இன்றைய சேவை- 26.12.22- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரி மாணவ மாணவிகளுக்கு 'சுவாமி விவேகானந்த ஓவியத் திருவிழா'வின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
Today's Service- 26.12.22- Ramakrishna Math, Thanjavur.
On the occasion of National Youth Day, the inaugural function of 'Swami Vivekananda Painting Festival' was held today for the students of Government Fine Arts College, Kumbakonam.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான தேசிய இளைஞர் தின விழா- 2023.
ஜனவரி 2 முதல் 6 வரை தஞ்சாவூரின் பல பள்ளிகள் கலந்து கொள்ளும் 'சுவாமி விவேகானந்த ஓவியத் திருவிழா' நடைபெற்று வருகிறது. வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வரையும் காட்சி.
National Youth Day Celebration - Swami Vivekananda's Birthday- 2023.
The 'Swami Vivekananda Painting Festival' is being held from January 2 to 6 in which many schools of Thanjavur are participating. A scene drawn by students of Venkateswara Matriculation High School.
ஒவ்வொரு வீட்டிற்கும் உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் விரும்பினார். அவரது அந்த விருப்பத்தை ஈடேற்ற அவரது திருவுருவப்படத்தையும் பொன்மொழிகளையும் போற்றுவதற்கான ‘வீடுதோறும் விவேகானந்தர்' என்ற திட்டத்தை தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்துள்ளது.
03.01.2023 அன்று தஞ்சையில் சுந்தரம் நகர், முனிசிபல் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள 500 இல்லங்களுக்கு நமது பக்தர்கள் சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படங்களைக் கொண்டு சென்றனர். மக்கள் தங்கள் வீட்டு விழாவாகக் கொண்டாடும் வகையில் இதனை எவ்வாறு நடத்துவது என்ற துண்டுப் பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர்.
ஜனவரி மாதம் 7-ஆம் தேதியிலிருந்து 17-ஆம் தேதி வரை இந்த இல்லங்களில் சுவாமிஜியின் படங்களை வைத்து ஆராதிக்க உள்ளார்கள்.
Swami Vivekananda wanted to bring higher thoughts to every house. To fulfill his wish, Ramakrishna Math, Thanjavur has organized a program called 'Vivekananda at each home' to honor him and his teachings.
On 03.01.2023, our devotees took photos of Swami Vivekananda at 500 houses in Sundaram Nagar, Municipal Colony, Thanjavur. They also distributed pamphlets on how to celebrate it as their home festival. From 7 to 17, January, Swamiji's photos will be worshiped in these houses.
தேசிய இளைஞர் தின விழா- தேசிய மேல்நிலைப் பள்ளி மன்னார்குடி- 6.1.23- வெள்ளிக்கிழமை.
+ 2 படிக்கும் 250 மாணவர் மாணவிகளுக்கு சுவாமி விவேகானந்தரை அறிமுகம் செய்தோம். வாழ்க்கையில் நல்ல ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற அக்னி அவர்களுக்குள் தூண்டப்பட்டது.
"சுவாமிஜி, நாங்கள் படித்து முடித்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு உங்களைச் சந்திக்கும்போது சமுதாயத்தில் சிறந்த நிலையில் நாங்கள் இருப்போம்" என்று பல மாணவ மாணவிகள் சுவாமிகளிடம் கூறிவிட்டுச் விட்டு சென்றனர்.
National Youth Day Celebration- National High School, Mannarkudi- 6.1.23- Friday.
Introduced Swami Vivekananda to 250 students studying + 2. "Swamiji, When we meet you five years after graduation, we will be in a better position in society," many students said to the Swami and left.
தேசிய இளைஞர் தின விழா- 7.1.23, சனிக்கிழமை. ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்
வீடுதோறும் விவேகானந்தர் திட்டத்தின்படி, இன்று தஞ்சையில் சுமார் 100 வீடுகளுக்குத் துறவிகள் சென்று சுவாமிஜியை பிரதிஷ்டை செய்து வந்தோம்.
டாக்டர் சத்யகுமார் மற்றும் திரு. சூர்யா அவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று
1. மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி (150 மாணவ மாணவிகள்)
2. பாரத் கலைக்கல்லூரி (50) மற்றும்
3. லிட்டில் ஸ்காலர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் (200) சிறப்பாக நடைபெற்றன. அனைவருக்கும் 'மாணவர்களுக்கு விவேகானந்தர்' என்ற நூல் விவேகானந்த விட்டமினாக வழங்கப்பட்டது.
