RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Spiritual Retreat for Devotees on July 01 & 02 - 2023

10.08.23 03:44 PM By thanjavur

இந்தச் சேவையை இன்று செய்தோம்! - 25.6.23

ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பக்தர்களுக்கான அந்தர்யோகம் நிகழ்ச்சி பற்றிய முன்னேற்பாடு கூட்டம் தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் இன்று நிகழ்ந்தது.

அந்தர்யோகத்தில் 80 பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். இனி வர விரும்பும் அன்பர்களுக்கு ஒரு சில மாதங்களுக்குப் பிறகு தனியாக நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்த அந்தர்யோகம் நம் பக்தர்களுக்கு ஒரு புதிய ஆன்மீக உத்வேகத்தைத் தந்தருள வேண்டும் என்று தெய்வத்திருமூவரை வேண்டிக் கொள்கிறோம்.
Spiritual Retreat Meeting on 25.06.2023
இன்று இவ்வாறு சேவை செய்தோம் - 1.7.23 - சனிக்கிழமை

பக்தர்களுக்கான அந்தர்யோகம் இரண்டு தினங்கள் நிகழ்ச்சி தஞ்சை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் இன்று தொடங்கியது. சுமார் 75 பக்தர்கள் இதில் பங்கேற்றனர். 

சுவாமி அபவர்கானந்தர், சுவாமி பரமசுகானந்தர் மற்றும் சுவாமி விமூர்த்தானந்தரின் சிறப்புரைகள் இடம் பெற்றன. 

மாலையில் கிராம மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மையத்தின் அருகே ஓடும்  வடவாற்றின் கரையில் ஸ்ரீ சாரதாம்மா படித்துறை மற்றும் சுவாமி விவேகானந்தர் சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டன. மாரியம்மன் கோவில் சுற்று வட்டாரப் பகுதியில் குழந்தைகளுக்கான பூங்காக்கள் இல்லை. அந்தக் குறை இன்று நிவர்த்தி செய்யப்பட்டது.


Today's Service - 1.7.23 - Saturday

A two-day spiritual retreat for devotees began today at the Thanjavur, Sri Ramakrishna Math. About 75 devotees participated in it.

Swami Apavargananda, Swami Paramasukhananda and Swami Vimurtananda gave speeches.

Special programs were held in the village center in the evening.  Sri Sarathamma bathing ghat and Swami Vivekananda Children Park were opened on the banks of a river which flows near the centre. This is the first park for children in the surrounding area of ​​Mariamman temple.
Spiritual Retreat on 01.07.2023
இன்று இந்தச் சேவை செய்தோம்- 2.7.23- ஞாயிற்றுக்கிழமை

யோகப் பயிற்சிகள், சிறப்பு பூஜை, ஸ்ரீராமகிருஷ்ண ஹோமம், சிறப்புரைகள், புஷ்பார்ச்சனை, ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம், மனதை உருக்கும் பஜனைகள் மற்றும் பக்திப் பரவசமான திவ்ய நாம சங்கீர்த்தனத்துடன் பக்தர்களுக்கான இரண்டு தின அந்தர்யோகம் சிறப்பாக நடந்தேறியது. 

The two-day spiritual retreat for the devotees was well attended with yoga exercises, special pooja, Sri Ramakrishna Homam, discourses, Pushparchana, Sri Brahadheeswar temple darshan, mind-melting bhajans and devotional Divya Nama Sankirthanam.
Spiritual Retreat on02.07.2023

தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடம் நடத்திய அந்தர்யோகம் நிகழ்ச்சியில் தவத்திரு கௌதமானந்தஜி மகராஜ் வழங்கிய அருளுரை.

thanjavur