RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

எளிய தியானப் பயிற்சி - 4

17.08.21 07:16 PM By thanjavur

எளிய தியானப் பயிற்சி - 4

'மந்திர தியானம்'

அன்பர்களே, இன்று நீங்கள் தியானிக்கப் போவது மந்திரங்களின் மீது. உடல் கண்ணுக்குத் தெரிவது; ஸ்தூலமானது.

உங்களது மனமோ சூட்சுமமானது.

அதைவிட சூட்சுமமானது, புத்தி.

அதையும்விட சூட்சுமமானது பிராணன்.

பிராணனைவிட உணர மிகக் கடினமானது ஆன்மா.

‘ஒவ்வோர் ஆன்மாவிலும் அளவற்ற ஆற்றல் உள்ளது’ என்றார் சுவாமி விவேகானந்தர். ஆன்ம நிலையிலிருந்தே அனைத்து சக்திகளும் வருகின்றன. எல்லா வகை ஆனந்தங்களுக்கும் ஊற்றுக்கண் ஆன்மாவே.

அந்த ஆத்மானந்தத்தில் திளைத்திட ஸ்தூலத்திலிருந்து சூட்சுமத்தைப் பற்றுவதற்கான உபாயமே இந்தப் பயிற்சி.

‘சரீரமாத்யம் கலு தர்மசாதனம்’ – தர்ம காரியங்களைச் செய்யத்தான் இந்த உடல் உள்ளது என்கிறது வேதம். தர்ம காரியங்களைச் செய்யத்தான் இந்த உடல் உள்ளது என்கிறது வேதம். தர்ம காரியங்களைச் செய்யத்தான் இந்த உடல் உள்ளது என்கிறது வேதம்.

இவற்றைப் படிப்படியாக அறிந்து கொள்வோமா?

முதலில் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதாதேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் திருவுருவப் படங்களைப் பூக்களால் அலங்கரியுங்கள். ஊதுபத்தி ஏற்றி வையுங்கள். அவர்களது திருமுன்பு ஆசனத்தின் மீது அமருங்கள். அன்னை ஸ்ரீசாரதாதேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் திருவுருவப் படங்களைப் பூக்களால் அலங்கரியுங்கள். ஊதுபத்தி ஏற்றி வையுங்கள். அவர்களது திருமுன்பு ஆசனத்தின் மீது அமருங்கள். அன்னை ஸ்ரீசாரதாதேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் திருவுருவப் படங்களைப் பூக்களால் அலங்கரியுங்கள். ஊதுபத்தி ஏற்றி வையுங்கள். அவர்களது திருமுன்பு ஆசனத்தின் மீது அமருங்கள்.

உடலும் மனமும் புத்தியும் பிராணனும் ஒரே நேர்க்கோட்டில் செயல்படுவதற்கு, முதலில் ஓங்காரத்தை மூன்று முறை உச்சரியுங்கள். முதலில் ஓங்காரத்தை மூன்று முறை உச்சரியுங்கள். முதலில் ஓங்காரத்தை மூன்று முறை உச்சரியுங்கள்.

‘உங்கள் நெஞ்சம் வஜ்ரம் போல் உறுதியாக இருக்கட்டும். சிங்கத்தின் வலிமை மீது தியானம் செய்யுங்கள்’ என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். என்று சுவாமி விவேகானந்தர் கூறினார்.

நெஞ்சத்தின் வலிமையைப் பெருக்குவதற்கு வலிமையே உருவானவரின் திருநாமமான ‘ஓம் ஐம் விவேகானந்தாய நம:’ என மும்முறை உச்சரியுங்கள். என மும்முறை உச்சரியுங்கள். என மும்முறை உச்சரியுங்கள்.

அடுத்து, பிரேமை பொங்கும் அன்னை ஸ்ரீசாரதா தேவியின் திருமுகத்தைப் பார்த்தபடி அந்த உலகநாயகியின் திருநாமத்தை மூன்று முறை உச்சரியுங்கள்: பிரேமை பொங்கும் அன்னை ஸ்ரீசாரதா தேவியின் திருமுகத்தைப் பார்த்தபடி அந்த உலகநாயகியின் திருநாமத்தை மூன்று முறை உச்சரியுங்கள்: பிரேமை பொங்கும் அன்னை ஸ்ரீசாரதா தேவியின் திருமுகத்தைப் பார்த்தபடி அந்த உலகநாயகியின் திருநாமத்தை மூன்று முறை உச்சரியுங்கள்:

‘ஓம் ஐம் ஹ்ரீம் சர்வதேவ தேவீ ஸ்வரூபிண்யை ஸ்ரீசாரதாதேவ்யை நம:’

இந்த மந்திர உச்சரிப்பால் உங்களது அறிவிலும் உணர்ச்சியிலும் உள்ள மலினங்கள் அகன்று போகின்றன.

