Navarathri Celebration - 2026

20.10.26 08:06 PM - By thanjavur

நவராத்திரி விழா – முதல் நாள் - 12.10.26 – திங்கட்கிழமை

* அன்னை பராசக்தியின் திருவருளை வேண்டி நவராத்திரி விழா மங்கலமாகத் தொடங்கியது!
* ஸ்ரீ சீதலா மகாமாரி வேத சிவகாமி வித்யாலயா மாணவர்களின் மங்கலகரமான வேதகோஷம் முழங்க, நவராத்திரி விழா பக்திப் பரவசத்துடன் இனிதே தொடங்கியது.
* திரு. ஸ்ரீதர் ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டார்.
* திருமதி விஜயலட்சுமி பக்தியுடன் ஸ்ரீ தேவி மகாத்மிய பாராயணமும் சிறப்புப் பூஜையும் செய்து அன்னையை வழிபட்டார். 
* மாலையில் கிராம மக்களின் பக்திபூர்வமான பங்கேற்புடன் சிறப்பாகத் தொடர்ந்தது.
* கிராம மக்கள் பக்தியுடன் முளைப்பாரி சுமந்து வந்து, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சன்னதியில் சமர்ப்பித்து வழிபட்டனர்.
* நிகழ்வில் பங்கேற்ற கிராம மக்கள் அனைவருக்கும் புதிய பாய்கள் மடத்தின் பிரசாதமாக வழங்கப்பட்டன.
* நமது சிவாஜி நகர் நகர மையத்தில் குழந்தைகள் இனிய பக்திப் பாடல்களைப் பாடினர்.
* ஸித்தன்வாழுர் திருமதி காயத்ரி ராஜகோபாலன், ‘அம்பாளுக்கு உகந்த அடியவர்கள்’ என்ற தலைப்பில் ஆழமான அருமையான உபன்யாசம் நிகழ்த்தி, பக்தர்களை மகிழ்வித்தார்.

NAVARATRI CELEBRATIONS - Day 1 - 12.10.26

Vivekananda Empowerment Centre:
* Vedic chanting, Rudrabhishekam, Devi Mahatmyam Parayanam, Mulaipari procession by villagers and distribution of new mats.

City Centre:
* Children's devotional songs and a discourse on Devotees Dear to the Divine Mother by Smt. Gayathri Rajagopalan.
First day of Navratri - 12.10.26
நவராத்திரி விழா - இரண்டாம் நாள்   - மாலை-  13.10.26, 

* சிவாஜி நகர் நகர மையத்தில் கணேஷா வித்யாசாலா நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுவாமி விவேகானந்தரின் 
* வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நாடகமாக நடத்தினார்கள். 
* விவேகானந்தா மேம்பாட்டு மையத்தில் ஸித்தன்வாழூர் திருமதி. காயத்ரி ராஜகோபாலன் புன்னைநல்லூர் மாரியம்மன் மகிமை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். 

NAVARATRI CELEBRATIONS - Day 2 - 13.10.26

Vivekananda Empowerment Centre:
* Discourse on the glory of Punnainallur Mariamman by Smt. Gayathri Rajagopalan.

City Centre:
* Cultural programmes and a drama on Swami Vivekananda by Ganesha Vidyasala students.
Navratri Second Day - 13.10.26
நவராத்திரி விழா – மூன்றாம் நாள் மாலை நிகழ்ச்சிகள் – 14.10.2026

* நமது சிவாஜி நகர் நகர மையத்தில், ஜெயஸ்வராலயா இசைப் பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள் பக்திப் பாடல்களைப் பாடி, அன்னை பராசக்தியைப் போற்றினர்.

* விவேகானந்தர் மேம்பாட்டு மையத்தில், அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைப் போற்றும் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம் பக்திபூர்வமாக நடைபெற்றது.

NAVARATRI CELEBRATIONS - Day 3 - 14.10.26

Vivekananda Empowerment Centre:
* Sri Lalita Sahasranama Parayanam.

City Centre:
* Devotional songs by Jaiswaralaya Music School students.
Navaratri festival third day – 14.10.26
நவராத்திரித் திருவிழா – நான்காம் நாள் - 15.10.26 – வியாழக்கிழமை

🌸 விவேகானந்தர் மேம்பாட்டு மையத்தில்:

🌷 கிராம மக்கள் 60 பேர் பக்தியுடன் கலந்துகொண்ட திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.  சங்கல்பத்துடன் தொடங்கிய பூஜையில், அம்பிகையின் திருநாமங்களைப் போற்றி, திருவிளக்கேற்றி வழிபட்டனர்.

🌷 எளிய கிராம மக்களின் பக்தியைக் கண்ட பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அவர்களுக்கு நிச்சயம் அருள்பாலித்திருப்பார்!

🌸 நகர மையத்தில்:

🌷 கமலா சுப்பிரமணியம் பள்ளி மாணவ, மாணவிகள் நவராத்திரியின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளைச் சிறப்பாக வழங்கினர்.

🌷 தங்கள் கலைத்திறமைகளை வெளிப்படுத்திய மாணவச் செல்வங்கள், பரிசுகளையும் பெற்றனர்; பக்தியையும் வளர்த்துக்கொண்டனர்!

NAVARATRI CELEBRATIONS - Day 4 - 15.10.26

Vivekananda Empowerment Centre:

* Thiruvilakku Puja with 60 villagers.

City Centre:

* Navaratri cultural programmes by Kamala Subramaniam School students and prize distribution.
Navratri Fourth Day - 15.10.26
🌺 நவராத்திரி விழா – ஐந்தாம் நாள் - 16.10.26, வெள்ளிக்கிழமை

🌸 சிவாஜி நகர் – நகர மையத்தில்...

