RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Navarathri Celebration - 2024

13.10.24 04:19 PM By thanjavur

நவராத்திரி முதல் நாள் - 04.10.2024, வெள்ளிக்கிழமை 

* காலை பேராசிரியர் ரகுராமனின் வேத பாராயணம்

* மாலை ஸ்ரீதேவி மகாத்மியம்  பாராயணம் மற்றும் பூஜை

* மன்னார்குடி ஜீயர் சுவாமிகளின் ஆசியுரையில், மக்கள் அதிகாலை எழுந்து தங்கள் கடமைகளை நன்கு செய்யும்போது மகாலட்சுமி நிரந்தரமாக நம்மோடு வாசம் செய்வாள் என்பது போன்ற கருத்துக்களை எடுத்துரைத்தார்.

* கிராம மையத்தில் நவராத்திரியின் சிறப்பு பற்றிய சொற்பொழிவு.

Navaratri First Day - 04.10.2024, Friday

* Morning: Vedic recitation by Prof. Raghuraman.
* Evening: Recitation of Sridevi Mahatmyam and Puja.
*In the blessings of Mannargudi Jeeyar Swami, he emphasized that when people wake up early and perform their duties diligently, Goddess Mahalakshmi will permanently reside with them.
*Lecture on the significance of Navaratri at the village center.
First day of Navratri - 04.10.2024
நவராத்திரி இரண்டாம் நாள் விழா - 05.10.24 - சனிக்கிழமை 

*நவராத்திரியில் கலைமகள் மலைமகள் அலைமகள் ஆகியோரைப் போற்றுவது நம் சம்பிரதாயம். அதன்படி இன்று மலலமகளின் உறுதியைப் பெற வேண்டி மாணவ மாணவிகள் தனியாகவும் கூட்டாகவும் சிறப்பாக யோகப் பயிற்சி செய்து காட்டினார்கள்.

*கணேஷ வித்யாசாலா பள்ளி மாணவர்கள் சுவாமி விவேகானந்தரைப் பற்றிய நாடகம், பாடல்கள், அருமையான பேச்சு போன்ற நிகழ்ச்சியை நடத்தி ஸ்ரீராமகிருஷ்ணருக்குக் காணிக்கை ஆக்கினார்கள். 

*செல்வி வர்ஷா புவனேஸ்வரி,  மீனாக்ஷி கல்யாணத்தை நேரில் தரிசனம் செய்தது போல் கதாகாலட்சேபம் செய்தார். 

Navaratri Second Day Celebration - 05.10.24 - Saturday

* It is our tradition during Navaratri to honor the goddesses Saraswati (goddess of arts), Parvati (goddess of mountains), and Lakshmi (goddess of wealth). Accordingly, today students individually and collectively performed excellent yoga practices seeking the strength and blessings of goddess Parvati.

* Students of Ganesha Vidyasala school presented a program that included a play, songs, and inspiring speeches about Swami Vivekananda. Miss Varsha Bhuvaneshwari gave a Kathakalakshepam, narrating the Meenakshi Kalyanam as if witnessing it in person.
Navratri Second Day - 05.10.2024
நவராத்திரி திருவிழா மூன்றாம் நாள் - 6.10.24 - ஞாயிற்றுக்கிழமை 

* வீரத்தைப் போற்றும் வகையில் பாரம்பரிய வீர விளையாட்டுக்கள் இன்றும் நடத்தப் பெற்றன.

*நமது பாரம்பரியப் பெருமையைப் போற்றிக் காப்பாற்றும் வகையில் நாட்டியாஞ்சலி நடந்தது. 

*சுவாமி விவேகானந்தர் நாட்டிய நாடகம் அருமையாக நிகழ்ந்தது.

*கிராம மையத்தில் கிராம மக்களின் நலத்திற்காக விளக்கு பூஜை நிகழ்த்தப் பெற்றது.

