இன்றைய சேவை-11.3.23- சனிக்கிழமை
ஆண்டுக்கு ஒரு முறை பெண்களைக் கொண்டாடுவது அந்நிய பழக்கம். அனுதினமும் பெண்களைப் போற்றுவது நம் மரபு.
தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் ராயல் மற்றும் விஜயா மகளிர் விடுதி பெண்கள் தினத்தை இன்று கொண்டாடியது. நல்ல கருத்துகளை இளம் உள்ளங்களில் கொண்டு சேர்க்கும் வாய்ப்பினை அடியேனுக்கு அன்னை சாரதை இன்று வழங்கினார்.
காட்டில், இருட்டில் இளம் பெண்ணாகத் தனிமையில் தவித்தார் அன்னை சாரதை. அங்கு வந்த கொள்ளைக்காரனை அப்பா என்று அழைத்து அவரை அன்பால் மாற்றிப் பெருமை சேர்த்த வரலாற்றைப் பெண்கள் கூர்ந்து கேட்டனர்.
'என்னால் உலகைப் பார்க்க முடியாதுதான். ஆனால் உலகம் என்னைப் பார்க்கும் வகையில் நான் வாழ்ந்து காட்டுவேன்' என்று கூறிய கண் காது வாய் வேலை செய்யாத ஹெலன் கெல்லர் பற்றிக் கூறினோம்.