இப்போது உங்களது கைகளைச் சிரசுக்கு மேலே தூக்குங்கள். இதனால் உங்களது மனம் எளிதில் ஒருமுகப்படுகிறது.

மகாகவி பாரதியார், ‘தேவ சக்திகளை நம்முள்ளே நிலை பெறச் செய்யும் சொல் ஒன்று வேண்டும்’ என்று வேண்டினார். என்று வேண்டினார். என்று வேண்டினார்.

ஆகாயத்திலுள்ள அளவற்ற தேவ சக்திகளை யாரெல்லாம் ஏற்கத் தயாராக இருக்கிறார்களோ, அவர்களுக்குள் அந்தச் சக்திகள் தூக்கிய கைகளின் வழியே இறங்கும். அவர்களுக்குள் அந்தச் சக்திகள் தூக்கிய கைகளின் வழியே இறங்கும். அவர்களுக்குள் அந்தச் சக்திகள் தூக்கிய கைகளின் வழியே இறங்கும்.

உங்கள் கையின் விரல் நுனி ஆகாயத்திலுள்ள தேவ சக்திகளை ஈர்க்கும் ‘ஆன்டெனா’வாகக் கருதுங்கள். அந்தத் தெய்வ சக்தியை நம்புங்கள். அந்தச் சக்திதான் உபநிஷதங்களில் சாந்தி மந்திரமாக ஓதப்படுகிறது.

இந்த மந்திரத்தை உரக்கச் சொல்லுங்கள்.

ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா: ।

பத்ரம் பச்யேமாக்ஷபிர் யஜத்ரா: ।

ஸ்திரைரங்கைஸ் துஷ்ட்டுவாக்ம்ஸஸ்தனூபி: ।

வ்யசேம தேவஹிதம் யதாயு: ।

ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்த ச்ரவா: ।

ஸ்வஸ்தி ந: பூஷா விச்வ வேதா: ।

ஸ்வஸ்தி நஸ் தார்க்ஷ்யோ அரிஷ்ட்டநேமி: ।

ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாது ॥

‘தேவர்களே! தேவசக்திகளே! காதுகளால் நாங்கள் நல்ல விஷயங்களைக் கேட்க வேண்டும்.

‘பூஜிக்கத் தகுந்தவர்களே, கண்களால் நாங்கள் நல்ல விஷயங்களைக் காண வேண்டும். கண்களால் நாங்கள் நல்ல விஷயங்களைக் காண வேண்டும். கண்களால் நாங்கள் நல்ல விஷயங்களைக் காண வேண்டும்.

‘உறுதியான அங்கங்களுடன் கூடிய உடலுடன் ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்க வேண்டும். தேவர்களுக்கு நன்மை செய்தபடி வாழ வேண்டும்!

‘இந்திரன் நமக்கு நன்மை செய்யட்டும். எல்லாம் அறியும் சூரியன் நமக்கு மங்கலம் செய்யட்டும். தீமையை அழிக்கின்ற கருடன் நமக்கு நன்மை செய்யட்டும். பிருகஸ்பதி நமக்கு நன்மை தரட்டும்!’

முனிவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்து தேவ சக்திகளைப் பெற்றனர். பக்தர்களே, நீங்களும் அந்தச் சக்திகளைப் பெறுவதற்குச் சங்கல்பம் கொள்ளுங்கள். நீங்களும் அந்தச் சக்திகளைப் பெறுவதற்குச் சங்கல்பம் கொள்ளுங்கள். நீங்களும் அந்தச் சக்திகளைப் பெறுவதற்குச் சங்கல்பம் கொள்ளுங்கள்.

உங்கள் உடல் ஒரு கலசம். கூம்பு போன்று உள்ள உங்கள் கைகளின் நுனி வழியாக ஆகாயத்திலுள்ள தேவசக்திகள் அந்தக் கலசத்தில் மெல்ல மெல்ல இறங்குவதாக நம்புங்கள்.