Navaratri festival third day – 6.10.24 – Sunday 

* Traditional heroic games. 
*Natyanjali was held to honor our traditional pride. 
*Swami Vivekananda's Natya Natak was done beautifully. 
*Lamp Puja was performed in the village center for the welfare of the villagers. 
Navaratri festival third day – 06.10.2024
நவராத்திரி நான்காம் நாள்- 07.10.24 - திங்கட்கிழமை

* சோமவாரமான இன்று சிவபெருமானை மகிழ்விக்கும் விதமாக அப்பர் மன்றத்தினர் தேவார திருவாசகம் ஓதினார்கள். 

* திருவையாறு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி மாணவ மாணவியர் வீணை மற்றும் வயலின் கச்சேரி, வாய்ப்பாட்டு  மிருதங்க இசையுடன் அருமையாக அம்பாளுக்கு இன்னிசை சமர்ப்பணம் செய்தார்கள். 

* நல்லாசிரியர் பாலகுரு ஐயா கிராம மையத்தில், 'எல்லா பெண்களும் தேவியே' என்ற தலைப்பில் உரையாற்றினார். 

Navratri Fourth Day- 07.10.24 - Monday 

* Devara Thiruvasakam was chanted to please Lord Shiva. 
Thiruvaiyaru, Tamil Nadu Government College of Music students performed a veena and violin and music concerts.
Sri Balaguru addressed the children at the village center on the topic 'All women are goddesses'. 
Navratri Fourth Day- 07.10.2024
நவராத்திரி ஐந்தாம் நாள் - 08.10.24, செவ்வாய்க்கிழமை 

* மஹாலக்ஷ்மி திருவிளக்கில் வாசம் செய்கிறாள் என்பதற்கு இணங்க திருவிளக்கு பூஜை நடைபெற்றது. உங்களுக்காக ஒரு சிறு வீடியோ கிளிப்பிங் இணைக்கப்பட்டுள்ளது.

குத்தாலம், மங்களம் சக்தி சமிதி குழுவினர் குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் மகிழும்படி ஹரி, ராம, கிருஷ்ண, விட்டல நாமங்கள்  புரந்தரதாசரின் அபங்கம் மற்றும் பக்திப் பாடல்களைப் பாடினார்கள். 

* கிராம மையத்தில், தவள விநாயகர் மகளிர் குழு பஜனை மற்றும் குழந்தைகளின் பாராயணம் நடைபெற்றது.

Navaratri Fifth Day - 08.10.24, Tuesday 

* Mahalakshmi resides in lamp hence the Thiruvilakku Puja is performed. A small video is for your perusal.

Kuthalam, Mangalam Shakti Samiti group sang wonderful Bhajan and Namakeertan. 

* At the village centre, the Thavala Vinayagar women's group held a bhajan and children's recital. 
Navaratri Fifth Day - 08.10.2024
நவராத்திரி 6-ம் நாள் நிகழ்ச்சிகள் - 09.10.24- புதன்கிழமை

* அன்னை ஶ்ரீ அரவிந்தர் சங்கீத வித்யாலயா மாணவ மாணவியரின் பக்திப் பாடல்கள். 

* தொன்மையான கலையான பொம்மலாட்டத்தைச் சிறப்பாக நடத்தி வரும் கலைமாமணி எம். சோமசுந்தரம் குழுவினரின் "பக்த பிரகலாதன்" பொம்மலாட்டம் நடைபெற்றது. 

* கிராம மையத்தில் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.

Navratri 6th Day Events - 09.10.24

* Devotional songs by students of Annai Sri Aurobindo Sangeetha Vidyalaya. 
* "Bhakta Prahalada" puppet show of Sri Gananathar Natak Sabha was held. 
* A bhajan program at the village center. 
Navratri 6th Day Events - 09.10.2024
நவராத்திரியில் ஏழாம் நாள் 10.10.24

*ஆரோகணம் மியூசிக் அகடமி திருமதி சரண்யா குழுவினரின் இசை நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

*தொன்றுதொட்ட நமது பாரம்பரியத்தின்படி, தாய் தந்தையரை வழிபடும் வகையில், குழந்தைகள் பெற்றோருக்குப் பூஜை செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

*கிராம மையத்தில் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்யப் பெற்றது.