National Youth Day Celebration- 7.1.23, Saturday. Sri Ramakrishna Math, Thanjavur
According to 'Vivekananda to Every Home' scheme, today in Thanjavur, monks visited around 100 houses and consecrated Swamiji in those houses.
Dr. Satyakumar and Sri. Surya's special programs were held today
1. Marudupandiyar College (150 students),
2. Bharat College of Arts and science (50),
3. The Little Scholars Hr. Sec. School (200).
Everyone was given the book 'Vivekananda for Students' as Vivekananda Vitamin.
தேசிய இளைஞர் தின விழா- 8.1.23, ஞாயிற்றுக்கிழமை. ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்
வீடுதோறும் விவேகானந்தர் திட்டத்தின்படி, இன்றும் தஞ்சையில் முனிசிபல் காலனியில் சுமார் 100 வீடுகளுக்குத் துறவிகள் சென்று சுவாமிஜியை பிரதிஷ்டை செய்து வந்தோம். விவேகானந்த சிங்கக்குட்டி சிறுவன் ஒருவன் பேசி மக்களை நன்கு ஈர்த்த வீடியோவையும் பாருங்கள்.
டாக்டர் சத்யகுமார் மற்றும் திரு. சூர்யா அவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று
1. அரசு போட்டித் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்குச் சிறப்பு பயிலரங்கம் தஞ்சை மாவட்ட மைய நூலகத்தில் காலையில் நடைபெற்றது. 25 இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.
2. பாரத் டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட் மாணவ மாணவிகளுக்கு ஊக்க உரைகள் நிகழ்த்தப்பட்டன. 90 இளைஞர்கள் இதில் பங்கு பெற்றனர்.
அனைவருக்கும் 'மாணவர்களுக்கு விவேகானந்தர்' என்ற நூல்கள் ஆளுக்கு இரண்டு பிரதிகள் வழங்கப்பட்டன. ஒரு பிரதி அவர்கள் வாசிப்பதற்கும், இன்னொன்று அவர்களது முக்கியமான நண்பர்களுக்குத் தரவும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியைப் பார்த்து மகிழ இந்த லிங்கைப் பார்க்கவும்.
National Youth Day Celebration- 8.1.23, Sunday. Sri Ramakrishna Math, Thanjavur
According to Vivekananda's house-to-house scheme, even today, monks visited about 100 houses in Thanjavur Municipal Colony and consecrated Swamiji.
Dr. Satyakumar and Sri.Surya's special programs today
1. A workshop was held in the Tanjore District Central Library in the morning for the students writing the government competitive examination.
2. Motivational speeches were given to the students of Bharat Typewriting Institute. 90 youth participated in it.
All were given two copies of 'Vivekananda for students' books. One copy was given to them to read and another to give to their friend.
தேசிய இளைஞர் தின தொடர் விழா- 9.1.23, திங்கட்கிழமை.
திருவாரூரில் உள்ள விவேகானந்தம் வித்யாஸ்ரம் மற்றும் டிரினிடி அகடமி பள்ளிகளில் சிறப்பாக விழா நடந்தது. சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை அவர் நம்மை மெச்சும்படி இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை மற்றும் பயமின்மை கருத்துகளை உரைகள் மற்றும் நூல் விநியோகம் மூலமும் வழங்கினோம்.
National Youth Day Series of Celebration- 9.1.23, Monday.
A special function was held at Vivekanandam Vidyashram and Trinity Academy schools in Tiruvarur. Celebrated Swami Vivekananda's birthday by giving speeches and distributing books to inspire youth to be self-confident and fearless.
தேசிய இளைஞர் தின விழா - 11.1.23 - புதன்.
தஞ்சையில் 20 பள்ளிகளில் இருந்து 400 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட சுவாமி விவேகானந்தர் ஓவியத் திருவிழா (போட்டி அல்ல) சிறப்பாக நடைபெற்றது. இந்தத் திருவிழாவின் இறுதிக் கட்ட நிகழ்வு மடத்தில் நடந்து பரிசளிப்பு விழாவும் நிகழ்ந்தது.