🌹 மகாலட்சுமி தேவியின் அருளைப் போற்றும் இந்நன்னாளில், பக்தர்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டனர்.

🌹 அன்னை அரவிந்தர் இசைப்பள்ளி மாணவர்கள் பக்திப் பாடல்களையும் பாடி, அனைவரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தினர்.

🌸 விவேகானந்தர் மேம்பாட்டு மையத்தில்...

🌹 JRK மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவச் செல்வங்கள், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கைச் சம்பவங்களையும் உபதேசங்களையும் நாடகம், நடனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் அழகாக எடுத்துரைத்து, அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தனர்.

🌹 வெற்றி விநாயகர் வழிபாட்டு மன்றப் பெண்மணிகள், இனிய பக்திப் பாடல்களையும் பாரம்பரியக் கோலாட்டத்தையும் நிகழ்த்தி, விழாவுக்குப் பக்தியும் கலையழகும் சேர்த்தனர்.

NAVARATRI CELEBRATIONS - Day 5 - 16.10.26

Vivekananda Empowerment Centre:

* Cultural programmes on Sri Ramakrishna and Swami Vivekananda by JRK School students; bhajans and Kolattam by Vetri Vinayagar Worship Association.

City Centre:

* Mahalakshmi Thiruvilakku Puja and devotional songs by Annai Aravindar Music School.
Navaratri Fifth Day - 16.10.26
நவராத்திரி விழா – ஆறாம் நாள்-17.10.26, சனிக்கிழமை

🌸 விவேகானந்தர் மேம்பாட்டு மையம், மாரியம்மன் கோவில்:

🌷 ஸ்ரீ நிருத்தியாஞ்சலி நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கிய சிறப்பான நாட்டிய நிகழ்ச்சி, இன்று குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் பக்திபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டது.

🌸 நகர மையம், சிவாஜி நகர்:

🌷 ஆர்.ஆர். மியூசிக் அகாடமி மாணவச் செல்வங்கள் வழங்கிய இனிய பக்திப் பாடல்கள், அன்னை பராசக்திக்குப் பக்தி மலர்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.

NAVARATRI CELEBRATIONS - Day 6 - 17.10.26

Vivekananda Empowerment Centre:

* Classical dance offering by Sri Nrithyanjali Natya Kalalaya students.

City Centre:

* Devotional songs by students of R. R. Music Academy.

Navratri 6th Day Events - 17.10.26
🌺 நவராத்திரி விழா – ஏழாம் நாள் - 18.10.2026, ஞாயிற்றுக்கிழமை

🌸 விவேகானந்தா மேம்பாட்டு மையம், மாரியம்மன் கோவில்:

பாரம்பரியமிக்க மெலட்டூர் பாகவத மேளா மரபில், திருமதி பிரியம்வதா முரளியின் மாணவிகள் திருமூலர் சரித்திரம் என்ற நாட்டிய நாடகத்தைச் சிறப்பாக வழங்கினர்.

🌸 சிவாஜி நகர் நகர மையம்:

* திருமதி சுகன்யாவின் மாணவ, மாணவிகள் ருத்ரன் இசைப்பள்ளி சார்பில் இனிய இசை நிகழ்ச்சியை வழங்கினர்.
* நிருத்தியாஞ்சலி நாட்டிய கலாலய மாணவிகள் பரதநாட்டிய நிகழ்ச்சியைச் சிறப்பாக வழங்கினர்.

🌺 NAVARATRI CELEBRATIONS – DAY 7 - 18.10.2026, Sunday

🌸 Vivekananda Empowerment Centre:

The students of Smt. Priyamvada Murali presented a beautiful dance drama titled “Thirumoolar Charitram”, in the rich traditional style of the renowned Melattur Bhagavata Mela.


🌸 City Centre:

🌷 The students of Smt. Suganya, representing Rudran Music School, delighted the audience with a melodious musical performance.

🌷 The students of Nrithyanjali Natya Kalalaya presented a graceful Bharatanatyam performance, adding devotional charm to the celebrations.

Seventh day of Navratri - 18.10.26
🌺 நவராத்திரி விழா – எட்டாம் நாள்: மகா அஷ்டமி - 19.10.2026, திங்கட்கிழமை

🌷 மகா அஷ்டமியை முன்னிட்டு, காலையில் அன்னை துர்க்கைக்கும், அன்னையின் திருநாமத்தைப் போற்றியபடியே வாழ்ந்த பகவான் ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் பக்தியுடன் பூஜையும் ஹோமமும் நடைபெற்றன.

🌷 பக்தர்கள் ஹோமத்தில் வில்வ இலைகளை ஆகுதியாகச் சமர்ப்பித்தும், புஷ்பாஞ்சலி செய்தும் அன்னையின் அருளைப் பெற்றனர்.

🌷 மாலையில், வின்னர் மல்டி மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் யோகாசனங்களையும் வீர விளையாட்டுகளையும் நிகழ்த்தி அன்னை துர்க்கையை மகிழ்வித்தனர்.

🌺 NAVARATRI CELEBRATIONS – DAY 8: MAHA ASHTAMI - 19.10.2026, Monday


🌷 On the auspicious occasion of Maha Ashtami, special Puja and Homa were performed in the morning with deep devotion to Divine Mother Durga and Bhagavan Sri Ramakrishna, who lived his entire life glorifying the Divine Mother.


🌷 Devotees offered Bilva leaves into the sacred fire and performed Pushpanjali, seeking the blessings of the Divine Mother.


🌷 In the evening, 40 students of Winner Multi Martial Arts Academy presented impressive Yoga and Martial Arts demonstrations, offering their talents as a tribute to Divine Mother Durga.


Maha Ashtami on Navratri - 19.10.26

thanjavur