சிவபெருமானின் சிரசில் ஆகாய கங்கை இறங்குவது போல, தெய்விகச் சக்திகள் ஸ்ரீராமகிருஷ்ணரின் பேரருளால் உங்களுக்குள் இறங்கட்டும். தெய்விகச் சக்திகள் ஸ்ரீராமகிருஷ்ணரின் பேரருளால் உங்களுக்குள் இறங்கட்டும். தெய்விகச் சக்திகள் ஸ்ரீராமகிருஷ்ணரின் பேரருளால் உங்களுக்குள் இறங்கட்டும்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் மூலமந்திரத்தை எட்டு முறை பக்தியுடன் உச்சரியுங்கள். ‘ஓம் ஐம் சர்வதேவ தேவீ ஸ்வரூபாய ஸ்ரீராமகிருஷ்ணாய நம:’

இப்போது கைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வாருங்கள். மந்திரத்தால் நிரப்பப்பட்ட உங்கள் உடல் மந்திர சரீரமாகியுள்ளது.

மந்திர உச்சரிப்பால் உங்கள் சோம்பல் மறைந்து உடலிலுள்ள தாமச இயல்பு குறைந்துவிட்டது. உடல் முழுவதும் பிராணன் சீராக இயங்குவதாக உணருங்கள். உடல் புதுத் தெம்புடன் விளங்குகிறது என்பதை நம்புங்கள்.

அடுத்து, வயிறு நிறையும் வரை மூச்சை உள்ளிழுங்கள். மூச்சை உள்ளிழுக்கும்போது மந்திரத்தையும் உச்சரியுங்கள். வயிறு நிறையும் வரை மூச்சை உள்ளிழுங்கள். மூச்சை உள்ளிழுக்கும்போது மந்திரத்தையும் உச்சரியுங்கள். வயிறு நிறையும் வரை மூச்சை உள்ளிழுங்கள். மூச்சை உள்ளிழுக்கும்போது மந்திரத்தையும் உச்சரியுங்கள்.

மூச்சை வெளிவிடும்போது உங்களது எதிர்மறை எண்ணங்கள், நோய், வலி போன்றவை யாவும் உங்களை விட்டுப் போய்விட்டன என்று திடமாக எண்ணுங்கள். நோய், வலி போன்றவை யாவும் உங்களை விட்டுப் போய்விட்டன என்று திடமாக எண்ணுங்கள். நோய், வலி போன்றவை யாவும் உங்களை விட்டுப் போய்விட்டன என்று திடமாக எண்ணுங்கள்.

இப்போது உங்கள் உள்ளங்கையை நெஞ்சின் மீது வைத்து இதயத் துடிப்பைக் கவனித்துக் கேளுங்கள். அந்த இதய ஒலியுடன் உங்களது இஷ்டமந்திரத்தையும் ஒரு சேர ஒலிக்கும்படிக் கூறுங்கள்.

பிராணனில் மந்திரம் கலப்பதாக பாவியுங்கள்.

அடுத்து, உங்களது வலது விரல்களால் இடது கையின் நாடி பிடித்து ஒரு மருத்துவர் பார்ப்பதுபோல் பாருங்கள். உங்களது வலது விரல்களால் இடது கையின் நாடி பிடித்து ஒரு மருத்துவர் பார்ப்பதுபோல் பாருங்கள். உங்களது வலது விரல்களால் இடது கையின் நாடி பிடித்து ஒரு மருத்துவர் பார்ப்பதுபோல் பாருங்கள்.

ஒவ்வொரு நாடித்துடிப்பிலும் உங்களால் ஒரு மந்திரத்தைக் கூற முடிந்தால்.... உங்கள் நாடி நரம்புகளிலும் மந்திர சக்தி ஊடுருவும்.

மந்திர சக்தி உங்களது ரத்தநாளங்களில் செல்வதாகக் கருதுங்கள். இப்போது உங்கள் உடம்பெல்லாம் மந்திரம் பரவியுள்ளது.

சுவாமி விவேகானந்தர் தமது இஷ்டமந்திரத்தைத் திறந்த கண்களால் பொன்னெழுத்துகளால் பார்த்தார். அது போன்ற பாக்கியம் நமக்கும் வராதா என்று ஒரு கணம் ஏங்குங்கள்.

