மனிதனை மனிதனாக்கும், பண்பு நலன் உடையவர்களாக்கும் கருத்துகளைப் பற்றி சுவாமி விமூர்த்தானந்தர் திருவாரூரிலுள்ள டிரினிட்டி அகடமி பள்ளியின் + 1 மற்றும் + 2 மாணவ மாணவிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
இதில் கலந்துகொண்ட 100 பேரும் நல்லவர்களாகிய நாம் சிறந்தவர்களாகவும் மாறுவோம் என்று உறுதிமொழி பூண்டனர்.
"மாணவனே, உனது உண்மையான வளர்ச்சியின் மீது கவனம் வை; உண்மையான மனிதர்களின் கவனம் பெறுவாய்" என்பது என் உரையின் சாரம்.
Today's service - 09.08.2023 - Wednesday
The 125th Anniversary Celebrations of the Ramakrishna Mission
As a part of the 125th Anniversary Celebrations of the Ramakrishna Mission, we conducted a youthConvention for Students’ Better Performance at The Trinity Academy School, Tiruvarur. Swami Vimurtananda gave a lecture for + 1 and + 2 students about the ideas that make an ordinary human being an extraordinarily great person. All the 100 pupils who participated in it pledged that they would become great from good.
ஓர் உற்சாகமான கூட்டுப் பிரார்த்தனை இது.
ஒவ்வொரு மாணவனும் மாணவியும், ஒவ்வொரு மனிதனும் திறம்பட வாழ்வதற்கான ஒரு கூட்டுப் பிரார்த்தனை இது.
திருவாரூரிலுள்ள ட்ரினிட்டி அகடமி பள்ளி மாணவ மாணவிகள் என்ன அருமையாக இந்தப் பிரார்த்தனையை உள்வாங்கினார்கள் என்பதைக் கவனியுங்கள்!
உங்களுக்குத் தெரிந்த இளைஞர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் இந்தப் பிரார்த்தனையைப் பகிருங்கள். சுவாமி விவேகானந்தர் கண்ட இளைஞர்கள் பலரும் நம் சமுதாயத்தில் தோன்றுவார்கள்.
It is a collective prayer for every student and every human being to live effectively in Tamil.
See how beautifully the students of Trinity Academy School, Thiruvarur absorbed this prayer! Share this prayer with the youth and students you know. Many of the youth that Swami Vivekananda saw will appear in our society.
இன்று இந்தச் சேவையைச் செய்தோம் - 12.8.23 - சனி.
கோணம்பட்டி, சிவகாசி, ஸ்ரீராமகிருஷ்ண - சாரதா ஆஸ்ரமம், இன்று நடத்திய 14- ஆம் ஆண்டு ஆசிரியர் புத்துணர்வு முகாமில்150 ஆசிரியர்கள் 31 பள்ளி கல்லூரிகளிலிருந்து கலந்து கொண்டனர்.
"உயிரோட்டமுள்ள ஆசிரியர்களே, மாணவர்களுக்கு உயிரூட்ட வாருங்கள்" என்ற தலைப்பில் சுவாமி விமூர்த்தானந்தர் சிறப்புரை நிகழ்த்தினார். திரு பிரபாகரன் தலைமையில் ஆசிரமம் சிறப்பான ஆசிரியர்களை உருவாக்கும் இப்பணியில் ஈடுபட்டுள்ளது.
Today's service - 12.8.23 - Saturday.
150 teachers from 31 schools and colleges participated in the 14th annual Teacher Refresher camp organized by Sri Ramakrishna - Sarada Ashram, Konampatti, Sivakasi today.
Swami Vimurtananda delivered a keynote address on the topic "Vibrant teachers.! Come to enliven the students". Under the leadership of Sri Prabhakaran, the Ashram is engaged in this work of producing excellent teachers.
இன்று இந்தச் சேவை செய்தோம் - 21.8.23 - திங்கட்கிழமை
கும்பகோணம் அருகிலுள்ள அம்மாசத்திரத்தில் இன்று ஸ்டார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500 மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் முழு தினமும் கல்விச் சேவை செய்ய முடிந்தது.
மாணவர்களின் முழு வளர்ச்சிக்கான பத்து அன்பு கட்டளைகளையும் ஆசிரியர்களுக்கான ஐந்து நம்பிக்கைகளையும் பற்றி சுவாமி விமூர்த்தானந்தர் உரையாற்றினார்.
இந்தப் பள்ளி தேசிய நடனுக்காகவும் சர்வ சமய நல்லிணக்கத்திற்காகவும் அறிவியல் ஆராய்ச்சிக்காகவும் சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் நல்ல முயற்சி எடுத்து சாதித்தும் வருகிறது. அந்த வகையில் பள்ளித் தாளாளர் திரு எஸ்.எம். மார்டின் கடும் உழைப்பாளி. அவருக்கு நம் பாராட்டுக்கள்.
The 125th Anniversary Celebrations of the Ramakrishna Mission
As a part of the 125th Anniversary Celebrations of the Ramakrishna Mission, we conducted a Youth Convention for Students’ better performance and value education for teachers at Star Matriculation Higher Secondary School, Ammachathiram, Kumbakonam. Swami Vimurtananda gave three lectures for students and one for Teachers.
A total of 500 students and 60 teachers participated in the programme.
இன்று இந்தச் சேவையைச் செய்தோம் - 23.8.23- புதன்கிழமை
தஞ்சாவூர் அருகிலுள்ள கிராமத்துப் பெண்கள் படிக்கும் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று சுவாமி விமூர்த்தானந்தர் உரையாற்றினார்.
பெண்ணே, நீ நல்லவள்; விரைவில் சிறந்தவளாகு! என்பது உரையின் சாரம்.
Today's service - 23.8.23 - Wednesday
Swami Vimurtananda addressed at Dr. Nalli Kuppusamy Chettiar College of Arts and Science, which is for village girls students in and around Thanjavur.
"Girls, you are good; Get better soon!" was the essence of the text.