RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Covid 2.0 Relief Service - II

23.06.21 04:48 PM By thanjavur

Private Primary and Nursery Schools underpaid teachers, Barbers and Poor Peoples

நமது மடத்தின் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் 800 பேர், முடி திருத்துவோர் 300 பேர் தினக்கூலி தொழிலாளர்கள் 300 பேர், ஆட்டோ ஓட்டுனர்கள் 300 பேர் என மொத்தம் ஆயிரத்து 700 பேருக்கு ரூ. 17 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா இன்று 30.05.21 நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி செழியன், எம்.எல்.ஏக்கள் துரை சந்திரசேகரன், நீலமேகம், மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ், போலீஸ் எஸ்பி  தேஷ்முக் சேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


We have started the second phase of Covid-19 relief service today on 30.05.21, Sunday at 2 p.m at Thanjavur Medical College.

We have identified 800 Private Primary and Nursery Schools underpaid teachers from villages and towns in the revenue district of Thanjavur. They are low paid already, now during this pandemic they are getting minimum Rs. 1000 to 2000 per month with difficulty.

Today the Honorable Minister for School Education of Tamil Nadu Sri. Anbil. Mahesh Poyyamozhi attended our function where he started the distribution of assorted grocery kits worth Rs 1000/- each for the teachers. The Chief Whip of Tamilnadu government, the two Members of Legislative Councils of Thanjavur and Thiruvaiyaru and the District Collector of Thanjavur participated in the function.

Medical College, Thanjavur
 மடத்தின் கொரோனா காலத்து தொடர் சேவையில் தனியார் பள்ளியில் உள்ள மிகக் குறைந்த வருமானத்தில் பணிபுரிந்து வரும் 800 ஆசிரியர் பெருமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் (ஓர் ஆசிரியருக்கு ரூபாய் 1000/- மதிப்புள்ள மளிகைப் பொருட்கள்) வழங்குவது கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

    இந்தப் பணியில் சிரத்தையுடன் ஈடுபட்டிருப்பவர்கள் ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர்களான திரு. பாஸ்கர், திரு. ராமநாதன் மற்றும் அவரது குழுவினரும். பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று பொருட்களை நிர்வாகிகளிடம் கொடுத்து வருகிறோம். மிகவும் சிரமமான இந்தக் காலகட்டத்தில் தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மனிதநேயமிக்க இந்தச் செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கிறிஸ்தவ, இஸ்லாமிய பள்ளி நிர்வாகிகளும் கூறினர்.

கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக நிவாரணம் வழங்கப்பட்ட விவரம்.

07.06.2021
பள்ளிகளின் எண்ணிக்கை: 11
ஆசிரியர்களின் எண்ணிக்கை: 92

08.06.2021
பள்ளிகளின் எண்ணிக்கை: 20
ஆசிரியரின் எண்ணிக்கை: 148

    For the past one week, relief items (groceries worth Rs. 1,000 / - per teacher) have been distributed to 800 low-paid teachers at private schools as part of the Corona Relief service of Sri Ramakrishna Math, Thanjavur.
Those who are diligently engaged in this work are the devotees of Bhagavan Sri Ramakrishna, Sri. Bhaskar, Sri. Ramanathan and his team. We go directly to each school and give the items to the school administrators. Christian and Islamic management school officials also welcomed and appreciated the service.

Details of relief provided during the last two days in Kumbakonam educational district are as follows:

07.06.2021
No. of schools: 11
No. of teachers: 92


08.06.2021
No. of schools:20
No. of teachers:148
07.06.2021 & 08.06.2021
    நமது மடத்தின் சேவையில் தனியார் பள்ளியில் உள்ள மிகக் குறைந்த வருமானத்தில் பணிபுரிந்து வரும் 700 ஆசிரியர் பெருமக்களுக்கு ரூபாய் 1000/- மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் வழங்குவது நேற்றுடன் நிறைவு பெற்றது.
    
    ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் இந்தப் பணியை தஞ்சையில் தொடங்கி வைத்தவர் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள். அவர் தனியார் பள்ளி ஆசிரியர்களின் சிரமங்களை முதல்வருக்குத் தெரியப்படுத்தி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதாகக் கூறியிருந்தார். அதன்படி நேற்று தமிழக முதல்வர் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
    
    மக்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டு மடத்தின் மூலம் நிவாரணப் பணி அளிக்கப்பட்டதால், அந்தச் செயல்பாடு அரசின் கவனத்தை ஈர்த்தது. அதனால் ஒரு நல்ல காரியம் நடந்ததில் நமக்கு திருப்தி.
ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ணா.


    தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள நிவாரணத்திற்காக விண்ணப்பித்த 75 தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள மொத்தம் 700 ஆசிரியர்களுக்கு நிவாரணம் மளிகை பொருட்கள் ரூபாய் 7 லட்சம் செலவில் வழங்கப்பட்டது.


As part of the service by Sri Ramakrishna math, Thanjavur, the distribution of groceries worth Rs. 1000/- to 700 teachers (including school nurses) working in the lowest income group in private schools, was completed yesterday.

The service activity was inaugurated by the Hon'ble Minister of School Education, Mr.  Anbil Mahesh Poyyamozhi. He told that he will discuss with the Chief Minister of Tamil Nadu, the difficulties faced by private school teachers. Accordingly, the Chief Minister had issued a positive statement yesterday on the welfare of private school teachers.

We are happy that the small relief work done by us attracted the attention of the state. Jai Shri Ramakrishna!

Groceries at a cost of Rs 7 lakh were distributed as part of the relief work to a total of 700 teachers in 75 private nursery, primary and matriculation schools who applied for relief in Thanjavur Revenue District.

10.06.2021
    நமது மடம் சனிக்கிழமையன்று 05.06.21 காலையில் கொரோனாவினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 124 பேருக்கு --- ஆட்டோ டாக்ஸி மற்றும் வேன் ஓட்டுனர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்மணிகள் --- நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.    

    தஞ்சை மாவட்டத்தின் உயர் போலீஸ் அதிகாரி SP ஸ்ரீ தேஷ்முக் சேகர் சஞ்சய் ஐபிஎஸ் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Corona 2.0 Pandemic relief Service

05.06.2021, Saturday
Chief Guest: Sri. Deshmukh Shekhar Sanjay, I.P.S., Superintendent of Police
10.30 A.M - Van & Taxi drivers from Railway Station - 48
11.30 AM - Maid Servants - 34
12.30 P.M - Van & Taxi drivers from Old Bus Stand - 42

Totally 124 people are given ration kits today.

    நமது மடம் சனிக்கிழமையன்று 05.06.21 மாலையில் கொரோனாவினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 79 பேருக்கு ---ஆட்டோ, டாக்ஸி மற்றும் லோடு வேன் ஓட்டுனர்கள் --- நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
  
 Corona 2.0 Pandemic relief Service by Ramakrishna Math, Thanjavur - 05.06.2021
04.00 P.M - Load Van drivers - 38
04.30 P.M - Auto Drivers - 41

Total No. of beneficiaries: 79
05.06.2021
    நமது  மடம் ஞாயிற்றுக்கிழமையன்று 06.06.21 கொரோனாவினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 186 பேருக்கு ---முடி திருத்தம் செய்வோர், கட்டிடத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தினக் கூலிகள் --- நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

    Covid-2.0 relief service done by Ramakrishna math, Thanjavur. On 06.06.21, Sunday totally 186 beneficiaries - teachers, barbers, construction workers, flower vendors---received grocery kits and accepted our service.
06.06.2021
கொரோனா 2.0 தொடர் சேவை
08.06.21 செவ்வாய்.
மடம் அமைந்துள்ள சிவாஜி நகர் பகுதியில் உள்ள 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டன.

நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரித்துக் கொள்வது, ஆரோக்கிய வாழ்விற்கான அம்சங்களைப் பற்றி இயற்கை மற்றும் யோகா மருத்துவர் டாக்டர் கே. கலைமகள் ரவி, மற்றும் கிருத்திகா ரவி ஆகிய இருவரும் உரையாற்றினார்.

