இன்றைய சேவை- 28.7.23- வெள்ளிக்கிழமை
ராமகிருஷ்ணன் மிஷன் மல்லியங்கரணை கிளை நடத்திய இளைஞர் முகாமில் 300 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். டாக்டர் சத்யகுமார், சுவாமி பரமசுகானந்தர் மற்றும் சுவாமி விமூர்த்தானந்தர் சிறப்புரையாற்றினார்கள்.
அக்ஷியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாமிலிருந்து சுவாமி விவேகானந்தருக்குப் பல இளம் தொண்டர்கள் சமுதாய சேவையாற்றுவதற்கு முன் வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.