அந்த ஏக்கத்துடன் மேலும் ஐந்து முறை உங்களது இஷ்டமந்திரத்தை அகம் மகிழ உரைத்திடுங்கள்.

அமுதமொழிகள் பகர்ந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் திருமுகத்தைக் காணுங்கள்.

‘நாமமும் நாமியும் ஒன்று’ என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர். அதன்படி ராமகிருஷ்ண நாமத்தை ஜபிக்கும் உங்கள் நெஞ்சமெல்லாம் அந்த நிர்மலனின் நினைவே நிறையட்டும். என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர். அதன்படி ராமகிருஷ்ண நாமத்தை ஜபிக்கும் உங்கள் நெஞ்சமெல்லாம் அந்த நிர்மலனின் நினைவே நிறையட்டும். என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர். அதன்படி ராமகிருஷ்ண நாமத்தை ஜபிக்கும் உங்கள் நெஞ்சமெல்லாம் அந்த நிர்மலனின் நினைவே நிறையட்டும்.

நாமருசி உங்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. அந்தச் சுவையால் உங்களது காதுகள் ஜபத்தைக் கேட்கட்டும்.

தாமரை மலர், துளசிதளம், வில்வ இலை, சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம் போன்ற நறுமணங்கள் நாசிக்குள் வருவதாக எண்ணிக் கொள்ளுங்கள். துளசிதளம், வில்வ இலை, சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம் போன்ற நறுமணங்கள் நாசிக்குள் வருவதாக எண்ணிக் கொள்ளுங்கள். துளசிதளம், வில்வ இலை, சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம் போன்ற நறுமணங்கள் நாசிக்குள் வருவதாக எண்ணிக் கொள்ளுங்கள்.

மீண்டும் கைகளைத் தலைக்கு மேல் கூப்பிக் கொண்டு இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள்.

ஓம். எல்லா மந்திரங்களின் ஸ்வரூபரான ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரே! தங்களது திருவுருவம் காணும் பாக்கியத்தை எங்களுக்கு நல்கியுள்ளீர்கள்.

தங்களது அருளையும் பாதுகாப்பையும் நாங்கள் பெற்றதன் அடையாளமாகத் தங்களது திருநாமத்தை ஜபிக்கும் விசேஷ வாய்ப்பையும் அருளியுள்ளீர்கள்.

தங்களது திருநாமத்தை ஜபிக்கும் நான், இனி எங்கு சென்றாலும் மந்திரக் கவசத்துடன் செல்வதற்கு அருளுங்கள். இனி எங்கு சென்றாலும் மந்திரக் கவசத்துடன் செல்வதற்கு அருளுங்கள். இனி எங்கு சென்றாலும் மந்திரக் கவசத்துடன் செல்வதற்கு அருளுங்கள்.

இனி யாரிடமும் பேசுவதற்கு முன்பு அந்த நபர் தங்களால் அனுப்பி வைக்கப்பட்டவர் என்ற உணர்வுடன் அவரிடம் உரையாடும் பாக்கியத்தை அளித்திடுங்கள் ஐயனே!

பாவிகளைக்கூட பவித்திரமாக்கும் பரமஹம்சரே,

இனி அடியேன் எது செய்தாலும் உங்கள் அனுமதியுடன், உங்கள் பிரதிநிதியாக இருந்து உங்கள் திருப்திக்காகச் செய்திட அருளுங்கள். உங்கள் பிரதிநிதியாக இருந்து உங்கள் திருப்திக்காகச் செய்திட அருளுங்கள். உங்கள் பிரதிநிதியாக இருந்து உங்கள் திருப்திக்காகச் செய்திட அருளுங்கள்.

அந்த உயரிய நிலையை விரைவில் அடைந்திட, இதோ இக்கணம் அடியேன் ஜபத்தைச் சிரத்தையுடன் செய்கிறேன்; எனக்கு அருளுங்கள். இதோ இக்கணம் அடியேன் ஜபத்தைச் சிரத்தையுடன் செய்கிறேன்; எனக்கு அருளுங்கள். இதோ இக்கணம் அடியேன் ஜபத்தைச் சிரத்தையுடன் செய்கிறேன்; எனக்கு அருளுங்கள்.

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

சுவாமி விமூர்த்தானந்தர்

17 ஆகஸ்ட், 2021

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

இந்த தியானத்தை கேட்க:

thanjavur