Corona 2.0 pandemic relief service done by Sri Ramakrishna Math, Thanjavur on 08.06.21. Distributed grocery kits to 50 poor people, each worth Rs.1000/-. Also Dr. Kalaimakal, Naturopathist gave tips on health and how to increase immune power to the people.

08.06.2021
11.06.21, வெள்ளிக்கிழமை.
தஞ்சாவூருக்கு அருகில் உள்ள புதுக்குடி கிராமத்தின் 78 நரிக்குறவ மக்களுக்கு இன்று நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்தோம்.

அந்த மக்களிடையே உரையாடும்போது அவர்களது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்று வேண்டிக் கொண்டு வந்தோம்.

    We distributed relief items today to 78 destitute people belonging to the Gypsy community of Pudukudi village near Thanjavur.

11.06.2021 for Gypsy People
கொரோனா தொடர் சேவை - 12.06.2021 சனிக்கிழமை.
நாட்டுப்புற இசைக்கலைஞர்கள்: 18
கரகாட்டகலைக்குழு: 49
மேடை நடன கலைஞர்கள் : 57
இந்திராநகர் கரகாட்ட குழு: 14
கிராமிய கலைக்குழு: 54
மொத்த பயனாளிகள் : 192
    தலா ரூ. ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் பிரசாதமாக வழங்கப்பட்டது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் எவ்வித நோயும் நம்மை அணுகாமல் காத்துக் கொள்ளலாம். நீராகாரம் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சிறப்பு விருந்தினர் வேளாண்மைச் செம்மல் தஞ்சாவூர் கோ. சித்தர் எடுத்துரைத்தார்.

    மாலை சிறப்பு நிகழ்வாக மடத்தின் மேல்தளத்தில் பிரகதீஸ்வரர் கோயில் விமான தரிசனத்துடன் கிராமியக் கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
 

Time

Beneficiaries

Nos

10.00 am

Folk Artist – Vocal

18

10.30 am

Karakattam - Cultural Dance Troupe

49

11.30 am

Stage Dancers

57

04.30 pm

Karagattam Female Artists

14

05.00 pm

Village Folk artists

54

 

Total Beneficiaries

192

 

As the prasadam of Bhagwan Sri Ramakrishna each of them were given Rs 1000/- worth Groceries kit. Thanjavur Ko. Siddhar presided over the event. Gist of his talk: By taking proper nutritious food we can save our body from many diseases. Water based food supplements will help to enhance our bodily defense mechanisms. 

As thanks giving the artists gave a short performance on the terrace of the math. You can see the Lord Brahadeeshwara temple from our terrace.

12.06.2021
கொரோனா தொடர் சேவை- தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடம் - 13.06. 21- ஞாயிறு.
வாழ்வாதாரமின்றித் தவிக்கும் ஏழை நெசவாளர்கள்: 100
பல்வேறு வகையான சமுதாயத் தொண்டர்கள்: 35
வேலையின்றித் தவிக்கும் தனியார் புகைப்படக் கலைஞர்கள்: 60
இன்றைய மொத்தப் பயனாளிகள் : 195

தலா ரூ. ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் மேற்கூறிய பயனாளிகளுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது.
மகாராஜா சில்க்ஸ் பிரபல தொழிலதிபரான ஹாஜி திரு. முஹம்மது ரஃபி அவர்கள் கலந்துகொண்டு மடத்தின் நற்பணிகளைப் பாராட்டினார். மாலையில் தொழிலதிபர் திரு சதீஷ் குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்

Covid 2.0 series of Relief activities - 13.06.2021, Sunday.

 

 

Time

Beneficiaries

Nos

10.00 am

Poor Weavers

100

11.30 am

Social Workers who are working for covid patients

35

05.00 pm

Private Jobless Photographers

60

 

Total Beneficiaries

195

 

As the prasadam of Bhagawan Sri Ramakrishna each of them were given Rs 1000/- worth Groceries kit.

 

Generally, in all our services, we invite income affected and selected groups of people and make them listen to Swami ji and his teachings and give a laminated picture of the Holy Trinity. Also there will be a collective prayer very suitable to the present pandemic state in which all participate with the Shraddha.

 

13.06.2021


thanjavur