அன்னை ஸ்ரீசாரதா தேவியின் சீடர் சுவாமி அம்பானந்தர். அவரது சீடர் தவத்திரு சுவாமி மதுரானந்தர்.
கன்னியாகுமரியில் உள்ள வெள்ளிமலை, விவேகானந்தா ஆசிரமம் தவத்திரு சுவாமிகளின் நூற்றாண்டு விழாவை விமரிசையாக இன்று கொண்டாடியது.
இந்த ஆசிரமத்திலிருந்து நடைபெற்று வரும் 1,150 இந்து சமய வகுப்புகளில் 50,000 மாணவ- மாணவிகள் கற்று வருகிறார்கள். சுவாமி சைதன்யானந்தரின் தலைமையில் 3,500 சமய ஆசிரியர்கள் நமது இந்து மதத்தைப் பற்றி நாட்டின் பல பகுதிகளில் சிறப்பாகக் கற்பித்து வருகிறார்கள்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கம்
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கம் இன்று, 30.3.22 நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக இரண்டு மாநிலங்களின் கவர்னரான திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். முதல் அமர்வில் திரு சுகிசிவம் அவர்களின் சொற்பொழிவு நிகழ்ந்தது.
இந்த நிகழ்வில் சுவாமி விமூர்த்தானந்தரின் ஆசியுரையும் இடம் பெற்றது. பிறவி கவிஞரான பாரதி தமது சிந்தனையாலும் கற்பனையாலும் தேசியக்கவி ஆனார். சகோதரி நிவேதிதையின் சீடரான பாரதிக்கு தெய்வ அருள் வாய்த்ததால் அவர் ஒரு தெய்வீக கவிஞராக மிளிர்கிறார் என்பதைப் பதிவு செய்தேன்.