National Youth Day Celebration - 11.1.23 - Wednesday
400 students attended the Swami Vivekananda Painting Festival (not a competition) from 20 schools in Thanjavur. The final event of the festival was held at math and the prize-giving ceremony took place.
தேசிய இளைஞர் தின தொடர் விழா- 12.1.23, வியாழக்கிழமை.National Youth Day Series- 12.1.23, Thursday.
தேசிய இளைஞர் தின தொடர் விழா- 12.1.23, வியாழக்கிழமை.
National Youth Day Series- 12.1.23, Thursday.
இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா மடத்தின் சார்பில் பல்வேறு ஊர்களில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
1. காலை நமது நகர மையம் உள்ள சிவாஜி நகர் தெருவில், பல்வேறு இடங்களில் வீடுதோறும் விவேகானந்தர் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
Today, Swami Vivekananda's birthday was celebrated in various places on behalf of the Math.
1. Celebrated Vivekananda house to house in various places in Shivaji Nagar street in our city center.
2. கும்பகோணத்தில் ரெட் கிராஸ் மற்றும் யுவகேந்திரா ஏற்பாடு செய்திருந்த ரத்த தான முகாமை சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
கும்பகோணத்தில் சுவாமிஜி உரையாற்றிய போர்ட்டர் டவுன் ஹாலில் அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது.
3. கும்பகோணம் அரசுப் பெண்கள் கலைக் கல்லூரியில் ‘தன்னம்பிக்கை தரும் சுவாமி விவேகானந்தர்' என்ற தலைப்பில் சுவாமி விமூர்த்தானந்தர் உரையாற்றினார். 200 மாணவிகளுக்கு சுவாமிஜியின் வரலாறு நூல்கள் வழங்கப்பட்டன.
2. Swami Vimurtananda inaugurated the blood donation camp organized by Red Cross and Yuvakendra at Kumbakonam. Swamiji's statue was honored at the Porter Town Hall where Swamiji was speaking at Kumbakonam.
3. Swami Vimurtananda gave a talk on ' Vivekananda gives self-confidence' at Kumbakonam Government Arts College for women. 200 students were given books on Swamiji's history.
4. திருத்துறைப்பூண்டியில் மடத்தின் சார்பில் நடைபெறும் கிராமக் குழந்தைகளுக்கான இலவச டியூஷன் சென்டர் மாணவர்களின் ஊர்வலம்.
4. Procession of students of Free Tuition Center for village children organized by Math at Thiruthuraipoondi.
5. வலங்கைமானில், 50 ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது வாகனத்தில் சுவாமிஜியின் திருவுருவப்படத்தை அலங்கரித்து வைத்துத் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விவேகானந்தரின் நூல்களை (ஆளுக்கு 10 நூல்கள் விதம்) வழங்கி அறிமுகம் செய்தனர்.
5. At Valangaiman, 50 auto drivers decorated their vehicles with Swamiji's portrait and introduced Vivekananda's books
(10 books per auto driver) to their customers.
6. நமது மடத்தின் கிராம மையத்தின் மூலம் கிராமங்களுக்குச் சென்று அங்கு பல இல்லங்களில் வீடு தோறும் விவேகானந்தரைக் கொண்டாடினோம்.
6. Celebrated Vivekananda from house to house in villages through the village center of our Math.
7. தஞ்சாவூரில் மகர் நோன்பு சாவடியில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சுவாமி மாத்ருசேவானந்தரின் பஜனும் சுவாமி விமூர்த்தானந்தரின் உபன்யாசமும் நிகழ்ந்தன. (ஸ்ரீ பாலாஜி பாகவதர் நிகழ்ச்சிகளுக்கு வர முடியவில்லை).
7. Bhajan by Swami Mathrusevananda and Upanyasam by Swami Vimurtananda took place at Sri Prasanna Venkatesa Perumal Temple in Makarnonpu Sawadi, Thanjavur.
தேசிய இளைஞர் தினத் தொடர் கொண்டாட்டம் - 13.1.23- வெள்ளி.
* தஞ்சையில் ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயா தொடக்கப் பள்ளியின் 215 மாணவ மாணவிகளுக்கு சுவாமிஜியின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கரும்பு வழங்கினோம்.
