இன்றைய சேவை -11.6.23-சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடம், தொழுநோய் சிகிச்சை, நிவாரணப் பணிகள், மறுவாழ்வு பணிகள் போன்றவற்றைத் தொடர்ச்சியாக கடந்த 38 வருடங்களாகச் செய்து வருகிறது.
அந்தச் சேவையின் விரிவாக்கமாக கும்பகோணத்தில் இது போன்ற பணியை ஆற்றி வரும் வள்ளலார் மறுவாழ்வு இல்லத்தில் பயனாளிகளுக்கான சிகிச்சை தொடக்க விழா இன்று நடைபெற்றது.
அந்தத் தொண்டின் ஓர் அங்கமாக அந்த இல்லத்தில் உள்ள 20 தொழுநோய் பயனாளிகள் வசதியாக உறங்க மெத்தைகள் வழங்க ஏற்பாடு ஆகியுள்ளது.
விரைவில் மடத்தின் மூலம் பல் சிகிச்சை நடைபெறவும் ஆவன செய்துள்ளோம்.
Today's service : 11.06.2023
Chennai, Ramakrishna math is offering leprosy treatment and rehabilitation for past 38 years. Today with the continuation of that service it's been extended in Kumbakonam along with vallalar leprosy rehabilitation centre. Wound debridement materials given from math.
20 beds will be offered to the patients who are getting treated there. Free Dental camp will be organised for those all patients soon along with Ramakrishna Math, Thanjavur.