பக்தி ரச கீதம் - 9

13.07.22 06:37 PM - By thanjavur

ஞான தீபமே த்யான ரூபனே ஸ்ரீ விவேகானந்தனே

சரணம் சரணமே

ஞாலம் புகழ்ந்திடும் தேவதேவனே நாளும் பாடுவோம்

உன்தன் நாமமே

ஸப்தரிஷிகளின் ஒருவராய் வந்தாய் சாதுசங்கத்தை

தரணிக்கு தந்தாய்

பரமஹம்ஸராம் ராமகிருஷ்ணரின் பாதம் போற்றிய

ஞானதேசிகா (ஞான தீபமே)

ஜீவ சேவையே சிவ சேவையானது வாழ்ந்து காட்டிய

வீர துறவியே

த்யாக சீலரே ஆனந்த வாரியே உம் வாழ்வும்

வாக்குமே வேதமானது (ஞான தீபமே)

தொன்றும் துறவுமே வாழ்வின் லட்சியம்

என்றுணர்த்திய கரும வீரனே

இந்து தருமத்தை உலகில் உயர்த்திக்க

தெய்வமே உன்னை வாழ்த்தி வணங்குவோம்

விவேகானந்தனே சரணம் சரணமே(4)

இந்தப் பாடலை கேட்க

thanjavur