*பார்வை திறனற்றவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி* பார்வை குறைபாடு உடையவர்களும் பிறரைப் போல ஓடியாடி விளையாடி சந்தோஷமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க விரும்புவார்கள், அல்லவா? மாற்றுத் திறனாளிகளின் திறன்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில்தான் நமது பரிவு இருக்க வேண்டும். வெறும் இரக்க உணர்ச்சி மட்டுமே அவர்களுக்குப் பிடிப்பதில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கும் தன்னம்பிக்கை தருவதற்காக சென்னையைச் சேர்ந்த அருட்பெருஞ்ஜோதி அன்னதான மிஷன், தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துடன் இணைந்து பார்வை திறனற்றவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி ஒன்றை 4.6.22 அன்று தொடங்கியது. மறுநாள் பரிசளிப்பு விழா நடக்க உள்ளது. மொத்தம் 120 வீரர்கள் அடங்கிய 15 அணிகள் இதில் கலந்து கொண்டன. டாக்டர் பத்மா மற்றும் அவரது குழுவினர் பூண்டி, புஷ்பம் கல்லூரி வளாகத்தில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.