இன்றைய சேவை- 20.9.22- செவ்வாய்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேலம், ராமகிருஷ்ண மிஷன் மூலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவாமி விமூர்த்தானந்தர்.
*சேலம் ஆசிரமத்தின் சார்பில் ஏழை சிறுவர் சிறுமியருக்கு நடத்தப்படும் இலவச டியூஷன் சென்டரில்...
வாழ்க்கையில் வெற்றி பெற இணக்கம் அதாவது சுமுகமாக இருப்பது மிக அவசியமான ஒன்று. அது நான்கு நிலைகளில் அடையப்பட வேண்டியது.
1. நமக்குள் நாமே உடல் மனம் புத்தி ஆகியவற்றுடன் இணக்கமாக இருப்பது.
2. நாம் மற்றவர்களுடன் சமுதாயத்தில் இணக்கமாக இருப்பது.
3. இயற்கையுடன் ஒருவர் இணக்கமாக இருப்பது.
4. இறைவனுடன் பிரியமாக, இணக்கமாக அவரது அருளைப் பெறும் நிலையில் இருப்பது.
இந்த நான்கு இணக்கமான உறவுகளை வணக்கத்துடன் எப்படி வளர்த்துக் கொள்வது என்பதைப் பற்றி சேலம், ஜெயராம் கல்லூரி Vivekananda study Circle மாணவ மாணவிகளிடம் உரையாற்ற முடிந்தது.