் பிரிந்தேன்?” என்று கேட்டார் தந்தை.என்று கேட்டார் தந்தை.
“இரவு இங்குதான் இருந்தீர்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியபோதெல்லாம் வரவில்லை?”பிறகு ஏன் நான் பயந்து அலறியபோதெல்லாம் வரவில்லை?”
“மகனே, நீ வீரனாக வேண்டும் என்பதற்காகவே மௌனம் காத்தேன். இரவில் நான் இங்கேயே இருந்ததை நீ அறிந்திருந்தால் உன்னைக் கோழை என இந்த ஊர் கூறிவிடும் அல்லவா?”நீ வீரனாக வேண்டும் என்பதற்காகவே மௌனம் காத்தேன். இரவில் நான் இங்கேயே இருந்ததை நீ அறிந்திருந்தால் உன்னைக் கோழை என இந்த ஊர் கூறிவிடும் அல்லவா?”
"அப்பா...'' என்று கூறிக்கொண்டே தந்தையைக் கட்டிக்கொண்டான் மகன்.அப்பா...'' என்று கூறிக்கொண்டே தந்தையைக் கட்டிக்கொண்டான் மகன்.
இறைவனும் நம்மோடு இப்படித்தான் இருக்கிறான். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது நாம் துவண்டுவிடாமல், தீரர்களாக வேண்டும் என்பதற்காகத் தான் மௌனம் காக்கிறான்.தீரர்களாக வேண்டும் என்பதற்காகத் தான் மௌனம் காக்கிறான்.
இதனைக் கேட்க
சுவாமி விமூர்த்தானந்தர்
22.07.2022
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்