Seventh day of Navratri 10.10.24

* Arohanam Music Academy Smt. Saranya performed a musical performance.
* According to our time-honoured tradition, children worshiped their parents. 
* Sri Lalitha Sahasranama was recited at the village center. 
Seventh day of Navratri 10.10.24
நவராத்திரியில் மகா அஷ்டமி -11.10.24 

*காலையில் துர்க்கை அன்னைக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் சிறப்பு பூஜையும் ஹோமமும் பஜனையும் புஷ்பாஞ்சலியும் நடைபெற்றன. 

* மாலையில் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணமும்  குழந்தைகளின் பஜனையும் ஸித்தன்வாழூர் ஸ்ரீராம் சாஸ்திரிகளின் உபன்யாசமும் சிறப்பாக நடந்தேறின.

*கிராம மையத்தில், மிக எளிமையாக குழந்தைகளே தயாரித்து அரங்கேற்றிய 'அயிகிரி நந்தினி....' நாட்டியத்தை நீங்களும் கண்டு களியுங்கள்.

Maha Ashtami on Navratri -11.10.24 

*In the morning, special puja, homam, bhajan and pushpanjali were performed to Mother Durga and Sri Ramakrishna. 

* In the evening, Srilalitha Sahasranamam Parayanam, Children's Bhajan and Upanyasam by Sitthanvazur Sriram Shastris went well. 

*At the village centre, enjoy the 'Aigiri Nandini...' dance which was very simply prepared and staged by the children.
Maha Ashtami on Navratri -11.10.2024
நவராத்திரியில் இன்றைய மாணவர் சேவை- பக்தி பாடல் பாடும் போட்டி மற்றும் ஓவியப் போட்டி 12.10.24-

ஆஹா, நமது மாணவ மாணவிகளிடத்தில் என்னென்ன திறமைகள் அடங்கியுள்ளன!!!

அந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும் சரஸ்வதி தேவியின் அருளைப் பெறுவதற்கும் மாணவர்களுக்கு இன்று பக்திப் பாடல்கள் பாடும் போட்டியும் ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டது.

கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சுவாமி விவேகானந்தரின் திருவுருவப்படமும், நூல்களும் வழங்கப்பட்டன. 

சிறப்பாகப் பாடிய 17 பேருக்கும், சிறந்த 14 ஓவியங்களுக்கும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. 

Today's Student Service on Navratri - Devotional Songs Singing Competition and Painting Competition on 12.10.24

Wow, what talents are there in our students!!! A singing competition and a painting competition were held today for the students to develop their skills and seek the grace of Goddess Saraswati. 

All the students were given a portrait of Swami Vivekananda and books. Cash prizes were awarded to 17 best singers and 14 best paintings.
Today's Student Service on Navratri - Devotional Songs Singing Competition and Painting Competition on 12.10.24
நவராத்திரியில் இன்றைய சேவை- 13.10.24

* விஜயதசமி நன்னாளில் நமது மடத்தின் நகர மற்றும் கிராம மையங்களில் குழந்தைகளுக்கு அக்ஷராப்யாசம் செய்விக்கப்பட்டது. தெய்வ சந்நிதியில் பாரம்பரிய முறையில் வாழையிலையில் நெல் பரப்பி, அதில் ஓங்காரம் மற்றும் அக்ஷரங்களை எழுதும் பாக்கியத்தைக் குழந்தைகள் பெற்றார்கள். அக்ஷராப்யாசம் நிகழ்ச்சியில் சரஸ்வதி தேவியின் அருளைப் பெற்றவர்களாக குழந்தைகள் நடந்து கொண்டது இனிய காட்சி. அதனை நீங்களும் காண விருப்பமா? இந்த லிங்கில் கிளிக் செய்யவும்.

*கிராம மையத்தில் முளைப்பாரியை காவேரியில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முளைப்பாரி வைத்தல் என்பது நுண்ணுயிர்களை, நுண்ணூட்டச் சத்துகளைச் செடிகளில் வளர்த்து பின்னர் அதனை நீர் நிலைகளில் சேர்க்கும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மிக்க ஒரு சடங்கு ஆகும். முளைப்பாரி செடியாக நீரில் கரைந்தாலும், நுண்ணுயிர் சத்தாக அதில் சேர்கிறது.
நவராத்திரியில் இன்றைய சேவை- 13.10.24

thanjavur