திருநங்கைகள் மீது பலரும் அனுதாபம் காட்டுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேண்டியது அதுவல்ல. மாறாக, அவர்கள் சொந்தக் காலில் நின்று வாழும் தன்னம்பிக்கையே அவர்களுக்குத் தேவை. தன்னம்பிக்கையைப் பெற அவர்களுக்கு முறையான வாழ்வாதாரம் தேவைப்படுகிறது.
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் திருநங்கைகளுக்காக ஏற்கனவே மூன்று பசுக்களையும் நான்கு கன்றுகளையும் வழங்கி அவர்களது வாழ்வாதாரத்திற்காக ஓரளவிற்கு வழி வகுத்துள்ளது.
இன்று 13.11.22 தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள உதாரமங்களத்தில் வசிக்கும் திருநங்கைகளான சத்யா மற்றும் அவரது குழுவினர் வளர்த்து வரும் பசுக்களுக்கு 'ஸ்ரீசாரதாம்மா கோசாலை' என்ற பெயரில் மாட்டுக் கொட்டகை ஒன்றினை ரூபாய் ஒரு லட்சம் செலவில் அமைத்துத் தந்தோம்.
ஸ்ரீராமகிருஷ்ண பக்தரான திரு வெங்கடேசன் குடும்பத்தினர் இந்த மாட்டுக்கொட்டகை அமைத்துத் தர நிதி வழங்கினர். நீதிபதி திரு எஸ். சத்தியமூர்த்தி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருநங்கைகளைத் தொழில்முனைவர்களாக மாறி, பிறரை எதிர்பார்க்காமல் வாழ வேண்டுமென்று வாழ்த்தி ஊக்குவித்தார்.