சுவாமி விவேகானந்தர் தஞ்சைக்கு விஜயம் செய்த தினம் -3.2.23
ஒரு புத்துணர்ச்சிப் பேரணியும் எழுச்சிமிகு சிந்தனைக் கூட்டமும் தஞ்சையில் நமது மடத்தின் மூலம் ஏற்பாடாகி இருந்தன. திடீரென்று இன்று காலை டெல்டா மாவட்டங்களில் கன மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
அதன் காரணமாக பெரிய அளவில் ஏற்பாடெல்லாம் ஆகியிருந்தாலும் சிறிய அளவில் நிகழ்ச்சிகள் சீர்மையாக நடந்தது. நிறைவாக ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோவில் வளாகத்தில் 500 பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்தச் சிறிய வீடியோ பதிவைக் கண்டு களியுங்கள்.
சுவாமி விவேகானந்தரின் கும்பகோணம் விஜய விழா - 05.02.2023
1897, பிப்ரவரி 3-ஆம் தேதி கும்பகோணம் சென்றார். அங்கு மூன்று நாட்கள் தங்கியதை முன்னிட்டு பிப்ரவரி 5- ஆம் தேதி கும்பகோணம் ரயில்வே நிலையம் மற்றும் போர்ட்டர் டவுன்ஹாலில் விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு நிகழ்ச்சிகளும், தொடர்ந்து சரஸ்வதி பாடசாலை பள்ளி வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் சிலம்பாட்டம், கராத்தே உள்ளிட்ட வீர சாகச நிகழ்ச்சிகள் நடந்தது.
நகர மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் அரசு கவின் கலை கல்லூரி மாணவர்களின் விவேகானந்தர் ஓவியத் திருவிழா நிகழ்ச்சியில் 101 மாணவர்கள் பங்கேற்றனர். சிறந்த ஓவியங்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இன்றைய சேவை 9.2. 23- வியாழக்கிழமை.
சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்திற்கு விஜயம் செய்த தினங்களை (பிப்ரவரி 3, 4, 5) முன்னிட்டு அரசினர் ஆடவர் கல்லூரியின் இந்திய பண்பாட்டு மற்றும் சுற்றுலாத்துறை மாணவ மாணவிகள் மத்தியில் 'இளைஞர்களும் சுவாமி விவேகானந்தரும்' என்ற தலைப்பில் சுவாமி விமூர்த்தானந்தர் சிறப்புரையாற்றினார்.
இந்தக் கல்லூரிக்கு சுவாமி விவேகானந்தர் சென்றிருப்பதாகத் தகவல் உள்ளது. அதனைத் தக்க ஆதாரங்களுடன் பதிவு செய்யுமாறு கல்லூரியின் முதல்வர் மாணவர்களைக் கேட்டுக் கொண்டது மிகவும் பாராட்டத்தக்க ஒன்று.
சுவாமி விவேகானந்தரின் கும்பகோண விஜயத்தைக் கொண்டாடும் வகையில் அரசு கவின் கலைக்கல்லூரியில் ஓவியத் திருவிழாவை சில நாட்களுக்கு முன்பு நடத்தினோம்.
2 நிமிட இந்த வீடியோவில் 110 மாணவ மாணவிகளின் படைப்புகள் உங்கள் பார்வைக்காக உள்ளன. கண்டு களியுங்கள்.
Organized a Art festival at Govt Fine Arts College to celebrate Swami Vivekananda's visit to Kumbakonam. 110 students created various works. The creations are for your viewing pleasure in this 2-minute video.