Navarathri Celebration - 2024_copy

02.10.25 01:30 PM - By thanjavur

23.09.25, செவ்வாய்க்கிழமை -நவராத்திரி முதல் நாள் 

*நகர மையத்தில் காலை தேவி மாஹாத்மிய பாராயணம். 

*மாலை கணேசா வித்யாசாலா நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள்

*பங்காரு காமாட்சியம்மன் பஜன் மண்டலியின் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. 

கிராம மையத்தில் காலையில் 

*ருத்ர பாராயணமும் 
*பிற்பகல் தேவி மகாத்மிய பாராயணமும் நடைபெற்றது
*மாலை கோலாட்டம் நிகழ்ச்சி -ஒரு சிறு வீடியோவைக் காணுங்கள்.

First Day - 23.09.25
City Centre

· Devi Mahatmyam chanting.

· Cultural programs by the students of Ganesha Vidyasala Middle School.

· Recitation of Lalita Sahasranama.


Village Empowerment Centre

· Sri Rudra Puja and Parayanam.

· Devi Mahatmyam chanting.

· Kolattam (folk dance) program.

First day of Navratri - 23.09.2025
24.09.25, புதன் -நவராத்திரி 2- ஆம் நாள் விழா

🌷 கிராம மையத்தில் கோவிந்தபுரம் விட்டல்தாஸ் மஹராஜின் சிஷ்யர் ஶ்ரீகோபால்தாஸ் மஹராஜ் "பக்தர்களின் சரிதம்" என்ற தலைப்பில் உபன்யாசமும் பஜனையும் செய்து அனைவரையும் ஆனந்தத்தில் திளைக்கச் செய்தார்.

🌷நகர மையத்தில் கமலா சுப்ரமணியம் செகண்டரி பள்ளி (CBSC) மாணவர்கள் வாமன அவதார நாடகமும், பரதநாட்டியம் மற்றும் பக்தி பாடல்கள் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்கள்.

🌷 ஸ்ரீராமகிருஷ்ணருக்கு ஆரதிக்குப் பிறகு ஆரோகணம் மியூசிக் அகடமி மாணவர்கள் பக்தி பாடல்களைச் சிறப்பாகப் பாடினார்கள்.

2nd Day - 24.09.25
City Centre
· The students of Kamala Subramaniam Secondary School presented drama on Vamana Avatar, and Bharatanatyam.

Village Empowerment Centre
· Sri Gopaldas Maharaj, a disciple of Govindapuram Vittaldas Maharaj, delivered a discourse on “Lives of Devotees”.
Navratri Second Day - 24.09.2025
25.09.25- வியாழக்கிழமை - நவராத்திரி 3 - ஆம் நாள் விழா

🌻 பார்வதி தேவியின் தவத்தைப் போற்றும் வகையில் யோகப் பயிற்சியும், ஸ்ரீ துர்க்கா தேவியின் வீரத்தைப் பறைசாற்றும் விதமாக சிலம்பம், கராத்தே போன்ற பலவிதமான வீர விளையாட்டுகள் வின்னர் மல்டிமியூரல் அகாடமி மாணவர்கள்  நகர மையத்தில் செய்து அசத்தினார்கள். 

🌻 சரஸ்வதி தேவியின் அருளைப் போற்றும் வகையில், திருவையாறு அரசு இசைக் கல்லூரி மாணவர்கள்  கிராம மையத்தில் இசை விருந்து அளித்தார்கள். 

25.09.25, Thursday – Navaratri 3rd Day Festival

🌻 To glorify the valor of Goddess Durga, students of Winner Multimural Academy presented various martial arts such as Silambam, Yogasanas and Karate at the city centre, delighting the audience.

🌻 To honor the grace of Goddess Saraswati, students of the Government Music College, Thiruvaiyaru, offered a musical feast at the village centre.
Navaratri festival third day – 25.09.2025
26.09.25- வெள்ளிக்கிழமை - நவராத்திரி  4 - ஆம் நாள் விழா

🌸 கிராம மையத்தில் வெற்றி விநாயகர் வழிபாட்டு மன்ற குழுவினர் லலிதா சகஸ்ரநாம பாராயணம் மற்றும் பக்தி பாடல்கள் பாடினார்கள். 

🌸"நம்மோடு நாமாக அன்னை இருக்கிறார் "என்ற தலைப்பில் செல்வி.உமையாள் ஸ்ரீசாரதாதேவி பக்தர்களுக்கு எப்படி அருள் செய்கிறார் என்பதை அழகாக எடுத்துரைத்தார். 

🌸 நகர மையத்தில் ஸ்ரீமகாலட்சுமி தேவியைப் போற்றி திருவிளக்கு பூஜையைப் பக்தர்கள் செய்தார்கள். 

Friday, 26.09.25 – Navaratri 4th Day Festival

🌸 At the Village Empowerment Centre, members of the Vetri Vinayakar Worship Committee recited the Lalitha Sahasranamam and sang devotional songs.

🌸 Under the theme “Mother is with us as one of our own”, Ms. Umayal, Trichy beautifully explained how Holy Mother Sri Sarada Devi showers her grace upon devotees.