* தஞ்சாவூர், ஸ்ரீகணேசா வித்யாசாலா நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு மாணவர்களுக்கு சுவாமிஜியின் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
* திருத்துறைப்பூண்டியில் விஸ்வகொத்தமங்கலம் பகுதியில் உள்ள இலவச டியூஷன் சென்டர் மாணவ மாணவிகளின் இல்லங்களில் வீடுதோறும் விவேகானந்தர் கொண்டாடப்பட்டது.
* தஞ்சாவூரில் பங்காரு காமாட்சி அம்மன் ஆலயத்தில் சுவாமி மாத்ருசேவானந்தரின் சிறப்பு பஜனையும் சுவாமி விமூர்த்தானந்தரின் உபன்யாசமும் நடைபெற்றன.
National Youth Day Series Celebration- 13.1.23- Friday
* Distributed sugarcane to 215 poor students of Sri Ramakrishna Vidyalaya Primary School in Thanjavur on the occasion of Swamiji's Jayanti.
* National Youth Day was celebrated at Sri Ganesa Vidyasala Middle School, Thanjavur, and books were distributed to the students.
* ‘Vivekananda to Each Home’ was celebrated in the homes of the students of the Free Tuition Center in Vishwakothamangalam, Thiruthaurapoondi.
* Bhajan by Swami Mathrusevananda and an upanyasam by Swami Vimurtananda were held at Bangaru Kamachi Amman Temple in Thanjavur.
தேசிய இளைஞர் தினத் தொடர்விழா - ஓவியத் திருவிழாவில் பரிசு பெற்ற ஓவியங்கள்.
தஞ்சையில் 20 பள்ளிகளின் 400 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட சுவாமி விவேகானந்தர் ஓவியத் திருவிழா 11.01.23 அன்று நடைபெற்றது. அதில் பரிசு பெற்ற ஓவியங்களை நீங்கள் காண்பதற்கு.....
National Youth Day Series of Celebration - Swami Vivekananda Painting Festival prize-winning drawing.
400 students attended the Swami Vivekananda Painting Festival from 20 schools from Thanjavur. Take a couple of minutes to check out this link, to see the prize-winning drawing.
தேசிய இளைஞர் தினத் தொடர் விழா - 16.1.23- திங்கட்கிழமை.
தஞ்சாவூர் மகர்நோன்புச்சாவடியில் உள்ள சுவாமி விவேகானந்தா சேவா சமிதி பல்வேறு நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த சமிதி நேற்று விவேகானந்தர் ஜெயந்தியைக் கொண்டாடியது. சுவாமி விமூர்த்தானந்தர் சிறப்புரை நிகழ்த்தினார்.
அதே பகுதியில் உள்ளூர் மக்களின் பொங்கல் திருவிழா ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடப்பட்டது. அவர்களிடம் பேசும்போது ‘இந்த உற்சாகம் ஒரு நாள் உற்சாகமாக இல்லாமல் ஒவ்வொரு நாளும் இந்த உற்சாகம் தொடரட்டும் என்று கூறினோம். சினி கதாநாயகர் தரும் உற்சாகம் சில மணி நேரங்களுக்கு இருக்கும். விவேகானந்தர் தரும் உண்மையான உற்சாகமோ என்றும் நிலைத்திருக்கும். அது உன் திறமையை உனக்குக் காட்டும். உலகிற்கு உன் பெருமையைக் காட்டும் என்றெல்லாம் அவர்களிடம் கூறியபோது அமைதியுடன் கேட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தேசிய இளைஞர் தினத் தொடர் கொண்டாட்டங்களில் நிறைவு விழா- 21.1.23- சனிக்கிழமை.
கடந்த 20 நாட்களாக ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் பல்வேறு இடங்களில் நிகழ்த்தி வந்த சுவாமி விவேகானந்தரின் பிறந்த தின விழா மற்றும் இளைஞர் தின விழாவின் நிறைவு நிகழ்ச்சி கோவை கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
விழாவில் டாக்டர். சத்தியகுமார் சிறப்புரை நிகழ்த்தினார். சுவாமி விமூர்த்தானந்தரின் உற்சாக உரை இளைஞர்களை ஊக்கப்படுத்தியது.
இந்தக் கல்லூரியும் நமது மடமும் இணைந்து இணைய தளம் மூலமாக கட்டுரை போட்டி ஒன்றை நடத்தியது. 1500 பேர் பங்கு கொண்ட அந்தப் போட்டியின் பரிசளிப்பு விழாவும் இன்று நடைபெற்றது.