இன்றைய சேவை- 04.12.22
குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக ஸ்ரீ சாரதா தேவி பாலர் பண்பாட்டு வகுப்புகள் நகர மையத்திலும் கிராம மையத்திலும் இன்று தொடங்கப்பட்டன. காலையில் நகர மையத்தில் 32 குழந்தைகளும், பிற்பகலில் கிராம மையத்தில் 30 குழந்தைகளும் கலந்து கொண்டார்கள்.
பண்பாளர்களாக, அறிவாளிகளாக, பக்தி மிக்கவர்களாக, சேவை செய்பவர்களாக, நாம் அனைவரும் பெருமைப்படும் விதமாக குழந்தைகள் வளர்வதற்கான பயிற்சிகள் தரப்பட இருக்கின்றன.
இன்றைய சேவை- 11.12.22- அன்னை ஸ்ரீ சாரதாதேவி பாலர் பண்பாட்டு வகுப்புகள்- ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.
Today's Service- 11.12.22- Sri Sarada Devi Cultural Classes- Sri Ramakrishna Math, Thanjavur.
இன்றைய சேவை- 18.12.22-ஞாயிறு
அன்னை ஸ்ரீ சாரதா தேவி பாலர் பண்பாட்டுப் பயிற்சி. இதில் பஜனை, வீடியோ காட்சிகளின் மூலம் விவேகத்தை வளர்ப்பது, பாரம்பரியமான சிந்தனைகளைத் தந்து சிறுவர்களைச் செம்மையானவர்களாக மாற்றுவது போன்றவை கற்பிக்கப்படுகின்றன.
Today's Service- 18.12.22- Sunday
Sri Sarada Devi Cultural Training. It is taught through bhajans, video shows to develop wisdom, impart traditional thoughts and make children refined.
இன்றைய சேவை- 25. 12. 22- ஸ்ரீ சாரதா தேவி பாலர் பண்பாட்டு பயிற்சி
யோகா மாஸ்டர் திருமதி சங்கீதா நடத்திய பயிற்சிகள்
இயற்கை மருத்துவர் டாக்டர் கலைமகளின் சிறப்பு நிகழ்ச்சி
சுவாமி விமூர்த்தானந்தர் குழந்தைகளுக்குக் கூறிய கதைகள்
பிரசாதம் உண்ணும் முன்பு பிரார்த்தனை
இன்றைய சேவை - 31.12 .22 சனிக்கிழமை - ஸ்ரீ சாரதா தேவி பாலர் பண்பாட்டு பயிற்சி மையம்- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.
கண்கள் அழகாக இருப்பதற்கு என்ன தேவை என்று கேட்டோம். கண்ணுக்கு மை வேண்டும், கேரட் சாப்பிட வேண்டும், கதிரவனைக் காண வேண்டும் என்றெல்லாம் குழந்தைகள் கூறினர்.
கண்ணிற்கு அழகூட்டுவது கவனமான கண்கள், கண் மூலம் வெளிப்படும் நம் கம்பீரம், கண் வழியாக வரும் நமது கருணை - இவையே கண்ணுக்கு அழகு சேர்க்கும் என விளக்கப்பட்டது.
அன்னை சாரதை சிறுவர் பண்பாட்டுப் பயிற்சி- 22.1.23- ஞாயிறு-ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம், தஞ்சாவூர்.
* தெய்வ பக்தி வளர்க்கும் பஜனைகள்
* உடலை உறுதி செய்யும் பயிற்சிகள் மற்றும் யோகாசனங்கள்
* பண்புகளை வளர்க்கும் கதைகள்
* சேர்ந்து உண்ணும் சுகம்இவற்றை அனுபவித்த குழந்தைகளின் குதூகலத்தைக் காணுங்கள்.
Annai Sarada Children's Cultural Training- 22.1.23- Sunday- Sri Ramakrishna Math, Thanjavur.
* Devotional Bhajans
* Body strengthening exercises and yoga poses* Character building stories
* Enjoy eating together
See the joy of the children who experienced these.
இன்றைய சேவை- 29.1.23- அன்னை சாரதா தேவி பாலர் பண்பாட்டுப் பயிற்சி
Today's service- 29.1.23- Shri Sharda Devi children training programs.
இன்றைய சேவை 5.2.23- ஞாயிறு- ஸ்ரீ சாரதா தேவி பாலர் பண்பாட்டு பயிற்சி-ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர். குழந்தைகளின் அகத்தையும் புறத்தையும் அருமையாக வளர்த்திட பஜனை யோகம் உடற்பயிற்சி கதை சொல்லல் சேர்ந்து உண்ணல் இவற்றைக் கண்டு ரசிக்க இந்தச் சிறு வீடியோக்களைப் பாருங்கள்.
இன்றைய சேவை- 26.2.23- ஞாயிறு- ஶ்ரீ ராமகிருஷ்ண மடம் தஞ்சாவூர்.
🌸 மடத்தில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற அன்னை ஸ்ரீசாரதா தேவி பாலர் பண்பாட்டு வகுப்பு இன்றுடன் நிறைவு பெற்றது. 25 மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள்.
பெற்றோர் பேசும்போது தங்கள் குழந்தைகள் இங்கு நிறைய குழந்தைகளோடு கலந்து பழகி நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டதாகக் கூறினர். மேலும் இங்கு சுவாமிஜி நடத்திய சத்சங்க வகுப்புகள் அவர்களுக்கு எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் கூறினர்.
🌸திருமதி மீனாட்சி குழந்தைகளுக்கு பஜன் வகுப்பு எடுத்து சிறப்பித்தார். சிலம்ப ஆசிரியர் திரு ஐயப்பன், மாணவர்கள் சுவாமி விவேகானந்தர் போல் வீரமுடன் திகழ வேண்டும் என்றார். திவாஸ் ரோட்டரி சங்கத்திலிருந்து திருமதி ஆனந்தி மற்றும் தீபா குழந்தைகளுக்கு விளையாட்டு வகுப்பும் பரிசுகளும் வழங்கினர்.
விழா முடிவில் சுவாமி ஜிதாத்மானந்த மகராஜ் மாணவ மாணவிகளுக்குச் சான்றிதழ்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் வழங்கினார்.