🌸 At the City Centre, devotees performed the Thiruvilakku Puja to Goddess Sri Mahalakshmi.
Navratri Fourth Day- 26.09.2025
27.09.25, சனிக்கிழமை - நவராத்திரி 5 -ஆம் நாள் விழா

🍀 கலைமகள் சரஸ்வதி தேவியை இன்று நல்ல வகையில் ஆராதனை செய்ய முடிந்தது. 

நகர மையத்தில், மாணவ மாணவிகள் தாங்கள் வருங்கால சிறந்த ஓவியர்கள் என்பதை நிரூபித்தார்கள். பத்து சிறந்த ஓவியங்களுக்கும் ஐந்து அடுத்த நிலை ஓவியங்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

🍀 கிராம மையத்தில் இன்று விஷ்ணம்பேட்டை சகோதரிகள் பக்தி பாடல்களை தெய்வத்திருமூவருக்குச் சமர்ப்பித்தார்கள். 

🍀 ருத்ரன் இசைப்பள்ளி மாணவர்கள் வீணை, கீ-போர்டு, வயலின், மிருதங்கம் போன்ற பல்வேறு இசைக்கருவிகள் மற்றும் வாய்ப்பாட்டு மூலமும் இசை விருந்தே படைத்தார்கள். 

5th Day - 27.09.25
City Centre
· Held drawing competition. Prizes were awarded to ten best paintings and five merit-level paintings.

Village Empowerment Centre

· Bhajans.

· The students of Rudran Music School presented a musical feast through Veena, Keyboard, Violin, Mridangam, along with vocal performances.


Navaratri Fifth Day - 27.09.2025
இன்றைய சேவை - 28.09.25, ஞாயிற்றுக்கிழமை - நவராத்திரி 6 -ஆம் நாள் விழா

* காலையில் நகர மையத்தில் நரக இடர்களைக் களையும் வகையில் ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதியினர் சிறப்பாகப் பஜன் பாடினார்கள். 

* நகர மையத்தில இன்று விஷ்ணம்பேட்டை சகோதரிகள் செல்விகள் மதுமிதா மற்றும் சந்தோஷி பக்திப் பாடல்களைப் பாடி ஸ்ரீராமகிருஷ்ணரை மகிழ்வித்தார்கள். 

* இரண்டு மையங்களிலும் ஶ்ரீ நிருத்தியாஞ்சலி நாட்டிய கலாலயம் மாணவிகள் நடனமாடி நவராத்திரி விழாவைச் சிறப்பித்தார்கள். கிராம மையத்தின் குழந்தைகள் 'அயிகிரி நந்தினி...' ஸ்தோத்திரத்திற்கு அழகாகக் கோலாட்டம் ஆடினார்கள்.

Today’s Service – 28.09.25, Sunday – Navaratri 6th Day Festival

In the morning, members of the Sri Sathya Sai Seva Samithi sang special bhajans at the City Centre.

At the City Centre, Ms. Madhumitha and Ms. Santhoshi, sang devotional songs and delighted Sri Ramakrishna.

At both centres, the students of Sri Nrityanjali Natya Kalalayam performed dances and enhanced the Navaratri festival. At the Village Centre, children beautifully performed Kolattam to the hymn “Ayigiri Nandini…”.
Navratri 6th Day Events - 28.09.2025
நவராத்திரி 7 - ஆம் நாள் விழா - 29.09.25,  திங்கட்கிழமை  - 

துர்க்கா தேவியை வழிபட மனிதனின் உடலில் தெம்பும், மனதில் வீரமும் ஈரமும் அவசியம். இந்த உணர்வை நமது இளைஞர்களிடமும் சிறார்களிடமும் ஊட்டுவதற்காக சிலம்பப் பயிற்சி மாணவர்களும், பக்தி பாடல்களை பாடிய குழந்தைகளும் இன்று நமது இரண்டு மையங்களிலும் வந்து நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

Navaratri – 7th Day Celebration

To worship Goddess Durga, one must possess strength in the body, courage and compassion in the mind. To inspire these noble qualities among our youth and children, silambam (martial arts) students and children who sang devotional songs presented performances today at our two centres.
Seventh day of Navratri 29.09.2025
நவராத்திரியில் எட்டாவது தின ஆராதனைகள் மற்றும் சேவைகள் -30.9.25- செவ்வாய் 

எந்த தேவியையோ, தெய்வத்தையோ வணங்கினாலும் அந்த ஆவிர்பாவம் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடத்தில் வந்து அமைந்து விடும் என்று அவரது வரலாறு கூறுகிறது. 

இன்று நமது மடத்தில் துர்க்கை அன்னைக்கு ஷோடச உபசார பூஜை நடந்தது. துர்க்கா தேவி ஸ்ரீ ராமகிருஷ்ணரின் திருவுருவில் அந்த பூஜையை நிச்சயம் ஏற்றுக் கொண்டிருப்பார்.

பூஜை - ஹோமம் - பஜனை தீபாராதனை- பிரார்த்தனையுடன் புஷ்பாஞ்சலி - பிரசாதம்- அனைவருக்கும் அன்னையின் அருள்.

