RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

பக்தி ரச கீதம் - 10

20.07.22 06:34 PM By thanjavur

இந்தப் பாடலை கேட்க

ஸ்ரீகாளி இதயவாசன் எங்கள்

ஸ்ரீராமகிருஷ்ணர் அவள் நேசன்

ஸ்ரீகுருதேவர் எங்கள் மகராஜன் - மனித

சேவையில் என்னாளும் தாசானுதாசன் (ஸ்ரீ)

 

ஆதவன் ஒளி வீசும் முகமே அவர்

அருளாலும் அன்பாலும் வளமாகும் ஐகமே

மாதவம் செய்யும் அவர் அகமே - அவர்

மலர்ப்பாதம் மாந்தர்க்கு தரும் நல்ல சுகமே (ஸ்ரீ)

 

இருள் நீக்கி வழிகாட்டும் போதம் - குருவின்

இதயத்தில் ஒலித்திடும் ஸ்ரீகிருஷ்ண கீதம்

மருள் போக்கும் உபதேசம் வேதம் - அவர் முகம்

கண்டால் மறுகணமே மறையும் மதபேதம் (ஸ்ரீ)

 

தாரத்தைத் தாயாகப் பார்க்கும் இந்த

தாரணியும் தவறாது அவர் சொல்லைக் கேட்கும்

பூரணமே அவர் பேச்சில் பூக்கும் - இந்த

பூமியினை அவர் பார்வை நலமோடு காக்கும் (ஸ்ரீ)

 

 

thanjavur