இன்றைய சேவை – 2.4.26 – வியாழக்கிழமை – தொழில் முன்னேற்றத்திற்கான சேவை
கும்பகோணத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஸ்ரீராமகிருஷ்ண-விவேகானந்தா டிரஸ்ட் பல நல்ல பக்தர்களை உருவாக்கியுள்ளது. அவர்களுள் ஒருவரான திரு. செல்வம் மற்றும் திருமதி. மாலதி செல்வம் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள மூன்று சக்கர வாகனம் ஒன்றை நமது மடம் வழங்கியது.
அந்த வாகனத்தை இன்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அர்ப்பணித்து, அதன் மூலம் அவர்கள் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தமது தொழிலை வளர்த்துக் கொண்டு நன்றாக வருமானம் பெற வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் திரு. செல்வம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

