Physically Challenged People
கொரோனா 2.0 தொடர் மக்கள் சேவை - 10.7.21- சனிக்கிழமை.
திருவிடைமருதூர் ஒன்றியம், திருப்பனந்தாள் ஒன்றியம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி சிறுவர் சிறுமிகள் 300 பேருக்கு ரூ.1100/ மதிப்பிலான நிவாரண பொருள்களும் போர்வை ஒன்றும் இன்று வழங்கினோம்.
இதற்கான விழாவில் தமிழக அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் பங்குகொண்டு உரையாற்றினார். மேலும் அரசு செய்ய வேண்டிய சேவையை தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடம் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறது என்று குறிப்பிட்டு மடத்தின் சேவைகளைப் பாராட்டிப் பேசினார்.
திருப்பனந்தாள், காசி திருமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார சம்பத்குமார செண்பக மன்னார் சுவாமிகள் ஆகியோர் பயனாளிகளுக்கு மளிகை நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆசீர்வதித்தனர்.
கொரோனா தொடர் மக்கள் சேவை - 12.07.21 திங்கட்கிழமை.
திருத்துறைப்பூண்டியில் தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூலம் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கினோம். மிகவும் வேதனை தரும் வகையில் இன்று பல மாற்றுத்திறனாளிகளைக் கண்டோம். வயதான ஒரு தாய்க்கு வாய்பேசாத, படுத்த படுக்கையாக உள்ள மூன்று வாலிப மகன்கள். வீல்சேரில் காலத்தைக் கழிக்கும் விபத்தில் கை கால் இழந்தவர்கள், பிறவியிலிருந்தே கழுத்துக்குக் கீழ் எதுவுமே செயல்படாத நிலையில் உள்ளவர்கள் போன்ற சோகமான மக்களுக்கு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் பிரசாதமாக மளிகைப் பொருட்களை இன்று விநியோகம் செய்தோம்.
கொரோனா 2.0 தொடர் மக்கள் சேவை - 15.7.21- வியாழக்கிழமை.
திருப்பனந்தாள் ஒன்றியத்தில் வறிய நிலையில் உள்ள பள்ளி செல்லும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நமது தொண்டர்கள் நேரடியாக அவர்களது வீட்டிற்கே சென்று ரூபாய் 1100/- மதிப்பிலான மளிகைப் பொருட்கள் மற்றும் போர்வைகள் வழங்கினர். மேலும், இன்று மாலை துப்புரவுத் தொழிலாளர்கள் 20 பேருக்கு நிவாரணம் மடத்தில் வழங்கப்பட்டது.
Corona 2.0 Series of People's Service - 15.07.21- Thursday.
In Thiruppanandal Union, poor school going children were directly visited at their home and given groceries and blankets worth Rs.1100/- . Also, Relief was given to 20 sanitation workers at the math this evening.
திருத்துறைப்பூண்டி, திருமதி ஜெயம் அம்மாவின் வாழ்வாதாரத்திற்காக நிதி உதவியைக் கேட்டிருந்தோம். உடலாலும் மூளையாலும் ஒன்றும் செய்ய முடியாத மூன்று வாலிப மகன்களுடன் சிரமப்படும் ஜெயம் அம்மாவிற்கு நமது மடத்தின் மூலம் மளிகை கடை வைத்துக் கொடுத்தோம்.
அதற்கு சென்னையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பக்தர்களான திரு விஜயராகவன் மற்றும் அவரது துணைவியார் திருமதி காயத்ரியும் நிதியுதவி வழங்கினர். அந்தக் குடும்பத்திற்கு நன்றி.
ஆடி வெள்ளியன்று அன்னை ஸ்ரீசாரதா தேவியின் அருள் விளக்கு ஜெயம் அம்மாவின் வாழ்க்கையில் ஏற்றப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை சிரமமில்லாமல் நன்கு முன்னேற வேண்டும் என்று எல்லோரும் பிரார்த்தனை செய்து கொள்வோம்.