*மகாலட்சுமியை ஆராதிக்க கிராம மேம்பாட்டு மையத்தில் விளக்கு பூஜை 

*சரஸ்வதி தேவியை போற்றி 'தேவியின் அருளில் நாம் இருக்கிறோம்' என்ற அருமையான உபந்யாசம் ஸ்ரீராம் சாஸ்திரிகள் வழங்கினார்.

*ஜெயஸ்வராலயாவின்அருமையான குழந்தைகள் எளிமையாக பாடினார்கள்.

*கையும் மெய்யும் நிறைய பிரசாதம் தினமும் வழங்கப்படுகிறது.


Navaratri – Eighth Day Worship & Services – 30.09.25, Tuesday

Today at our Math, a Shodasha Upachara Puja was performed for Mother Durga. 

Puja – Homa – Bhajan – Deeparadhana – Prayer with Pushpanjali – Prasadam – and the grace of the Mother for everyone.

To worship Mahalakshmi, a Lamp Puja was conducted at the Village Empowerment Centre.

To honour Goddess Saraswati, Sri Ram Sastri delivered a beautiful discourse on the theme “We are living under the grace of the Goddess.”

The little children of Jayaswaralaya sang simple songs.

Every day, plentiful prasadam is being distributed.
Maha Ashtami on Navratri -30.09.2025
நவராத்திரி – ஒன்பதாவது நாள் - காலை - (01.10.25) – பாட்டுப் போட்டி

இன்று நமது கிராம மேம்பாட்டு மையத்தில் பாட்டுப் போட்டி நடைபெற்றது. சரஸ்வதி தேவியை மகிழ்விக்கும் விதமாக பல மாணவ, மாணவிகள் பக்தி மற்றும் தேசபக்தி பாடல்களைப் பாடி அனைவரையும் கவர்ந்தனர். இத்தகைய போட்டிகள் குழந்தைகளுக்கு:

*நினைவாற்றலை அதிகரிக்கின்றன
*பொதுவெளியில் பேசும் தைரியத்தை வளர்க்கின்றன
*சலிப்பு தரும் சினிமா பாடல்களின் ஈர்ப்பைக் குறைக்கின்றன
*நம் சமயத்தின் பக்திப் பாடல்களையும், தேசபக்திப் பாடல்களையும் மனதில் பதிய வைக்கின்றன.

பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகளும் பிரசாதமும் வழங்கப்பட்டு விழா சிறப்பாக நிறைவுற்றது.

Navaratri – Ninth Day Morning (01.10.25) – Singing Competition

Today at our Village Empowerment Centre, a singing competition was held. Many boys and girls sang devotional and patriotic songs to please Goddess Saraswati, and captivated everyone.

Such competitions help children to:

* Increase their memory power
* Develop courage to speak in public
* Reduce attraction to meaningless cinema songs
* Imprint devotional and patriotic songs of our tradition in their hearts
* All participants were given prizes and prasadam, and the celebration concluded gracefully.
நவராத்திரி 9-வது நாள் - மாலை - 01.10.25 – தேவிகளின் அம்சமான அன்னையரைப் போற்றும் நிகழ்ச்சி

* ஒரே குடும்பத்தில் தாத்தா தந்தை மகன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து வாழ்ந்து குடும்பத்தைப் பேணுவது இந்துக் கூட்டுக் குடும்பங்களின் சிறப்பம்சங்களில் ஒன்று. 

குழந்தைகளுக்குத் தங்களது தாய் தந்தையரை மதிப்பது மட்டுமல்லாமல், போற்றி பூஜிக்கவும் உகந்தவர்கள் என்பதைக் காண்பிக்கக் குழந்தைகளின் அன்னையரை ஆராதிக்கும் நிகழ்ச்சியை நகர மையத்தில் நடத்தினோம். 

* நல்லாசிரியர் திரு. பாலகுரு ஐயா கிராம மையத்தில் 'சரஸ்வதி தேவியின் அருளைப் பெற்றவர்கள்' பற்றிச் சொற்பொழிவாற்றினார்.

Navaratri 9th Day Evening – 01.10.25 –Honouring Mothers as the Manifestation of the Divine Mother
* One of the special features of Hindu joint families is that three generations—grandfather, father, and son—live together harmoniously, preserving and nurturing the family.
To show that mothers are not only worthy of respect by their children but also fit to be adored, we conducted a programme at the City Centre where the mothers of children were honoured.

* At the Village Centre, Sri. Balaguru delivered a lecture on “Those Blessed by the Grace of Goddess Saraswati.”
நவராத்திரி 9-வது நாள் - 01.10.25 – தேவிகளின் அம்சமான அன்னையரைப் போற்றும் நிகழ்ச்சி
நவராத்திரி 10-வது நாள் - 02.10.25 

அக்ஷராப்யாசம், குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பாரம்பரிய புனிதமான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

Navaratri – 10th Day – 02.10.25

Today, the traditional and sacred ceremony of Aksharabhyasam (initiation into learning for children) was conducted.
நவராத்திரி 10-வது நாள் - 02.10.25

thanjavur