RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

பக்தி ரச கீதம் - 3

02.06.22 01:57 PM By thanjavur

ராகம்: கமாஸ்

தாளம்: ஆதி

இயற்றியவர்: கோவை ஸ்ரீனிவாசன்

 

பல்லவி

 

நான் என்ன தவம் செய்தேனோ - ஸ்ரீ

ராமகிருஷ்ணர் பாதமலரில்

மனத்தை இருத்தி மகிழ்ந்துப் பாட

 

அனு பல்லவி

 

ஆண்டவனை காண அதிசய தவம் செய்த

ஆன்மீக அரசனை அனுதினமும் பாட

(நான் என்ன தவம் செய்தேனோ...)

 

சரணம்

 

பக்தியோ ஞானமோ கர்மயோகமோ

சக்தியோ சிவனோ ராமனோ கிருஷ்ணனோ

அல்லாவோ யேசுவோ வேர் என்ன பேரோ

எல்லாம் ஒன்றென உறுதியாய் உணர்ந்தவர்

 

சீடர் நலத்தில் சிந்தைக் கொண்டு

வீடு வீடாக தேடி சென்றவர்

காட்டிலே அடையும் கடும் தவ பயனை

வீட்டிலே வந்து விரும்பி தந்தவர்

 

ராமகிருஷ்ண சரணம் ராமகிருஷ்ண சரணம்

ராமகிருஷ்ணர் ராமகிருஷ்ணர் சரணம் என்றிடவே

(நான் என்ன தவம் செய்தேனோ...)

 

 

Raga: Ananda Bhairavi

Tala: Adi

Composer: Coimbatore Srinivasan

 

Pallavi

 

Naan Enna Tavam Seydeno — Sri

Ramakrishnar Paada Malaril

Manattai Irutti Magizhndu Paada

 

Anu Pallavi

 

Aandavanai Kaana Atisaya Tavam Seyda

Aanmeega Arasanai Anudinamum Paada

(Naan Enna Tavam Seydeno...)

 

Charanam

 

Bhaktiyo Njaanamo Karmayogamo

Saktiyo Sivano Ramano Krishnano

Allavo Yesuvo Verenna Pero

Ellam Ondrena Urudiyaay Unarndavar

 

Seedar Nalattil Sindai Kondu

Veedu Veedaaga Tedi Sendravar

Kaattile Adaiyum Kadum Tava Payanai

Veettile Vandu Virumbi Tandavar

 

Ramakrishna Saranam Ramakrishna Saranam

Ramakrishnar Ramakrishnar Saranam Endridave

(Naan Enna Tavam Seydeno...)

இந்த பாடலை கேட்க

thanjavur