பக்தி ரச கீதம் - 7

29.06.22 06:29 PM - By thanjavur

சிந்துபைரவி - த்ரிதாள்

 

அன்னபூரணி அம்மா சாரதாமணி - நீ

அம்பிகை துர்கா பெயரில் அசுரநாசினி

 

சிம்மவாஹினி அம்மா சீதளாவும் நீ - சிவ

சங்கரியாய் உலகை காத்து அழிப்பவளும் நீ

 

இகபரசுக தாயினி எங்கள் இதயவாசினி

ஈஸ்வரனில் பாதி நீ இஹமோக காரிணி

 

உள்ளும் புறமும் எங்கும்

எதிலும் உறையும் தேவி நீ

உண்மை தேடும் அடியவர்க்கு

உதவும் தெய்வம் நீ

 

எள்ளில் எண்ணெய்போலே

எங்கள் உயிரில் கலந்த தாயே

ஏங்குதம்மா நெஞ்சம்

உனை காண அருள்வாயே

 

ஐயம் ஒன்றும் இல்லையம்மா

உன் அன்பின் மீதிலே

எங்கள் ஐம்புலனை பலி

கொடுத்தோம் மாய உலகிலே

ஒன்று என்று பேசுதம்மா

வேதங்கள் உம்மை - ஓம்

சக்தி என்று பாடுகிறோம்

பக்தர்கள் உம்மை

இந்தப் பாடலை கேட்க

thanjavur